கவிதைகள்

This entry is part 7 of 17 in the series 11 அக்டோபர் 2020

நிழல்                           என்னைப்போலவேஅவனும் கவிதைஎழுதுகிறான் கட்டுரைவரைகிறான் மேடையில்பேசுகிறான் அவனைப்பார்த்தால் நான்பொறாமைப்படுவதுஉண்மையே என்னைப்போலவே கோபப்படுகிறான்லே லேசாகச்சிரிக்கிறான் உறவுகளைநேசிக்கிறான் நட்புகளைநெருங்குகிறான் அவனைப்பார்த்தால் நான்பொறாமைப்படுவதுஉண்மையே அவனும்என்னைப்போலவே மாலதியைநேசிக்கிறான் நாடிவந்தமல்லிகாவை வெறுத்தொதுக்கினான் தேடிச்சென்று புகழடையவிரும்பாதவனை நீயார்எனக்கேட்டேன் நான்தான்உன்நிழல்என்றான் ============================================================================ எழுதுதல்                                 எழுதவேண்டும் ஆமாம்நிறுத்தாமல் எழுதிக்கொண்டே இருக்கவேண்டும். இல்லையேல்உன்னை மறந்துவிடுவார்கள் அதுமட்டுமன்றுஉன்னை மிதித்துஅடித்துப் போட்டுவிடுவார்கள் நீஇருந்தஇடமே தெரியாதபடிக்கு சுவடுகளைஎல்லாம் சுனாமிவந்ததுபோல அழித்துவிடுவார்கள் ஆகவே ஏதாவதுஎழுதிக்கொண்டே இருக்கவேண்டும் புரியவேண்டும்என்பதில்லை புரிந்ததுபோல்எழுதவேண்டும் புரியாததுபோலவும் எழுதவேண்டும். எப்படியோ எழுதிக்கொண்டே இருக்கவேண்டும் உன்னிடத்தைப்பிடிக்க அதோஒருவன்வருகிறான் அவன்வந்துஉன் கையைமுறிப்பதற்குள் எழுது      […]

தேடல் !

This entry is part 6 of 17 in the series 11 அக்டோபர் 2020

கவிதை       என் தேடல் இப்போதும் தொடர்கிறது என்முன் நிற்கிறதா என்னைச் சூழ்ந்திருக்கிறதா அல்லது என்னுள் இருக்கிறதா என் மொழி தேடல் பயனென்று கனிகளெனப் பறித்து வந்தேன் சில கவிதைகளை … அவற்றுள் ஆழ்ந்த இனிப்பெனத் தங்கியது கொஞ்சம் தமிழ் இன்னும் தேடத் தேடப் பொத்திப் பொத்தி மறைத்து வைக்கப்பட்டிருக்கும் வைரங்களென புதுமையும் நயங்களும் படையெடுக்கும் மொழியின் இறுகிய மௌனம் மெல்ல மெல்ல உடைய கவிதை புன்னகை வழியத் தலை காட்டும் …

படித்தோம் சொல்கின்றோம்: நூலகர் நடராஜா செல்வராஜா தொகுத்திருக்கும் ஈழத்தின் தமிழ் நாவலியல் கையேடு

This entry is part 5 of 17 in the series 11 அக்டோபர் 2020

முருகபூபதி பதினாறு   தசாப்தங்களுக்கு  ( 1856 – 2019 ) மேற்பட்ட  காலப்பகுதிகளில் வெளியான ஈழத்தவர் நாவல்கள் பற்றிய அறிமுகம் !                                                                  பல்கலைக்கழகங்கள், ஆவணக் காப்பகங்கள், அரசு சார்பு தேசிய சுவடிகள் திணைக்களங்கள் மேற்கொள்ளவேண்டிய பெறுமதியானதோர் சேவையை, நீண்ட  காலமாக தனியெருவராக சுமந்தவாறு,  ஆக்கபூர்வமாக அயர்ச்சியின்றி இயங்கிவரும் நூலகரும் எனது இனிய இலக்கிய நண்பருமான திரு. நடராஜா செல்வராஜா  அவர்கள் தமது தொடர் உழைப்பின் ஊடாக மற்றும் ஒரு வரவாக ஈழத்தின் தமிழ் நாவலியல் ஆய்வுக்கையேட்டின் […]

பாதி முடிந்த கவிதை

This entry is part 4 of 17 in the series 11 அக்டோபர் 2020

கு.அழகர்சாமி கீழே வீழ்ந்து கொண்டே வெளியின் அகலப் பக்கங்களில், காற்று வீசி அவசரமாய் எழுதும் சருகின் பாதி முடிந்த சாவின் கவிதை முழுதும் எழுதி முடிவதற்குள்- சருகு மண் சேர்ந்து கடைசியாய்க் கண் மூட எழுதி முடிக்க முடியாது- மீதியை எழுத முயன்று முடியாது தோற்றுப் போகும் என் கவிதை. கு.அழகர்சாமி

திரைப்பட வாழ்க்கை

This entry is part 3 of 17 in the series 11 அக்டோபர் 2020

ஆர்யா. கட்டுமானத்துறையில் பொறியியல் பட்டம் பெற்ற புதுமுகம். வேலைச் சந்தைக்குள் நுழையுமுன் ஓர் அரசு வேலையை ஒப்பந்த அடிப்படையில் செய்ய ஆசைப்பட்டார். அறந்தாங்கி முக்கியச் சாலையிலிருந்து காட்டுப் பிராமண வயல் செல்லும் சாலையின் குறுக்கே சிமெண்ட் குழாய் பதிக்கும் வேலையை எடுத்தார். சிறிய வேலைதான். நுணுக்கமாகச் செய்தார். அவரிடம் வேலை பார்த்த ஒரு மூத்த தொழிலாளி சொன்னார். ‘திட்டமிட்டு கச்சிதமா முடிச்சுட்டீங்க தம்பீ’ வேலையை மேற்பார்வை யிடவந்த மேலதிகாரி ‘வெரிகுட்’ என்று குறிப்பு எழுதிவிட்டுச் சென்றார். காசு […]

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 16 -23இ பேருந்தில்

This entry is part 2 of 17 in the series 11 அக்டோபர் 2020

                                                                                                                     எழுதிய / பிரசுரமாகிய காலமோ, இதழ் பெயரோ குறிப்பிடப்படாத பதினைந்து கதைகளை உள்ளடக்கி ஐந்திணைப் பதிப்பகம்  “தி. ஜானகிராமன் படைப்புகள்” என்று இரண்டு தொகுதிகள் கொண்டு வந்தது. அந்தப் பதினைந்து கதைகளுள் ஒன்றுதான்  “23இ பேருந்தில்”  முதல் தடவை வாசிக்கும் போது இந்தச் சிறுகதையில் உள்ளடங்கியிருக்கும் சூக்ஷ் மம் என்ன என்று தெரிவதில்லை. ஒரு பஸ்ஸில் சில பிரயாணிகளுக்கு இடையே நடக்கும் மனஸ்தாபத்தின் காரண காரியங்களையும் அது  எவ்வாறு முடித்து வைக்கப்படுகிறது என்பதையும் பற்றிய கதை போலத் தோற்றமளிக்கிறது. ஆனால் கதையின் முடிவில் தி.ஜா.ஒரு குறிப்பு தருகிறார்.   அதனால் இப்போது இந்தக் கதையை இரண்டாம் முறை, மூன்றாம் முறை படிக்கத் […]

திருநறையூர் நம்பி

This entry is part 1 of 17 in the series 11 அக்டோபர் 2020

                                                                                  பன்னிருஆழ்வார்களுள் ஒருவரான திருமங்கை ஆழ்வார் பல திவ்யதேசங்களுக்கும் சென்றவர். வடக்கே பதரியிலிருந்து தெற்கே திருப்புல்லாணி வரை சென்று அங்கங்கே கோயில் கொண்டிருக்கும் பெருமானைப் பாடிப் பரவி யிருக்கிறார். திருநறையூர் என்ற தலத்திற்கும் செல்கிறார்.அங்கே பெருமான் வீற்றிருக்கும் கட்டுமலைக்கு “சுகந்தகிரி” என்று பெயர். கோச்செங்கணான்                              கோச்செங்கணான் என்ற சோழமன்னன் முற்பிறவியில் சிலந்தியாகப் பிறந்திருந்தான். திருவானைக் காவில் வீற்றிருக்கும் சிவலிங்கத்திற்குத் தன் நூலால் மேல் விதானம்  அமைத்து வந்தது அச்சிலந்தி. அப்பெருமானை ஒரு யானையும் […]