சிலந்தி வலையில் சிதறித்தெளித்த மழைத்துளி சிறைப்பட்டுக்கிடந்த சிலந்தியின் கால்களையும் நனைத்திருந்தது ஈரம். குடித்துவிட்டுக்கீழே வைத்த உள்ளிருப்பவை வெளித்தெரியும் கண்ணாடிக்குவளையில் அடியிலிருந்து மேலே வந்த மீதமுள்ள நீர் சிறு பாசிமணிகள் போல் அதன் சுவரில் ஒட்டிக்கொண்டிருந்தது கண்ணாடிக்குள்ளும் ஈரம். அடித்துப்பெய்த மழையின் சாரல்கள் என் ஜன்னல் கம்பிகளிலும் தொக்கி நின்று கொண்டிருக்கின்றன. இரும்புக்கம்பிகளிலும் ஈரம். – சின்னப்பயல் (chinnappayal@gmail.com)
கண்ணதாசன் கழகம்? கண்ணதாசனுக்குக் கழகமா? எங்கே தமிழகத்திலா? சிங்கப்பூர், மலேசியாவிலா? அமெரிக்கா? ஐரோப்பா ? ஆம், ஐரோப்பாவில், பிரான்சு நாட்டில்தான். பரி நகருக்கு ( Paris – பிரஞ்சு ஒலிப்பு ‘பரி’ ) 50 கி .மீ தொலைவில் உள்ள ‘மோ’ (Meaux) என்னும் ஊரில் கடந்த ஏழு ஆண்டுகளாய் இயங்கி வருகிறது பிரானசு தமிழ் கண்ணதாசன் கழகம். இக்கழகத்தின் மகளிரணி, கடந்த இரண்டு ஆண்டுகளாய்க் காந்தி விழாவையும் கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டு ஒக்தொபர்த் திங்கள் […]
அந்த நேற்றைய பவளமல்லிப்பூக்கள் வீட்டு வாசல் தரையில் சிவப்புக்கால்கள் கொண்டு நட்சத்திரக்கூட்டங்களாய் படுத்துக்கிடக்கின்றன. எந்த குருவாயூரப்பனையாவது நேற்று பூராவும் அப்பிக்கிடந்த பின் களைத்துக் கால் நீட்டிக்கிடக்கின்றன. வீட்டுக்குள்ளிருந்து அந்த பவளமல்லி மரம் தன் கிளையை கார்ப்பரேஷனுக்கு அறிவிக்காமல் விதி மீறி வெளியே நீட்டியிருந்தது. அது விரித்த பாய் அங்கு “வாசங்களின்”பிரவாகம். அந்த பவளப் பூ மழை பெய்த அந்த வாசலுக்கு இணையாய் எத்தனை வைகுண்டங்கள் வாசம் செய்தாலும் பெருமாளே வேண்டாம் என்று இங்கே வந்து பள்ளி கொண்டுவிட்டார். […]
புலிக்குட்டிகளாய் உருண்டு புரள்கிறது மாநகரச் சாலைப்பள்ளத்தில் மழைநீர். குளித்த எருமைகளாய் அடர்கருப்பில் கார்பார்க்கிங்கில் கட்டிக்கிடக்கின்றன வண்டிகள். சிறிதாய்ப் பெய்த மழையில் மிதக்கும் நகரம் ஆகிறது மாநகரம். கார் வைத்திருப்பவர்களைக் கப்பல் வைத்திருப்பவர்களாகவும்., வண்டி வைத்திருப்பவர்களை ஓடக்காரர்களாகவும் ஆக்குகிறது மழை. அடித்து அடித்து மாநகரத்தைச் சலவை செய்துகொண்டிருக்கிறது மழை..
முனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com விளையாட்டு என்பது வெளித்தூண்டல்களின்றி மகிழ்ச்சியூட்டும் செயல்களில் இயற்கையாக ஈடுபடுவதாகும். இவ்விளையாட்டை மனகிழ்ச்சி ஊட்டும் செயல் என்பர். அவ்விளையாட்டில் பொழுதுபோக்கு மட்டுமின்றி உடல், உள நலச் செயல்களும் இடம்பெற்றுள்ளன. மேலும் விளையாட்டானது தமிழக மக்களின் வாழ்க்கையோடும், பண்பாட்டோடும் இணைந்ததாக விளங்குகின்றது. பழந்தமிழர்களிடையே காணப்பட்ட மகளிர் விளையாட்டுக்கள் குறித்த செய்திகள் பல தமிழிலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. விளையாட்டுக்களின் வகைகள் விளையாட்டை பால்(sex) அடிப்படையில் பாகுபடுத்தலாம். அவையாவன, 1. […]
அது ஒரு நூறு அடுக்கு மாடிக் கட்டிடம். அந்த நகரத்தில் மட்டுமல்லாமல், அந்த நாட்டிலேயே அது தான் உயர்ந்த கட்டிடம். கட்டிடக் கலைக்கே பெருமையும் புகழும் தேடித் தரத்தக்க அவ்வளவு அழகான கட்டிடம்! வந்தவரைப் பிரமிக்க வைக்கும் வரவேற்பு அறை! வழவழக்கும் மொஸைய்க் தரை! வடிவழகு மிளிர தலைக்கு மேல் ஆறடி உயரத்திலிருக்கும் விதானம். அறைக்கு அறை அழகாகப் பொருத்தப்பட்டிருக்கும் வாயிற் கதவுகள்! சுவரே தெரியாமல் அதன் மேல் பதிக்கப் பெற்று, சுத்தமாக ‘வார்னிஷ்’ செய்யப்பட்டுப் பளபளத்துக் […]
1953ம் வருடம் பிப்ரவரி மாதம். மாஸ்க்கோ நகரில் இதற்கு முன்பு அப்படி பனிபொழிந்ததில்லையென்று பேச்சு. உண்மைதான் அந்த மாந்த்தில் தொடக்கத்திலிருந்தே பனி பொழிய ஆரம்பித்து சாலைகளில் குவிந்திருந்தது. சாலைகள், குடியிருப்புகள் மரங்களென அவ்வளவும் பனியால் மூடியிருந்தன. போதாதற்கு பூர்கா (Pourga) என மாஸ்கோவாசிகளால் அச்சத்துடன் உச்சரிக்கப்படுகிற உறைந்தபனியையொத்த சைபீரிய கடுங்குளிர் காற்றால் நீர்நிலைகள்கூட உறைந்திருந்தன. சாலைகளை மூடிய பனியும் உறைந்து பனிப்பாளங்களாக உருமாறியதின் விளைவாக போக்குவரத்து முற்றாக பாதித்திருந்தது. மார்ச் மாதம்(1953) நான்காம்தேதி வழக்கம்போல காலையில் எழுந்த […]
அலிபாவா வெறுமையாய்த் தெரிகிறது வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு மாயையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் உனக்கு பிறருடைய வாழ்க்கை. alibavapkm@gmail.com
பட்நாயக்கிற்காக தரப்பட்ட அன்றைய பிரிவு உபசார விருந்து பற்றி எழுதும்போது சில விஷயங்கள் விடுபட்டுவிட்டன. எழுதி அனுப்பிய பிறகு தான் அடுத்த நாள் தான் நினைவுக்கு வந்தது. நடந்த கால வரிசைப் படி சொல்ல சில சமயம் மறதியில் விடுபட்டாலும், நினைவுக்கு வந்த உடனே சொல்லி விட்டால் மனதுக்கு நிம்மதியாக இருக்கும். ஒரு சில விஷயங்கள் மறந்து தான் போய் விட்டன. அதற்குக் காரணம் தொடர்ந்து மிருணால் காந்தி சக்கரவர்த்தி பற்றியே எழுதி வந்ததால், அவனுடன் கொண்டிருந்த […]
கொங்கு நாட்டு மண்வாசமும் வட்டாரப் பேச்சும் முதன்முதலாக திரு.ஆர்.சண்முகசுந்தரம் அவர்களின் படைப்புகளில்தான் கண்டோம். இப்போது அவரது வாரிசாக திரு.சூர்யகாந்தனது படைப்புகளில் அதைக் காண முடிகிறது. சூர்யகாந்தனது ‘மானாவாரி மனிதர்கள்’, ‘பூர்வீக பூமி’ போன்ற அவரது ஆரம்ப நாவல்கள் ஆர்.சண்முகசுந்தரத்தின் வெற்றிடத்தை நிரப்பும் படைப்புகளாக அடையாளம் காட்டின. சூர்யகாந்தன் பன்முகப் படைப்பாளி. கவிஞராகவும், சிறுகதை மற்றும் நாவல் எழுத்தாளராகவும், இலக்கிய விமர்சகராகவும் தமிழ் இலக்கிய உலகில் சாதனை புரிந்து வருபவர். இவரது எழுத்துக்களின் மையம் கொங்குநாட்டு மக்களின் வாழ்வியலையே […]