பாலியல் வன்முறைகள் எதனால் என்பதற்கு பல காரணங்கள் முன்வைக்கபடுகின்றன.கடும்தண்டனைகள் அவற்றை வெகுவாக குறைத்து விடும் என்ற வாதமும் பலரால் வைக்கபடுகிறது .கடும் தண்டனை வழங்கப்படும் நாடுகளில் பெண்களின் நிலை மிகமோசமாக ,அடிமைகளின் நிலையை ஒத்திருப்பதையும்,மரண தண்டனை ஒழிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான நாடுகளில் பெண்கள் தைரியமாக பல்வேறு வேலைகளில் பணிபுரிவதையும்,அவர்கள் விருப்பத்திற்கேற்ப வாழும் நிலையை கண்கூடாக பார்க்கும் போது இந்த வாதத்தின் அர்த்தமற்ற தன்மை தெளிவாக தெரிகிறது. டெல்லியில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு அதன் கொடூரத்தால் தன […]
வால்ட் விட்மன் வசனக் கவிதை – 45 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) சுதந்திரமாய் நீயும் நானும் .. ! (1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா நான் உன்னைக் காதலிக்கிறேன் நீ என்னை உனது முழு உடைமையாய் ஆக்கிக் கொள் ! நீயும் நானும் மற்றவரிட மிருந்து விடுபட்டுச் செல்வோம் முற்றிலும் விட்டு விலகி சுதந்திரமாய் விதிகள் யாவும் மீறி ! காற்றிலே இரு கழுகுகள், […]
– சிறகு இரவிச்சந்திரன் பலமுறை பார்த்து சலித்த பாத்திரத்தில், தனுஷ். புதுத் தென்றலாக, நஸ்ரியா. மகுடம் பறி போன ராஜாவாக, இயக்குனர் சற்குணம். நமுட்டுச் சிரிப்பு கூட வராத, நய்யாண்டி. நாற்பது வயதாகும் மூத்த பிள்ளை பரஞ்சோதி (ஸ்ரீமன் ), முப்பத்தெட்டு வயதாகும் இரண்டாவது மகன் பரந்தாமன் ( சத்யன் ), ஆகிய இருவருக்கும், இன்னமும் கல்யாணம் ஆகவில்லையே என்கிற கவலையுடன் இருக்கும் அம்மா ( மீரா கிருஷ்ணன்), குத்துவிளக்கு வியாபாரம் செய்யும் அப்பா ( பிரமிட் […]
களவு சல்லடை போட்டு தேடியாகிவிட்டது கடல் தான் களவாடிப் போயிருக்கும் உன் காலடிச்சுவடை. வகுப்பு தேவதைகளின் பயிற்சிக் கூட்டத்தில் குழந்தைகள் வகுப்பெடுத்தன. அஸ்தி புழங்குவதற்கு காவேரி அஸ்தியைக் கரைப்பதற்கோ கங்கை. குயில்பாட்டு அடர் வெண்பனி மூடியிருந்தது சாலையை விடியலை வரவேற்கும் விதமாக கருங்குயில் மரக்கிளையில் அமர்ந்து ஆனந்தமாக பாடிக் கொண்டிருந்தது. வெளிச்சம் தீபத்தை ஏற்றி வைத்து தீக்குச்சி கரியானது. பிம்பம் நகர்ந்து கொண்டிருக்கும் நதியலையில் எனை பார்த்துச் சிரிக்கும் என் பிம்பம். உதயம் மலை முகட்டில் சூரியன் […]
இருள் கவிய சாலை சர்ப்பமாகும். சாலையில் அம்மா கையை உதறி விட்டுக் குழந்தை ஓடும். பதறிச் சாலைக்கும் முந்தி சடுதியில் ஓடிப் போய்ப் பிடிப்பாள் அம்மா. அம்மா! அதென்ன? மரம். அதக் கேட்கல. காக்கா. அதக் கேட்கல. ஆகாசம். அதக் கேட்கல. மேகம். அதக் கேட்கல. நட்சத்திரம். அதக் கேட்கல. நிலா. அதக் கேட்கல. போடி! தெரியாது. கைகள் விசிறியாய்க் குழந்தை சிரிக்கும். அம்மா குழந்தையை வாரி மழைமுத்தம் பொழிவாள். அஞ்ஞான்று உலகெலாம் சிலிர்ப்பது தெரியும். கு.அழகர்சாமி
டாக்டர் ஜி. ஜான்சன் தரங்கம்பாடி கடல் எப்போதுமே இறைச்சலுடன்தான் காணப்படும். அந்த அலைகளின் ஓசை யாரோ ஒரு பண்டைய புலவனின் காதிலோ அல்லது சோழ மன்னனின் செவியிலோ கீதமாகக் கேட்டிருக்க வேண்டும். அதனால்தானோ என்னவோ அந்தப் பகுதிக்கு தரங்கம்பாடி என்று அழகான தூய தமிழில் பெயர் சூட்டப்பட்டிருக்க வேண்டும். தரங்கம்பாடி என்பதற்கு ” பாடும் அலைகள் ” என்பது பொருளாகும். அதன் அலைகள் தொடர்ந்து வந்து கரையோரத்தில் உள்ள பாறைகள் மீது முட்டி மோதி பெரும் ஓசையுடன் […]
டாக்டர் ஜி. ஜான்சன் Septicaemia என்பது குருதி நச்சூட்டு அல்லது குருதி நச்சேற்றம். குருதி என்பது இரத்தம் என்பதையும் நச்சு என்பது நஞ்சு அல்லது விஷம் என்பதையும் நாமறிவோம். இரத்தத்தில் எப்படி நஞ்சு கலக்க முடியும் என்ற வினா எழுவது இயல்பே! விஷம் குடித்து அல்லது பாம்பு, தேள் கடித்து விஷம் ஏறி உயிர் போவதையும் அறிவோம். ஆனால் இவை ஏதும் இல்லாமல் இரத்தத்தில் எப்படி நஞ்சு கலக்கும்? இது வேறு விதமான நஞ்சு. இந்த நஞ்சு […]
விவேகானந்தர் 150 -ஆம் ஆண்டுப் பிறந்த நாள் விழாவும் பேராசிரியர் பெஞ்சமின் லெபோவுக்குப் பாராட்டு விழாவும். கடந்த மாதம் 29 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை மதியம் 3 மணி அளவில் விவேகானந்தர் விழா பாரீஸ் 14 -ஆம் வட்டத்தில் உள்ள Maison de l’Inde என்னும் கட்டிடத்தில் நடைபெற்றது. பிரான்சு சிவன் கோவில் தலைவர் திருமிகு அருட்செல்வர் சுகுமாறன் முருகையன் அவர்கள் தலைமை ஏற்க, ஆசிரியர் ப. சின்னப்பா, M.A, B.Ed தமிழ்த் தாய் வாழ்த்துப் […]
குமரி எஸ். நீலகண்டன் அகமாய் முகம் பார்க்க முயன்றேன்.. முகம் திரும்பவில்லை.. சிரத்தையுடன் முகத்தினை திருப்பிய போதும் முகம் தெரியவில்லை.. உள்ளே இருளாக இருந்திருக்கலாம்… கொஞ்சம் ஒளி வந்த போதும் முகம் முகமாக இல்லை.. அகவிழிகளின் மேல் அழுக்குப் படலம் படர்ந்திருக்கலாம்… அந்தப் படலத்தை கிழித்தெறிந்த போதும் முகம் சரியாகத் தெரியவில்லை. ஒருவேளை மூளை முகத்தின் முகத்தை மறைத்திருக்கலாம்… ஆனாலும் அகமாய் முகம் பார்க்க ஆழமாய் பயிற்சித்துக் கொண்டிருக்கிறேன். குமரி எஸ். நீலகண்டன்
ருத்ரா மெல்ல மெல்ல.. புல் தரை ஸ்பர்சிக்கிறது. பட்டாம்பூச்சிகள் ஏறி ஏறி வழுக்கி சருக்கி ஆடுகின்றன. மேக்னா தீக்குழம்பும் தாண்டி வெண்டைக்காய் பிஞ்சு விரல்களின் நகப்பூச்சு கிலு கிலுப்பையை குலுக்குகிறது. அதிலிருந்து ஒரு கள்ளச்சிரிப்பு வெறுமைக்குள்ளும் பூவாணம் சிந்துகிறது. பொட்டு பொட்டு வெளிச்சங்களில் “சரஸ்வதியின்” காய்ந்த உதடுகள் ஈரப்படுத்திக்கொள்ளுகின்றன. நாயுருவிகள் கூட என் மேனி வருடி சப்திக்கின்றன. காற்றின் அடுக்குகளில் நுரையீரல் நந்தவனங்களில் வழு வழுப்பாய் புரள்கின்றேன். பட்டம் விடும் சிறுவன் தடவிய கண்ணாடித்தூள் கயிற்றில் ஏதோ […]