இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சமும், எரிசக்திப் பற்றாக்குறையும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன! இந்தியாவைப் பொருத்த மட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை! பரிதிக் கனலைப் பயன்படுத்தியும், அணுசக்தி வெப்பத்தை உபயோகித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும். இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங்களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே உருவாக்கப்பட வேண்டும்.” முன்னாள் குடியரசுத் தலைவர் மாண்புமிகு […]
இப்பகுதியில் உள்ள பத்துப் பாடல்களும் தலைமகனுக்குச் சொல்லப்படுவதாகும். தலைவனானவன் ‘கிழவன்’ என்னும் உரிமைப் பெயரோடு சுட்டப்படுவதால் இது கிழவற்கு உரைத்த பத்து எனப் பெயர் பெற்றது. கிழவற்கு உரைத்த பத்து—1 கண்டிகும் அல்லமோ. கொண்க நின்கேளே! முண்டகக் கோதை நனையத் தெண்டிரைப் பௌவம் பாய்ந்துநின் தோளே! [முண்டகம்=சுழிமுள்ளி என்னும் ஒருவகைப் பூ; பௌவம்=கடல்] அவன் இப்பக் கட்டினவளை உட்டுட்டு வேற ஒருத்தியோட போயிட்டான். கொஞ்ச நாள்ல அவன் திரும்பி கட்டினவகிட்டயே போகப்போறான். இது அவளுக்குத் தெரிஞ்சிசிடுத்து. அப்ப […]
டாக்டர் ஜி. ஜான்சன் 193. சுவீடிஷ் மிஷன் மருத்துவமனை திருப்பத்தூரில் முதல் காலை. வீட்டு முற்றம் வந்து நின்றேன். குளிர்ந்த காற்று சிலுசிலுவென்று வீசியது. அப் பகுதியில் ஏராளமான சவுக்கு மரங்கள், கற்பூரத்தைலமரங்கள், .தென்னை மரங்கள் காணப்பட்டன. இடது பக்கத்தில் ஒரு மாடி வீடு இருந்தது. எதிரே வலது பக்கத்தில் இரண்டு வீடுகள் ஒன்றாக சேர்ந்திருந்தன. வீடுகளின் முன் நேர்த்தியான பூந்தோட்டங்கள் காணப்பட்டன. மரங்களில் குருவிகள் கீச்சிட்டன. . குயில்கள் கூவின. பச்சைக் கிளிகள் பறந்து மகிழ்ந்தன. […]
நேற்று எழுதிய கவிதையைத் தொலைத்துவிட்டுத் தேடிக் கொண்டிருக்கிறேன் அது வேறு வடிவங்கள் எடுத்து மன ஆழத்தை வெகுவாய் ஆக்கிரமித்திருந்தது நான் எவ்வளவு அழைத்தும் வர மறுத்து அங்கேயே அதன் எண்ணப்படி சஞ்சாரமிட்டுக்கொண்டிருந்தது மற்றெல்லாவற்றையும் தவிர்த்து அதன் உள்ளிருப்பில் என்னை ஒப்படைத்ததால் ஒருநாள் வந்துவிடும் என்று நம்பிக் கொண்டிருக்கிறேன் வேறு வார்த்தைகளைத் தவிர்த்து
நான் கைவிட்ட காதலி வேறொருவனுடன் குடும்பம் நடத்துகிறாள் வேண்டாமென்று ஒதுக்கப்பட்ட நண்பன் பணக்காரனாகி எல்லார்க்கும் உதவி செய்கிறான் சண்டை போட்டு விரட்டப்பட்ட அப்பாவும் அம்மாவும் சின்னவனோடு சௌக்கியமாக இருக்கிறார்கள் ராசியில்லையென நான் விற்ற வீட்டில் இப்போது குடும்பமொன்று வளமாக இருக்கிறது எல்லாம் நல்லபடி இருந்தும் இன்னும் நான் நானாகத்தான் இருக்கிறேன்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ நேற்று எனது தொல்லைகள் எல்லாம் தெரிந்தன, வெகு வெகு தூரத்தில் இருப்பதாய் ! இப்போது அவை எல்லாம் நிலைக்கப் போவதாய் கலக்கு தென்னை ! நேற்றைய தினத்தை நம்பிக் கிடந்தேன் ! திடீரென முன்பு இருந்ததில் அரை மனிதனாய்க் கூட நானில்லை ! ஒரு கரிய நிழல் என் மீது படர்ந்துளது ! அந்தோ ! திடீரென நேற்றைய தினம் வந்தது என் முன்னால் ! ஏனவள் போக […]
அகோரப்பசியெடுத்த நாய் அங்குமிங்கும் அலைந்தது இரைதேடி. பிய்ந்த ரொட்டித்துண்டு கிடைத்தாலும் போதும் பாதி தோசை கிடைத்தால் பிரமாதம். பால் பாக்கெட்டை யாரும் கைநழுவவிட வாய்ப்பில்லை. தெருவெங்கும் உறுமியபடி மோப்பம் பிடித்தவாறு சென்றுகொண்டிருந்த நாய் ஒரு குப்பைத்தொட்டிக்குள் கண்டந்துண்டமாய் வெட்டப்பட்ட பெண் இதயமொன்று அதன் இறுதி லப்-டப்பில் துடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து அருகே சென்றது ஆவலே உருவாய். ஆனால், பலவீனமாய் ஒலித்துக்கொண்டிருக்கும் அந்த அவலத்தை ஆற்றாமையை ஆறாக் காயத்தின் வலியோசையைக் கேட்கக் கேட்க கண்கலங்கிவிட்டது அந்த நாய்க்கு. தெளிவற்று என்னென்னவோ […]
வளர்ந்த குழந்தையை இடுப்பிலிடுக்கிக்கொண்டவள் உணவூட்டினாள்; உடுப்பு மாட்டிவிட்டாள்; ’ஆடுரா ராமா ஆடுரா ராமா ’ என்று அன்றாடம் பாடிப்பாடி ஆன விலங்கிட்டு வானரமாக்கிவிட்டாள். குதித்தபடி குட்டிக்கரணம் போட்டவாறிருக்கும் வளர்ந்த பிள்ளை சில சமயங்களில் சொன்ன பேச்சைக் கேட்பதில்லையென்று கல்லுரலிலும் கட்டிவைக்கிறாள். மண்ணைத் தின்னாமலிருக்க மூக்கின் கீழ் மிகப்பெரிய பிளாஸ்திரி ஒட்டிவைத்திருக்கிறாள். காணக்கிடைக்குமோ வளர்ந்த குழந்தை வாயிலும் அண்டசராசரத்திருவுருவை. .. என்றேனும் எண்ணிப்பார்த்திருப்பாளோ அம்மங்கைத் தெரிவை.
ஜெய்கிஷென் ஜே காமத் ஒரு வாழை இலை வைத்த பிளாஸ்டிக் தட்டை கையில் ஏந்தி நான் நின்றிருந்தேன், வெளியேறிய நீராவி கண்ணாடியை மறைத்தது. சங்கரன் சேட்டன் தனது சூடான கனமான தட்டையான தோசை கல்லில் தண்ணீரை தெளித்து, ஒரு மெல்லிய விளக்குமாறு கொண்டு தேவையற்ற துகள்களையும் மற்றும் எண்ணெயை வெளியே எடுத்தார். ஒரு தட்டையான அடி கொண்ட கிண்ணத்திலிருந்து ஒரு சிறிய கையளவு குமிழாக மாவு ஊற்றப்பட்டது. தட்டையான அடி முக்கியமானது. எவ்வளவு தட்டையோ , அவ்வளவு […]