ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “இந்தக் காசு பணத்தில் எப்படி என்னை நம்பி இருக்கும் எல்லோருக்கும் கஞ்சிக் குழம்பு காய்ச்சிக் கொடுப்பேன் கடவுளே ? பசியோடு இருப்பவனிடம் எப்படி நான் பைபிளைப் பற்றிப் பேசுவேன் ? எப்படி மத மாற்றம் பற்றி மன்றாடுவேன் ! பயமாக இருக்குது எனக்கு !” ஜார்ஜ் பெர்னாட் ஷா (மேஜர் பார்பரா) மேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி […]
தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் ஆனால் வேலைக்காரர்கள் சாப்பிட்டு ஆயிற்று என்று தெரிந்ததும் நான் சமையல் கூடத்துக்குள் போனேன். எவர்சில்வர் வாஷ்பேசினை எமிலி சுத்தம்செய்து கொண்டிருந்தாள். மேரி ஆன் கழுவிக் கொண்டிருந்தாள். ”சொல்லுங்க, திரிஃபீல்ட் தம்பதிக்கு என்ன குறை?” என்று நான் கேட்டேன். மேரி ஆன் பதினெட்டு வயதில் இந்த விகாரேஜுக்கு வந்தவள். நான் சின்னப் பையனாக இருக்கையில் என்னைக் குளிப்பாட்டி விட்டிருக்கிறாள். எனக்குத் தேவைப்பட்டபோது பிளம் ஜாமில் மருந்துப்பொடி குழைத்து சாப்பிடத் தந்து சொஸ்தப்படுத்தி யிருக்கிறாள். (நம்மூர்ப் […]
நீல நரி ஒரு நகரத்தின் அருகில் இருந்த குகையில் ஒரு நரி இருந்தது. அதன் பெயர் சண்டரவன். ஒருநாள் பசியால் வாடிப்போன அந்த நரி இரவானவுடனே இரைதேடப் புறப்பட்டுத் திரிந்தபடியே நகரத்திற்குள் நுழைந்தது. அதைக்கண்டவுடன் ஊர் நாய்கள் பயங்கரமாய்க் குரைத்தன; ஓடிவந்து அதன்மேல் விழுந்து கூரிய பற்களால் கடித்துவிட்டன. குலைக்கும் சத்தம் கேட்டுப் பயந்துபோய், உடம்பெல்லாம் காயங்கள் உண்டாகி, திக்குத் திசை பாராமல் நரி தாவியோடியது. ஓடுகிற ஓட்டத்தில், யாரோ ஒரு சாயப் பூச்சு வேலை […]
பொதுவாகவே இப்படிப் பட்ட தலைப்புடன் எழுதப் படும் கட்டுரைகள், “உங்கள் கணக்கு ஹாக் செய்யப் படலாம்!”, “பெண்களே! உங்கள் விவரங்களை கொடுக்காதீர்கள்”, என்பன போன்ற எச்சரிக்கைகளோடு வெளியாகும். அக்கட்டுரைகளுக்கு நல்ல வரவேற்பும் கிடைக்கும். ஆனால், இந்த சமூக இணைப்புத் தளங்களின் முக்கிய தொல்லைகளும், நன்மைகளும், பொதுவான ஆபத்துக்களைத் தாண்டி ஆராய்ந்தால் தான் புரியும். அதைப் பற்றி எவரும் எழுதுவதில்லை என்று கூற முடியாது. எழுதுவோரின் எண்ணிக்கை குறைவு. அவர்களின் இடுவை பிரபலம் அடைவதும் கடினம். பல வருடங்களாக […]
ஷி றி ஸேதுராஜன் [ ஊமையர் கண்ட கனவுகள்] படைப்புக்கன்றி படைப்பாளருக்கே விமர்சனம் எழுதுவது மற்றெங்கேயும் எப்படியோ, நான் பார்த்த வட்டங்களில் சகஜமாகிவிட்டது. தீவிர பிரதட்சவாதத்தை (க்ஷீமீணீறீவீனீ) விட பின்நவீனத்துவமே இன்றைய சமுகத்தின் அவலங்களின் வலிவையும் அந்த அவலங்களின் எதிராக பலர் இலக்கியம் என்ற பெயரில் கொடுக்கும் குரல்களின் மலிவையும் எடுத்துரைக்கவல்லது. ஏனெனில் எல்லோரும் ஒரே மொழி பேசக்கூடிய நிலைக்கு உலகம் வளர்ந்து கொண்டிருந்தாலும், நாம் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளக்கூடிய புரிந்துணர்வோ குறைந்துகொண்டே வருகிறது. […]
“அதோ இருக்கே கூடை! அதிலிருந்து ஆளுக்கு ஒரு பழம் கிடைச்சாத் தேவலை!” “கிடைச்சாத் தேவலைதான்! ஆனா கிடைக்கிறாப்பலேத் தெரியலையே! கூடையைத்தான் ஐயா பக்கத்திலையே வச்சிருக்காரே!” “பக்கத்திலே இல்லாமே தூரத்திலே வச்சிருந்தா மட்டும் நமக்குக் கிடைச்சிடுமா என்ன? ஐயாவாப் பார்த்துக் கொடுத்தாத்தானே சாப்பிட முடியும்?” மேற்கண்ட கசமுசாப் பேச்சு நடந்து கொண்டிருந்த போது கணீரென்று ஒரு குரல் குறுக்கிட்டது. “என்ன? என்ன பேச்சு?” “ஒண்ணுமில்லேய்யா! பசிக்கிற மாதிரி இருந்தது!” கசமுசாக்காரர்களில் ஒருவர் தைரியமாகவே சொல்லிவிட்டார். “பழக் கூடை பக்கத்திலே […]
சத்யானந்தன் யானை எப்போதுமே வியப்பளிப்பது. அதன் பிரம்மாண்டமான தோற்றம், அதன் மிக வித்தியாசமான உடல் அமைப்பு, அதன் அசைவில் தென்படும் அழகு இவை அதன் உடல் சம்பந்தப் பட்டவை. அது ஒரு பாகனிடம் அடங்கி நடப்பது தான் இதை விடவும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவது. இன்னும் சுருங்கச் சொல்ல வேண்டுமெனில் யானை வளர்ப்பு மிருகங்களில் ஒன்றாயிருப்பதே அதியசயமாய்த் தோன்றும் எப்போதும். இயந்திரங்கள் வரும் முன் யானை கடுமையான பளுவை கையாளுவதில் முக்கியப் பங்கு வகித்தது. இடும் சிறு சிறு […]
— மன்னார் அமுதன் கஞ்சிக்கும் கூழுக்கும் நீதியொன்று – பணம் காய்த்த நல் மரத்திற்கு நீதிவேறு – என நெஞ்சினைக் கல்லாக்கி நீதி சொல்லும் -அந்த நீதிமான்களைக் காலம் வெல்லும் கிஞ்சித்தும் அஞ்சாமல் கொடுமை செய்யும் கீழான மனிதர்தம் பாதம் தொட்டு – நல்ல மேலான பதவிகள் கேட்டுநிற்கும்- இவர்கள் நிலையினைப் பார்த்தாலே உள்ளம் வெட்கும் பாருக்குள் எங்கோவோர் மூலையிலோ -நல்ல பண்புகள் கொண்டவரைச் சாலையிலோ -கண்டு கதைக்கையில் ஒருதுளி நீர்திரளும் -அந்த நீரினில் ஒருபுறம் நீதி […]
மன்னார் அமுதன் ஒருவர் வாழ்ந்த வாழ்க்கையின் சிறப்பு அவருடைய மரணத்தின் போது தான் தீர்மானமாகின்றது. அந்தச் சிறப்பை வாழும்போதே பெற்றுவிட வேண்டும் என்பதற்காக நேர்மையான வழியில் உழைப்பவர்களை விட குறுக்கு வழியில் செயல்படுபவர்களே அதிகம். இவர்களுக்கு மத்தியில் 22 நூல்களை வெளியிட்டுள்ள கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் எவ்வித படோடோபமுமின்றி இயல்பாக வாழ்ந்து வருதலே அவரது சிறப்பாகும். இலங்கையின் குறிப்பிடத்தக்க திறனாய்வாளர்களுள் ஒருவராக இருந்து வரும் சிவகுமாரன் பிரபலமான இலக்கியவாதிகள் மற்றும் புத்திஜீவிகள் பலரின் நூல்களை திறனாய்வு செய்து அவற்றை […]
அந்த நொடி எப்போதும் நிரப்பபடாமலே உள்ளது அந்த நொடி எதை கொண்டு நிரப்ப அதை நிரம்பிவழியும் எனது நினைவுகளைகொண்டு அதன் முனையை கூட நிரப்ப முடிவதில்லை கதைகளையும் கவிதைகளையும் ,வார்தைஜாலங்கலையும் கொண்டு நிர்ப்பிவிடலமா? மழையையும் வண்ணத்தையும் கொண்டாவது! பதற்றமான பல பொழுதுகளில் உன்னை நிரப்பும் அந்த நொடியை நினைத்தே மலைத்து போகிறேன் தேடிய பொழுதுகள் உன்னை நிரப்ப போவதில்லை தேடாத பொழுதுகlaal உன்னை நிரப்ப சாத்தியம் இல்லை களவாடவும் முடியாது போனதால் எப்போதும் என்னை பின்தொடர்கின்றது அடர்ந்த […]