1)மூன்றுதலைமுறைவயசிருக்கும் இதன் பிரம்மாண்டமான உருவத்தை யாரும் கவனித்ததாய் இல்லை. எவருக்கும் தெரிந்ததுவுமில்லை இது முளைத்து வளர்ந்தவிதம்பற்றியும் வான் நோக்கி நிமிர்ந்தும் மண்ணுக்குள் வேர்பாய்ச்சி நிற்கும் வேப்பமரம்தான் என்றாலும் முன்காமிகளும் சொன்னதில்லை இத்தனை ஆண்டுகளாய் இது உதிர்க்கும் பச்சை இலைகளுக்கு புனிதம் சேர்ந்த வரலாறு குறித்தும் மூலிகை காற்றாய் சுவாசத்திற்கு இதமளிக்கும் இதன் அகவிலாசம் பற்றியும். 2)ஒவ்வொரு இலைகளும் தாழ்வாரங்களில் சமாதிகளின் பூக்களோடு பேசிக் கொண்டிருக்கும் ரகசியம் பிடிபடவில்லை. கசக்கும் வேப்பிலைகளை வாயில் போட்டால் இனித்துக் கிடக்கிறதென்ற இன்னொரு […]
=============== பாலேடு சுருக்கங்களாய் மடிந்து மடிந்து – குளத்து நீரின் சிறு அலைகள். நீரேட்டின் மத்தியை பிடித்திழுத்து மேலே தூக்கி விசிற விரிந்தது போலொரு நீல வானம்- அதில் புரண்டோடும் மேக கூட்டம். இக்கொள்ளை அழகுக்கு இடையே கொணரிப் பட்டையில் அடுக்கபட்ட சந்தை பொருட்களாக நகர்கிறோம் அலுவலகம் நோக்கி நெடுஞ்சாலையில். -சித்ரா (k_chithra@yahoo.com)
சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா முன்னுரை: 1979 இல் அமெரிக்காவின் திரிமைல் தீவு அணுமின் உலையில் நேர்ந்த யுரேனிய எரிக்கோல்கள் உருகிய விபத்தும், 1986 இல் சோவியத் ரஷ்யாவில் நேர்ந்த செர்நோபிள் அணுமின் உலை வெடிப்பும் உலக மக்களுக்கு அச்சமூட்டி அதிர்ச்சிக்குள் தள்ளி விட்டுள்ளன. பயங்கரச் செர்நோபிள் விபத்துக்குப் பிறகு 25 ஆண்டுகள் கடந்து ஜப்பானில் 2011 மார்ச் மாதம் 11 ஆம் தேதி 9.0 ரிக்டர் பேரழிவுப் பூகம்பமும் 30 […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “வில்லியம் உழைத்து வேர்வையில் சம்பாதித்த பணம் சாவடியில் சாதனை புரியும் பலருக்கு. ஆனால் போருக்காகப் பீரங்கி வெடி மருந்து செய்து விற்றுச் சேமித்த உங்கள் பணம் வேதனைதான் தரும் எமக்கு !” ஜார்ஜ் பெர்னாட் ஷா (மேஜர் பார்பரா) மேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி : இந்த நாடகம் ‘ஏழ்மைக் காப்பணிச் சேவகி’ மேஜர் பார்பரா (Major […]
நிறைய தமிழ் திரை ரசிகர்கள் போதிதர்மர் யார் என்பது பற்றிய வினவலிலும் அவர் தமிழர் என்ற பெருமிதத்திலும், வந்த செய்திகளால், நான் விக்கி பீடியாவிடம் கேட்க , கிடைத்த பதில்கள் அதிக சுவாரசியமாக இருந்தன… நம்ம ஊரை , தமிழக கோடுகளுக்குள், ஆண்ட பலர் எப்படி டிஎன்ஏ –மூலக் கூறால் தமிழர் இனம் இல்லையோ அது போலவே, போதிதர்மரும் அக்மார்க் தமிழரா என்பது மிகப் பெரிய கேள்குறியே… ஆம்,… பல்லவர்களின் ஆதியாக, துரோணரின் மகன் அஸ்வத்தாமன் வருகிறார்… […]
நடுநிசியில் யார் கதவைத் தட்டுவது பிரமையா தூக்கம் வராத இரவுகளை எதிர்கொள்கையில் நரகம் பற்றிய பயம் அதிகரிக்கின்றது சிநேகிதர்கள் ஒவ்வொருவராக பிரியும் போது கதவைத் தட்டியது எமன் தானோ என்று தோன்றுகிறது பருவத்தில் படமெடுத்து ஆடிய மனது இன்று பயந்து பம்முகிறது மனம் பக்குவமடைந்துள்ளது அடுத்தவரின் அந்தரங்கத்தை அறிய இப்போது ஆளாய் பறப்பதில்லை செய்த தவறுகளால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியே என்னைக் கொன்றுவிடுமோ என பயமாய் இருக்கிறது அகஸ்மாத்தாக தெரிந்து கொண்டேன் வாடினால் தான் மலரென்று செத்தால் […]
ஒரு முறைமையின் உதறலில் எலும்புக்கூடாய் நிழலும் துரத்தும் சதைக்கூளங்களை எண்ணிய எண்ணியாங்குபடி நிறுத்த கயமை குடி கொள்ளும் நேசப் பறவைகளின் கூடுகளில் பஞ்சுப் பொதியினும் ஈரம் புகுத்தி பாசமாய் பாரம் சுமக்கும் சுமைகளை தாங்கிய பாறை மனது கெக்கலித்து புரளும் நினைவில் ஊசலாடியபடி நெஞ்சக்கிடக்கை விண்ணைத் தாண்ட எத்தனிக்கும் மழைத் தவளையின் சாகசத்தோடு துளியென்பது கூழ் பூசின கூட்டின் அடையாளமாய் வீலென்று அலறும் கனத்த மார்பில் அமுது சுமந்தபடி நிழல் பிடிக்க முடியாதவன் சுரக்காத ஊற்றுக்காய் கண்ணி […]
சட்டென தொலைந்த மின்சாரத்தில், மிதந்துகொண்டிருந்த ஒளியும், கசிந்து கொண்டிருந்த ஒலியும் தீர்ந்துபோனது. எங்கு நோக்கினும் அடர் இருள். சாலையில் கால் பதித்தபோது, நடுஇரவிலும் பரபரப்பாய் இயங்கும் நகரத்தின் மற்றொரு முகமாய் அமைதி நீண்டு கிடந்தது. நிலவில்லாத வெளுத்தவானம். குறை இயக்கத்தில் இருக்கும் நீண்ட சாலையைப் பார்க்கும்போது அந்த அமைதி சலனமில்லாமல் உறங்கும் ஒரு குழந்தையைப் போலிருந்தது. ஓசை போன்றே வெளிச்சமும் அமைதியைத் தின்றுவிடுவதாகத் தோன்றியது. வெளிச்சம் மிகு இடத்தைவிட குறை வெளிச்சத்தில் அதிக அமைதியை உணரமுடிவதாகத் தோன்றியது. […]
கர்ப்பிணிக்கான சிறப்பு இருக்கையில் அந்த மனிதர் நின்று கொண்டிருந்த கர்ப்பிணி கேட்டார் ‘இது கர்ப்பிணிக்கான இருக்கை அமரவிடும் என்னை’ அவர் ‘மன்னிக்க வேண்டு’ மென்றார் மரியாதையாய் நின்றார் பிறவிக் குருடர் அவரென்று நின்றபின்தான் தெரிந்தது ‘முந்நூறு நாள்தான் கரு வாழ்க்கை உங்களுக்கோ மொத்த நாளும் இருள் வாழ்க்கை அமரும் அருகதை உங்களுக்கே’ என்று\ கர்ப்பிணி எழுந்தார் கர்ப்பிணிக்காக எல்லாரும் இடம் தர அமர்ந்து கொண்டார் அவர் எல்லார் இதயங்களிலும் யூசுப் ராவுத்தர் ரஜித்
கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு சிறந்த பாடலாசிரியர் விருது தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் வருடா வருடம் நடைபெறும் ‘வியர்வையின் ஓவியம்’ உழைக்கும் மக்கள் கலைவிழா அண்மையில் கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இவ்வருடத்தின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை வசந்தம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளரும் தொகுப்பாளருமான கவிஞர் பொத்துவில் அஸ்மின் பெற்றுக்கொண்டார். இயக்குனர் கேசவராஜ் இயக்கும் ‘பனைமரக்காடு’ திரைப்படத்தின் மூலம் திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமாகியுள்ள இவர். ஏலவே ஜனாதிபதி விருது-(2001),அகஸ்தியர் விருது(2011) […]