(9.4.1995 ஆனந்த விகடனில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் “வாழ்வே தவமாக” எனும் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது.) அண்ணனும் தங்கையும் ஒருவரோடொருவர் வாக்குவாதம் செய்துகொள்ளும் போது தூள் பறக்காத குறைதான். அதிலும் ஆண்-பெண் சமத்துவம், பெண்களின் அடிமைப்படுத்தப்பட்டுள்ள நிலை ஆகியவை பற்றி இருவரும் சண்டை போடத் தொடங்கினால், அந்தச் சண்டை கிட்டத்தட்ட அடிதடியில் முடியக் கூடிய நிலை உருவாகும். அன்றும் அப்படித்தான். அர்த்தமற்ற உணர்ச்சி வசப்பட்டு அசட்டுத்தனமாக நடந்து கொள்ளுகிறவர்கள் பெண்கள்தான் என்று அவன் […]
குணா குறுந்தொகை யாரும் இல்லைத் தானே கள்வன்,தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?தினைத்தாள் அன்ன சிறு பசுங்காலஒழுகு நீர் ஆரல் பார்க்கும்குருகும் உண்டு,தான் மணந்த ஞான்றே. தெளிவு “சாவு கிராக்கி. கார்ல வந்தா பறக்ரா மாதிரி நெனப்பா. சைடுல பாக்க மாட்ட” − காரின் வெளியிலிருந்து கேட்ட குரல். தவறு தம்மீதும் என்று தெரிந்தும் தெள்ளத்தெளிவாய் அடுத்தவர் மீது திருப்புதலும் ஒரு சாமர்த்தியம். காரில் அருகில் அமர்ந்திருந்த அருந்ததி உணர்ந்தாள், காரை ஓட்டும் பார்கவி ஒரு […]
ரமணி ஜெய்ஷங்கர் படம் என்றால் சீனாவிற்கு உயிர். தலைமுடியை கோபுரம் மாதிரி மேலெழும்ப வாரிவிட்டுப் பின் நுனியை மெல்லச் சுருட்டிக் கீழிழுத்து நெற்றியின் நடுவில் விட்டுக்கொள்வான். அது காற்றில் ஆடாவிட்டாலும் சும்மாவாவது தலையை அடிக்கடி தள்ளிவிட்டுக்கொண்டு, இடது தோள் சற்றே சாய கையை வீசி அவன் நடந்து வருவது, அப்படியே ஜெய்ஷங்கர் நடந்து வருவது போலவே இருக்கும். பெரியவனான பின், உதட்டின் மேல் மிகக் குறைந்தபட்ச தூரத்தில், மூக்கின் கீழ்க் கரையில் மிக தூரத்தில் நாணல் வரைந்தது […]
ஸிந்துஜா மூங்கில்காரருக்கும் ஈயக்காரருக்கும் இடையே ஆறு வித்தியாசங்கள் – நிஜமாகவே ஆறுதான் – இருக்கின்றன என்று கதை லிஸ்ட் போடுகிறது. அவர்களின் தொழில், இருப்பிடம், வாழ்வு என்று வித்தியாசங்கள் பல. அவ்வப்போது பார்த்துக் கொள்ளுகையில் க்ஷேம லாப விசாரமெல்லாம் நடக்கும். ஆனால் திடீரென்று இருவருக்குள்ளும் பகை மூண்டு விடுகிறது. அடுத்தவர்கள் என்பவர்கள் எதற்கு இருக்கிறார்கள்? இப்படிக் குளிர் காய்வதே ஓர் லட்சியமெனச் சுற்றி வருகையில்? நாட்டாண்மைக்குமுத்திரை ஸ்டாம்பு விற்கிறதும், கோர்ட்டு, சாசனம் மனு எழுதிக் கொடுக்கிறதும்தான் வயிற்றுப பிழைப்பு. ஆனால் முக்கிய வேலை அவருக்கு நாட்டாண்மை. மனிதர், […]
21.11.2020 அழகியசிங்கர் டாக்டர் சம்பத் என்ற புதுமைப்பித்தன் கதை ஒரு துப்பறியும் கதை. இதை அவர் எழுதியிருக்கும் விதம் சிறப்பாக உள்ளது. படிக்கும் போது நமக்கும் இப்படியெல்லாம் ஒரு கதை எழுதிப் பார்க்க வேண்டுமென்று தோன்றுகிறது. ரெங்கசாமி என்பவர் உல்லாசனி சபையின் தமிழ் கண்டக்கடர் (போதகர்). அவர் வருஷாந்திர கொண்டாட்டத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நாடகம் ராவ்சாகேப் சம்பந்த முதலியார் எழுதிய லீலாவதி – சுலோசனா நாடகம். ரெங்கசாமி கூற்றாக இந்தக் கதை சொல்லப்படுகிறது. இந்த நாடகம் அரங்கேறிய அன்று சபேசய்யர் சுலோசனையாகவும், குற்றாலம் பிள்ளை லீலாவதியாகவும் வேஷம் தரித்திருந்தார்கள். நாடகம் மெதுவாக நகர்ந்தது. லீலாவதி தன் தங்கைக்குபாலில் விஷம் […]
தமிழில் : ட்டி. ஆர். நடராஜன் 1. வழுவமைதி ரீத்தா தோவே ஒரு புத்தகத்திலிருந்து எடுத்து எனக்கு அந்தப் பெயரைச் சூட்டினார்கள். அது எந்தப் புத்தகமென்று எனக்குத் தெரியாது. புத்தக அலமாரியில் அடுக்கப்பட்டிருந்த ஒவ்வொரு புத்தகத்தைப் பற்றியும் அந்த மாமனிதர் அறிந்தவராயிருந்தார். நான் பிறந்த அந்த நல்ல நாளன்று அவர் மறைந்து போனார். அன்று நாடே துக்கம் அனுஷ்டித்தது. இதை நான் பலமுறை புரஃபஸர்களிடமிருந்தும், விவசாயிகளிடமிருந்தும், மாணவர்களிடமிருந்தும் கேட்டிருக்கிறேன். சிலசமயங்களில் மிக மரியாதையுடன் உச்சரிக்கப்பட்ட பெயர். இருவருக்கு மேல் இருக்கும் […]
முனைவா் த. அமுதா கௌரவ விரிவுரையாளா் தமிழ்த்துறை முத்துரங்கம் அரசினா் கலைக்கல்லூரி(தன்னாட்சி) வேலூர் – 2 புலனம் 9677380122 damudha1976@gmail.com முன்னுரை தமிழல் தோன்றிய முதல் காப்பியம் சிலப்பதிகாரம். இது சாதராண வணிகக் குடிமக்களை மையமாகக் கொண்டு படைக்கப்பட்ட காவியம் ஐம்பெருங்காப்பியங்களுள் முதன்மைக் காப்பியமாகும். கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் தோன்றியவையாகும். இந்நூலில் அரசியலில் அறம், தமிழரின் வாழ்க்கை முறை, மக்களின் அறவொழக்கங்கள், வரலாற்றுச் செய்திகள் ஆகியவை காணப்படுகின்றன. “தமிழன்னையின் காலணியாம் செம்பொற்சிலம்பு“ என்று போற்றப்படும் […]
நல்ல கெட்டவரும் கெட்ட நல்லவரும் நாமும் இருமலையுச்சிகளில் இரும்புக்கம்பங்கள் ஆழ ஊன்றி இடைப்பிளவில் இன்னொருவனுடைய அன்புக்குரியவளின் நீண்டடர்ந்த கூந்தலிழைகளை இரண்டாகப் பிடித்திழுத்து கழுத்து முறியுமோ என்ற கவலையின்றி கட்டித்தொங்கவிட்டிருந்தவன் திரும்பத்திரும்ப அந்தப் பெண்ணிடம் தன்னைக் காதலிக்கும்படி வற்புறுத்திக்கொண்டிருந்ததைக் காரணம் காட்டி அவனை கயவனிலிருந்து அற்புதக்காதலனாக்கிவிட்டபின் கைக்குக் கிடைத்த அவள் காதலனை நல்லவன் என்றே சொல்லிக்கொண்டிருந்தால் பின் வில்லனுக்கு எங்கே போவது? தோற்றதாலேயே ஒருவனைத் தூயவனாக்கித் தோள்மீது தூக்கிக்கொண்டாடுபவர்களுக்கு வெற்றியாளன் எப்போதுமே வெட்கங்கெட்டவன்; அக்கிரமக்காரன்; அராஜகவாதி. பாதிப்பாதியாய் இருந்தாலும் […]