திண்ணை தளத்தில் கருத்துக்களை எழுதுவது சமீபத்தில் முடியாததாகியிருக்கிறது. இதற்கு காரணம் wordpress 4.0 இந்த பிரச்னையை தீர்க்க முயற்சித்துகொண்டிருக்கிறோம். அதுவரைக்கும், உங்கள் கருத்துக்களை editor@thinnai.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். அத்னை தொகுத்து இங்கே கடிதங்கள் பகுதியில் பிரசுரிக்கிறோம் சிரமத்துக்கு வருந்துகிறோம். -திண்ணை
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.space.com/23792-china-moon-probe-off-and-flying-video.html http://www.youtube.com/watch?feature=player_embedded&v=aYwAdHJjiAY http://www.space.com/23976-raw-video-china-s-moon-landing-and-rover-deployment.html +++++++++++++++++ சைனாவின் இரண்டாம் விண்ணுளவி சந்திரனைச் சுற்றியது ! மூன்றாம் விண்கப்பல் முதலாக நிலவில் இறக்கிய தோர் தள வுளவி ! அதிலிருந்து நகர்ந்திடும் தளவூர்தி ! ஆசிய முன்னோடியாய்ச் சைனாவின் இரு தீரர் அண்டவெளிப் பயணம் செய்து விண்வெளியில் நீந்தி வெற்றி மாலை சூடி மண்மீது கால் வைத்தார் மறுபடியும் ! அமெரிக்காவின் விண்வெளி வீரர்கள் போல் விண்சிமிழில் […]
College of Engineering Guindy Global Alumni Meet 2015: அறிவிப்பு. கோவிந்த் கோச்சா அறிவிப்பு. இந்தியாவின் பழமை வாய்ந்த மற்றும் தமிழகத்தின் முதல் பொறியியற் கல்லூரியானதும், 220 வருடங்கள் உருண்டோடிய கிண்டி பொறியியற் கல்லூரியின் CEGAM 2015 ஜனவரி 4ம் தேதி 2015 , அன்று அக்கல்லூரியில் கொண்டாடப்படுகிறது. செம்மை நிற வண்ணத்தில் கம்பீரமாக நிற்கும் அந்தக் கல்லூரி முன்பு நில அளவை நிலையமாகவும் இருந்துள்ளது. அதிலிருந்து தான் இந்தியாவின் பல வரைபடங்கள் வரையப்பட்டன. பெங்களூரின் […]
ரமணியின் முக மாற்றம் விளைவித்த திகைப்பு மாறாத பார்வையை நீக்கிக் கொள்ளாமல், வேலுமணி அவனைப் பார்த்தவர் பார்த்தபடியே நின்றார். ”நீங்களாவே என்னை அழைச்சுட்டுப் போக வந்தீங்களா, இல்லாட்டி, அவர் சொல்லி வந்தீங்களா?” என்று அவன் கேட்டதும், வேலுமணி, “நானாத்தான் வந்தேன், ரமணி.. முதல்ல நீ தங்கியிருக்கிற சேதுரத்தினம் சார் வீட்டுக்குத்தான் போனேன். கதவு பூட்டி யிருந்தது. அதனால, இங்க வந்து பார்க்கலாம்னு வந்தேன்….” என்றார். இதற்குள் ராமரத்தினமும் சேதுரத்தினமும் அங்கு வந்து சேர்ந்துகொண்டார்கள். அவர்கள் இருந்தது […]
–மனஹரன், மலேசியா ‘காரை கொஞ்சம் மெதுவாக்குங்க, அந்த இடம் வந்துட்டும்போல அதோ அந்த வளவுலதான் பள்ளிக்கூடம் இருக்கும்” புஷ்பா டீச்சர்தான் சொல்லிக் கொண்டு வந்தார். புஷ்பாவின் கணவர் வேலு காரின் வேகம் கொஞ்சம் குறைத்தார். பின்னால் உட்கார்ந்திருந்த புஷ்பாவின் அம்மாவும் கொஞ்சம் எட்டிப் பார்த்தார். “ஆமாம் இந்த இடம்தான்” அவரும் தன்னுடன் உட்கார்ந்திருந்த பேரப்பிள்ளைகளிடம் கூறினார். பள்ளியின் பெயர் பலகை கண்ணில் பட்டது. “ஆமாம் இந்தப்பள்ளிதான்” கார் பள்ளியின் முன் நின்றது. அது பள்ளி […]
அ.ப. சுப்பிரமணியன் ஒரு சில ஆண்டுகளுக்கு முன் ஜெர்மனியில் பல நாடுகள் கலந்து கொண்ட ஓர் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இந்த மண்ணுலகம் மாசடைவதைப் பற்றி அதில் ஆய்வு செய்யப்பட்டது. அந்தக் கூட்டத்தின் இறுதியில் “உலகின் எல்லாப் புதிய பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு பாரத வாழ்க்கை முறைதான்” என்று தீர்வு காணப்பட்டது. ”அவரவர் நாடும், உலகமும், இயற்கை வளங்களும் மாந்தர் அனுபவித்து வாழ்வதற்கே” என்று மற்ற நாடுகளெல்லாம் வாழ்ந்த காலத்தில் நமது முன்னோர்கள் மட்டுமே மேற்கூறியவற்றைத் தூய்மையாக வைத்திருந்து […]
ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா சின்னஞ் சிறுவர் மேல்நோக்கிப் பார்ப்பர் கண்குழிந்த வெளுப்பு முகத்தோடு, பார்க்கவே பரிதாபக் காட்சி ! முதுநரை வேதனை மாந்தர் சப்பி நலிவுறச் செய்வர் சிறுவர் தம் கன்னங் களை ! “உமது முதிய உலகம் எமக்குத் துயரளிக்கும்,” என்கிறார் ! எமது பிஞ்சுப் பாதங்கள் சக்தி யற்றுப் போகும் ! எட்டு வைத்த அடிகள் நோகும் சோர்வுண் டாக்கும் ! […]
டாக்டர் உஷா வெங்கட்ராமன் கும்பகோணம் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்த ஒருவைணவ குடும்பத்தின் நான்கு தலைமுறைகளின் ஏறக்குறைய நூறு வருட சம்பவங்களின் அழகாகத் தொகுக்கப்பட்ட நாவல் “ ஆலமரம் “ . ஆசிரியரின் மூன்று வருட கால அயராத உழைப்பின் பயனாக கனிந்த நாவல் பழம். ஒரு சிறந்த நாவல் என்றால் அதன் கதை கதா பாத்திரங்கள் குணாதிச்யங்கள், வசன, மொழிப்பிரயோகம், சம்பவச்சூழ்நிலையின் அமைப்பு, நாவலின் தலைப்பு என இவை எல்லாவற்றையும் கவனத்தில் […]
(உலக நாயகன் கமல் அவர்களின் பிறந்ததின வாழ்த்துக்கவிதை) அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று வெள்ளை மனத்துடன் ஒரு பாற்கடலே அறுபதுகளில் அலையடித்து வந்து அறுபது ஆண்டுகள் காணாமல் போயின. எத்தனை பாத்திரங்கள்? நடிப்பை நிரப்பி தளும்ப தளும்ப தந்தார். குலுங்க குலுங்க சிரிக்க வைப்பதிலும் குன்றில் இட்ட விளக்காக சுடர்ந்தவர். அபிராமியை நாடி நரம்புகளுக்குள் ஊற்றிக்கொண்டு குளித்தவர். அறுத்து ஒட்டிய முகநரம்புகளின் அஷ்டகோணல்களில் ஆயுதம் தாங்க வேண்டிய போரைக்கூட “அன்பே சிவம்” ஆக்கியவர். பம்பாயின் தூசி […]
இடம்: ரங்கையர் வீடு காலம்: மத்தியானம் மணி பனிரெண்டரை உறுப்பினர்: ஜமுனா, மோகன் (சூழ்நிலை: ஜமுனா ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள். அந்நேரத்துக்கு மோகன் அங்கே வருகிறான்) மோகன்: ஜம்னா… ஜம்னா ஜமுனா: யாரது? மோகன்: நான்தான் ! இந்த மழைல ஐஸ்கிரீமா..?. இதென்ன பச்சைக் குழந்தை மாதிரி. ஜமுனா: வழக்கமா வர்ற ஐஸ்கிரீம் வண்டிக்காரன் வந்தான். இன்னிக்கு ஊர்வலமாச்சே. நெறய ஐஸ்கிரீம் விக்கும்னு […]