நிம்மதி தேடி

This entry is part 25 of 31 in the series 4 நவம்பர் 2012

மு.கோபி சரபோஜி செருப்பை எங்கு மறைவாய் வைப்பது? அர்ச்சனையை யார் பெயருக்கு செய்வது? உடைக்க வாங்கிய தேங்காய் எப்படி இருக்கப்போகிறது? தட்டோடு நிற்பவர்களுக்கு தர எவ்வளவு சில்லரை இருக்கிறது? இப்படியான குழப்பங்களோடு நிம்மதி தேடி சந்நிதி நுழைந்ததும் அர்ச்சகரின் குரல் ஒழித்தது “நடை சாத்தி நாழியாயிற்று” – என்று! மு.கோபி சரபோஜி சிங்கப்பூர்.

உல(தி)ராத காயங்கள்

This entry is part 24 of 31 in the series 4 நவம்பர் 2012

நேற்கொழு தாசன் வெற்றிடமொன்றில் நிரம்பிக்கொண்டிருந்த நினைவுகளின் வெதும்பல்கள் விளிம்பு நிலையொன்றில் முனகிக்கிடக்கும் பகலின் நிர்வாணத்தின் முன் கூனிக்குறுகிக்கிடக்கும் அவை இரவுப்போர்வைகளில் கூர்ப்படைந்து அதீதமான பிரவாகத்துடன் ஓரங்களை தின்னத்தொடங்கும். இரைமுகரும் எலியொன்றின் அச்சம் கலந்த கரியகண்களை, இரையாகும் தவளையொன்றின் ஈன அவல ஒலிகளை உள்ளெழுப்பி உணர்வுகளை சிதைக்கும். தகனமொன்றின் நாற்றங்களை பின்னான எச்சங்களை அருகிருக்கும் இலைகளில் படிந்திருக்கும் புகைகுறியீடுகளை விலகாதிருக்கும் மெல்லிய வெம்மையினை பரப்பி சூனிய தனிமையினை பிறப்பிக்கும். கொஞ்சம் கொஞ்சமாக உருவேற்றும் அந்த துர்தேவதைகளின் கொலுசொலிகள் நாளைமீதான […]

“சபாஷ், பூக்குட்டி…!”

This entry is part 23 of 31 in the series 4 நவம்பர் 2012

      கதை சொல்லு…கதை சொல்லு…என்று அரித்தெடுத்த பேத்தி அஸ்வினியையே வைத்த கண் வாங்காமல் பார்த்தார் ராமகிருஷ்ணன்.     அன்று ஞாயிற்றுக் கிழமை. அவரைப் பொறுத்தவரை அன்று மட்டும்தான் பேத்தியோடு பேச முடியும், விளையாட முடியும். சனிக்கிழமை விடுமுறை நாளில் கூட ஆபீஸ் சென்று விடுவார் அவர். அதென்னவோ அப்படிப் போனால்தான் மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது அவருக்கு.     வாரா வாரம் ஏதேனும் கதைகளைத் தயார் செய்து விடுவார்தான். அல்லது நூலகத்திலிருந்து எடுத்து வரும் புத்தகத்திலிருந்து ஒன்றிரண்டு […]

சார் .. தந்தி..

This entry is part 22 of 31 in the series 4 நவம்பர் 2012

  ஐயோ தந்தியா.. என்று மக்கள் அதிர்ந்த காலம் உண்டு. தந்தி என்றாலே ஏதோ கெட்ட செய்தி என்று பயம். பொதுவாக யாராவது சீரியஸ் என்றால் மட்டும் தந்தி கொடுக்கும் பழக்கம் இருந்திருக்கிறது.   எஸ்வி சேகரின் நாடகத்தில் ( அல்வான்னு நினைக்கிறேன்). சார் தந்தி என்று 4 முறை தந்தி வரும். ஐந்தாவதா ஒரு ஆள் சார் தந்தி என்று சொல்வார். அட..அது தினத்தந்தின்னு சொல்லி பேப்பர்ல ந்யூஸ் படிக்க ஆரம்பிச்சிடுவார் எஸ்வி சேகர். இப்ப […]

நம்பிக்கை ஒளி! (5)

This entry is part 21 of 31 in the series 4 நவம்பர் 2012

  பணிக்குச் செல்லும் பரபரப்பு காலை நேரத்தில் வாடிக்கையான காட்சிதான் என்றாலும், வீட்டிலுள்ள அனைவரும் ஒரு சேர ஒரே நேரத்தில் கிளம்ப வேண்டுமென்றால் கொஞ்சம் கூடுதல் டென்சன் தான். அதுவும் ஒரு குளியலறை, ஒரு கழிவறை என்று இருக்கும் வீடுகளில் கேட்கவே வேண்டாம். நீ முந்தி, நான் முந்தி என்று ஒரே கூத்துதான்.   சாவதானமாக உட்கார்ந்து துண்டு முடிந்துகொண்டு, காலையில் எப்.எம் ரேடியோவில் ஆரம்பித்து பின்பு டீவி சீரியல் ஒன்று பாக்கியில்லாமல் பார்த்துக் கொண்டிருந்த பரமுவா […]

அருந்தும் கலை

This entry is part 19 of 31 in the series 4 நவம்பர் 2012

அந்த எலுமிச்சம் பழங்களை வாங்கிவந்தேன் மொத்தம் மூன்று தந்தார்கள் தீராச் சண்டைக்கும் கசப்புக்கும் முகம்திருப்பி தெருவில் போனதற்கும் இன்னும் என்னென்னவோ பொருமல்களுக்கும் பிறகு அவர்கள் கொடுத்தவை இவை மேசையில் உள்ள அந்தப் பழங்களை இன்னும் வீட்டில் யாருமே தொடவில்லை அப்பழங்களுக்குள்ளிருக்கும் சாறு பற்றி கூசும்படி ஒரு சந்தேகம் அவர்கள் வீட்டுப் பழங்களுமா குற்றவாளி? பார்த்துக் கொண்டேயிருக்கும்போது பழங்களும் பார்த்தபடியே இருப்பதாக எண்ணம் குறுக்கிட சட்டென எதிரி வீட்டுக்காரன் முகத்தை மஞ்சளாய் பழத்தோலில் மனம் வரைகிறது. கொஞ்சம்சர்க்கரை கலந்து […]

நினைவுகளின் சுவட்டில் (103)

This entry is part 18 of 31 in the series 4 நவம்பர் 2012

  சினிமா பார்த்துவிட்டு ஹோடடலுக்குத் திரும்பி வந்தேன். பயப்படும்படி ஒன்றும் நேரவில்லை. ஹோட்டலும் ரூமும் தான் பத்திரமாகத் தான் இருந்தன. பூட்டு உடைக்கப்படவில்லை. உடைப்பதற்கு அறையில் ஏதும் இல்லை. முதல் தடவையாக தனியாக வந்துள்ள அனுபவமும் தான் சற்று பயப்பட வைத்துள்ளது என்று மனம் சமாதானம் சொன்னாலும் ஹோட்டல் ஒன்றும் அப்படி சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் சூழ்நிலையில் இல்லை. இருப்பினும் படுத்துக்கொண்டேன். இரவு முதலில் கொஞ்ச நேரம் மனம் அமைதியின்றி கழிந்தாலும் எப்படியோ தூக்கம் வந்து கவலையைத் தீர்த்தது. […]

நாசாவின் விண்ணுளவி புலர்ச்சி [DAWN] வக்கிரக் கோள் வெஸ்டாவைச் சுற்றி விட்டு செரிஸ் குள்ளக் கோள் நோக்கிச் செல்கிறது.

This entry is part 17 of 31 in the series 4 நவம்பர் 2012

  (NASA Space Probe Dawn is leaving Vesta to the next Asteroid Ceres) (கட்டுரை 2) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நிலவினில் தடம் வைத்தார் நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் ! செவ்வாய்க் கோள் ஆராயத் தளவுளவி சிலவற்றை நாசாவும் ஈசாவும் உளவ இறக்கின ! வால்மீன் வயிற்றில் அடித்து தூசிகளை விண்ணில் ஆராய்ந்தார் நாசா விஞ்ஞானிகள் ! வால்மீனை விரட்டிச் சென்று தூசியைப் பற்றிக் காசினியில் இறக்கினார் ! வக்கிரக் கோள் ஒன்றின் மாதிரி […]

மணலும் நுரையும்-2

This entry is part 16 of 31 in the series 4 நவம்பர் 2012

  பவள சங்கரி     Sand and foam – Khalil Gibran (2)   மணலும், நுரையும் (2)   வெகு நேரம், அந்த, பருவ மாற்றங்களும்  அறியாமல், அமைதியாக, எகிப்தின் தூசிப்படலத்தினுள் கிடந்தேன் யான். பின்னர் அந்த நிசாந்தகன் எம்மை உயிர்த்தெழச் செய்ததால், யான் எழுந்து அந்த நைல் நதிக்கரையோரம் பகலோடு பாடிக்கொண்டும், நிசியோடு சுவனம் கொண்டும் நடந்தேன். மேலும் தற்போது அந்த பகலவனோ, தம் ஓராயிரம் பாதக்கிரணங்கள் கொண்டு எம்மை ஏறி மிதித்துச் […]

வீழ்தலின் நிழல்

This entry is part 15 of 31 in the series 4 நவம்பர் 2012

    ஒரு கோட்டினைப் போலவும் பூதாகரமானதாகவும் மாறி மாறி எதிரில் விழுமது ஒளி சூழ்ந்த உயரத்திலிருந்து குதிக்கும்போது கூடவே வந்தது பின்னர் வீழ்ந்ததோடு சேர்ந்து ஒரு புள்ளியில் ஐக்கியமாகி ஒன்றாய்க் குவிந்ததும் உயிரைப் போல காணாமல்போன நிழலில் குருதியொட்டவே இல்லை   – எம்.ரிஷான் ஷெரீப்