நடேசன் காந்தியின் நிலத்தில் எங்கள் பயணத்தின் அடுத்த இடம் ராஜ்கோட் நகராக இருந்தது. பிரித்தானியர் காலத்தில் சமஸ்தானத்தின் தலைநகர். அங்கு காந்தியின் தந்தையார் திவானாக இருந்தார். அதுவே காந்தி சிறு வயதில் வாழ்ந்து, இங்கிலாந்து போகும் வரையும் கல்வி கற்ற இடம். அவர் கல்வி கற்ற மேல் நிலைப் பாடசாலையை தற்பொழுது அவரது நினைவிடமாக்கி, அதைக் காந்தியின் வரலாற்று அருங்காட்சியமாக அமைத்திருக்கிறார்கள். இரண்டு மாடி கட்டிடம். அங்கு போனால் அங்குள்ள வரலாற்றின் பகுதிகளை வாசித்தபடியே பல மணி […]
ஜனநேசன் “ சகுனியாய் வந்து வாய்ச்சிருக்கு .. என்று அவனது கைப்பேசியை அவள் விட்டெறிந்தாள்! அவள் எறிதலில் கண்ணகியின் சீற்றம் எதிரொளித்தது! பத்தாயிரம் ரூபாய் செல்லு ,சில்லு சில்லாய் உடைந்து போவது குறித்து கவலை இல்லை! அவளது வாழ்க்கை உடைந்து சிதறிவிடக்கூடாது என்ற பயம் அவளை இப்போது அலைக்கழிக்கிறது. அவளது கணவன் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியர். இவள் ஆரம்பப் பள்ளி ஆசிரியை. ஆசிரிய வாழ்க்கையில் ஓர் அரும்பாடில்லை! என்று பொதுபுத்தியில் பதிந்துள்ள ரீதியில் […]
அழகியசிங்கர் ‘சொல்லப்படாத நிஜங்கள்’ என்ற சிறுகதைத் தொகுப்பிலிருந்து சமீபத்தில் நான் படித்த கதை üபிற்பகல்ý என்ற சா.கந்தசாமியின் கதை. இந்தக் கதையைக் கொஞ்சம் பார்ப்போம்.எளிய மொழிநடையில் சா.க.இந்தக் கதையை எடுத்துச் செல்கிறார். சாரதா அரைநாள் லீவு எழுதிக் கொடுத்துவிட்டு ஆபிஸிலிருந்து வெளியே வருகிறாள். அவளுக்குத் தாங்க முடியாத பல்வலி. ஒருவருக்குப் பல்வலி வந்தால் தாங்க முடியாது. சாரதாவிற்கும் அப்படித்தான். தாங்க முடியவில்லை. பல்வலியோடு அலுவலகத்தில் வேலை பார்க்க முடியாது என்பதால் வீட்டிற்கு வருகிறாள். சாரதாவிற்கு ஏற்படுகிற […]
மஞ்சுளா உயிரின் பேராழத்தில் புதைந்து கொண்டிருக்கும் ரகசியங்களை வாழ்வின் எந்த ஒரு வெம்மையும் தீண்ட முடியாது போகிறது மரணம் இசை தப்பிய ஒரு பாடலை இசைக்கும் ஒரு நொடியில் உயிர் தனது சிறகுகளை விரித்து அதன் நிழலை ஒரு காதலன் காதலியை தழுவுவது போல் தழுவிக் கொள்கிறது தீராது… தீராது அதன் பேராவல் அதன் வெற்றிடங்கள் பிறப்பின் ரகசியங்களால் மீண்டும் மூடப் பட்டு வாழ்வின் போதாமைகளோடு மீண்டுமொரு பயணத்தில் தன்னை இணைத்துக் கொள்கிறது அழிந்தும் அழியாத சுவடுகள் […]
ராசி. அழகப்பன் திரைத்துறையில் இயக்குனர், பாடலாசிரியர், இலக்கியத்தில் கதை , கவிதை , கட்டுரைகள் எழுதுபவர். இத்தொகுப்பு இவரிடைய ஏழாவது கவிதைத்தொகுப்பு. ஒருவர் இருட்டை நேசிக்கிறார் என்றால் அவர் மனம் சற்று வித்தியாசமானதுதான். இதுவே கவிமனம் எனலாம். செல்லும் வழி இருட்டு செல்லும் மனம் இருட்டு சிந்தை அறிவிலும் தனி இருட்டு — என்ற புதுமைப்பித்தன் வரிகளும் ராசி.அழகப்பனுக்குத் தூண்டுகோலாக இருக்கலாம். இத்தொகுப்பில் இருட்டு பற்றிய பல புதிய அழகான கருத்துக்கள் […]
(20.10.1968 ஆனந்த விகடனில் வெளிவந்த கதை. ‘கோபுரமும் பொம்மைகளும்’ எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றுள்ளது.) அலுவலகப் பணியாள் மேசை நாள்காட்டியில் முந்தின நாள் தேதியைப் புரட்டிச் சரியான தேதியை வைத்துச் சென்றான். சுழலும் நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்திருந்த தியாகராஜன் அந்தத் தேதியைப் பார்த்ததும் நிமிர்ந்து உட்கார்ந்தான். ஜனவரி ஒன்பது! ‘இன்று மாலை வழக்கம் போல் சுகந்தாவுக்கு ஏதாவது பரிசுப்பொருள் வாங்கிச் செல்லவேண்டும்.’ சுகந்தாவுக்கும் தனக்கும் திருமணமாகிப் […]
கோ. மன்றவாணன் எழுத்தாளர் வளவ. துரையன் அய்யா அவர்களின் வீட்டுக்குச் சென்றேன். அவருடைய துணைவியார் அலர்மேல் மங்கை அவர்கள் இரு தட்டுகளில் கடலைக் கேக்குகளும் ஓமப் பொடியும் கொண்டுவந்து வைத்தார். சாப்பிட்ட படியே பேசிக் கொண்டிருந்தோம். பேச்சின் இடையே சில நோட்டுப் புத்தகங்களை எடுத்துவந்து காட்டினார். அவர் 1996 முதல் நடத்திவரும் இலக்கியச் சோலை அமைப்பின் வரவு செலவுக் கணக்கு விவரங்களை விடுபாடு ஏதும் இல்லாமல் எழுதி வைத்திருந்தார். பற்றாக்குறை இருக்கும் என்று எண்ணிக் கடைசிப் […]
ப.தனஞ்ஜெயன் ஆலயத்தில் எரியும் சுடரில் தன்னை கருமையாக மாற்றிக்கொண்டது விக்கிரகங்கள் பணக்காரன் வழிபட்டுச் சென்ற இடத்தில் ஒரு ஏழை வழிபாட்டைத் தொடர்கிறான் தெய்வநிலைக்கு விளங்கங்களைக் கூறிக்கொண்ட மனிதனிடம் தன்னை கடவுள் என்றும் பிரபஞ்சத்தை நான்தான் படைத்தேன் என்று தெய்வீகம் சொல்லியதில்லை காடுகளில் கர்ஜிக்கும் சிங்கம் ஒரு நாளும் தன்னை அரசன் என்று சொல்லியதில்லை மழை காற்று எப்படிப் பிறக்கிறது கரு எதற்கு உருவாகிறது எனக் காரணங்களை முன்னிறுத்தினால் இந்த உலக இயக்கத்தை நிறுத்திக்கொள்ள முடியும் மதயானைக் கூட்டத்தில் […]
கரிசல் நாடன் வறியவன் வீட்டு அடுப்பைப் போல வெறுமனே நீண்டு கிடந்திருந்த தண்டவாளங்களின் மீது ட்டுடுக் ட்டுடுக் என ரயில்வண்டிகள் வழக்கம்போல் ஓடத்தொடங்கும் முத்தமிட்டு விருட்டென பிரியும் காதலனைப் போல தரைக்கு முத்தமிட்டு விமானங்கள் மேல் நோக்கிப் பறக்கத் தொடங்கும் வெற்றிலை குதறிய வாய்களை போல கரிவாயுவை உமிழ்ந்தவாறே கனரக வாகனங்கள் இரையத் தொடங்கும் கதைகளில் கவிதைகளில் திரைப்படங்களில் பட்டிமன்றங்களில் திண்ணைகள் என கொரோனா பேசுபொருளாகி கடந்துவந்ததை அசை போட்டு பார்க்க வைக்கும் […]
குணா வாட்டி எடுக்கும் கொரோனா என்னைத் தொட்டதும் என்னவெல்லாம் தோன்றுகிறது. எங்கிருந்து வந்தது தெரியவில்லை. ஆனால் தொற்றிக்கொண்டது. கிரஹப் பிரவேசம் என்று சொன்னதை தட்ட முடியவில்லை. அது தான் காரணம் என்றும் சொல்ல முடியவில்லை. எங்களைத் தவிர அங்கு வந்த யாருக்கும் இல்லை. ஆனால் போய் வந்த மறுநாள் சளி கோத்துக் கொண்டது. எனக்கும், என் உற்றாளுக்கும். அத்துடன் காய்ச்சலும் சேர்ந்து கொண்டது. அதற்கான அத்தனை அறிகுறிகளும். சோதிக்க முகாமிட்டிருக்கிறார்கள் என்ற செய்தி பார்த்ததும் ஒத்தி வைக்க […]