நூலை ஆராதித்தல் பத்மநாப ஐயர் 75 — புத்தக வெளியீடு சென்னையில். வெளி ரங்கராஜன் , ரவி சுப்ரமணியன் , அழகிய சிங்கர் , ரவிக்குமார் , பாரவி ஆகியோர் நூல் மதிப்புரை வழங்குகிறார்கள் . எல் .அய்யாசாமி , காலச்சுவடு கண்ணன் , பா .செயப்பிரகாசம் , ஏ.எஸ்.பன்னீர்செல்வம் , ஆ .ரா .வெங்கடாசலபதி , க்ரியா ராமகிருஷ்ணன் , ஜி .திலகவதி , மாலன் , அரவிந்தன் , க.பூர்ணசந்திரன் , பழ .அதியமான் […]
பொன் குலேந்திரன் -கனடா மஞ்சுளா காயப்பட்ட சுந்தரத்தோடு நெர்ஸ் சாந்தியைச் சந்திக்கப் புறப்பட்டாள். அவள் கூடவே சாந்தியைச் சந்திக்கத் தாங்களும்; அவள் கூடவே வருவதாக ஜோன், லலித், மகேஷ் சொன்னார்கள். “நீங்கள் என்னோடு வருவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. உங்களை அவவுக்கு அறிமுகப்படுத்திவிட்டு நான் திரும்பிவந்துவிடுவேன்” மஞ்சுளா சொன்னாள். அவர்கள் சாந்தி இருக்கும் இடத்தை அணுகும் போது துர்நாற்றம் வந்ததை எல்லோரும்; உணர்ந்தார்கள். “ மஞ்சுளா எங்கருநது அநத துர்நாற்றம வருகிறது? இதை எப்படி […]
ஆக்கம் – அழகர்சாமி சக்திவேல் தவமுனி அகத்தியன் போன்றோர் கறந்த தலைச்சங்கத்தின் தமிழ்ப்பால் கடைசியில் கடல் நீர் அழுக்குப்பட்டுத் திரிந்து போனது. இடைச்சங்கத் தமிழ்ப்பாலில் தயிர் எடுத்துக் கடைந்தனர் தொல்காப்பியன் போன்றோர்.. கடைந்த வெண்ணையை.. உரியில் அவர் உரிய முறையில் சேர்க்காததால் தொல்காப்பியம் தவிர.. இனிய பல இலக்கிய வெண்ணைத் துண்டுகள் கால வெயிலில் கருகி உருகின கடைச்சங்கப்பாலில் வெண்ணெய் எடுத்து நெய் உருக்கினார் நக்கீரன் போன்றோர். கணிசமாய்த தேறிய தமிழ் இலக்கிய நெய் கடைசியில் களப்பிரர் […]
ஆக்கம் – அழகர்சாமி சக்திவேல் “உன் கை மெல்லியது கபிலா” சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் கபிலனின் கை பற்றி வியந்தான் கபிலனோ தன் காதலன் பாரியின் உடல் பற்றிச் சொன்னான்.. “உன் உடல் மா வலிமை கொண்டது பாரி”… சொல்லியும் சொல்லாமலும் சில ஓரின சமிக்ஞைகள். மெல்லியன் கபிலன் தன் மனைவி பற்றிக் கவிதை பாடவில்லை….. வல்லியன் பாரி தன் மனைவி பற்றிக் கவிதை பாடவில்லை ஆனால் பாரியும் கபிலனும் கலந்த கேண்மைக்கு கவிதைகள் […]
ஆக்கம் – அழகர்சாமி சக்திவேல் மதுரையில் ஓர் ஓரின மரிக்கொழுந்து பூத்தது பூவின் சுகந்தம் சோழமண்டலத்தில் வீசியது. சோழமண்டலத்து மீசை சுகந்தத்தில் திளைத்தது… சோழன் மகிழ்ச்சியில் தன் செங்கோல் உயர்த்தினான். ஓர் ஓரினக்காதல் ஒன்று சொல்லியும் சொல்லாமலும் பிறந்தது. ‘தென்னம் பொருப்பன் நன்னாட்டு உள்ளும் பிசிரோன் என்ப, என் உயிர்ஓம் புநனே’. பிசிராந்தை காதல் குறித்து கோப்பெருஞ்சோழனின் பெருமிதங்கள் இவை. ‘உயிர்ஓம் புநனே’ என்ற சோழனின் ஆசை வார்த்தை மருவி வந்ததோ என என் மனதிலே ஓர் […]
முகுளத்தில் அடிபட்டு மூர்ச்சையான குழந்தை மூன்று நாள் கழித்து கண் விழிக்கும் வேளை கவலையுற்று நிற்கும் தாயென வெள்ளம் வடிந்த இரண்டாம் நாள் சென்னையைக் கண்கலங்கப் பார்த்துக் கொண்டிருந்தது அந்திப்பொழுது இனி இழப்பதற்கொன்று மில்லை உயிரைத் தவிரவென பிழைத்திருந்தோர் நினைத்திருந்த வெறுமையின் நசநசப்பில் உப்புக்காற்று சுயமிழந்தது இறுதி மூச்சு வெளியேறும் கணத்தின் நாசியென செயலிழக்கும் மனத்தின் அச்சம் அகலாது துக்கத்தின் விசாரிப்புகளில் விக்கித்துப் போன இரவில் மனிதம் மெல்ல உதிக்கத் தொடங்கியது ஒளியை வழங்கும் சூரியனாக கரங்கள் […]
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) அன்புத் தோழீ… (*அன்பு, தோழி என்ற சொற்களின் மெய்யர்த்தங்கள் அளவில் நீ என் விளிக்கு நியாயம் சேர்ப்பவளாயில்லாமலிருக்கலாம். இருந்தும், நாம் உழைக்கும் வர்க்கத்தவர்கள் என்ற உறவின் உரிமையில் அப்படி விளிக்கலாம்தானே….) அவனை அமரச் சொல்லேன்… (*அவன் என்பது இங்கே அவமரியாதைச் சொல்லல்ல – அன்பின் பரிவதிர்வுக் குறிப்புச்சொல்). ஒரு புத்தனைப் போன்ற சலனமற்ற முகத்துடன் கால்கடுக்க நின்றுகொண்டிருக்கிறானே…. அவனை அமரச் சொல்லேன். நாள் முழுக்க […]
ஈரோடு புத்தகக் கண்காட்சி தமிழகத்தில் நடைபெறும் புத்தக்க் கண்காட்சியில் முக்கியத்துவம் பெற்றதாய் விளங்கி வருகிறது. மறைந்த இந்திய குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் ஈரோடு புத்தகக் கண்காட்சிக்கு இரு முறை வருகை தந்து உரைகள் நிகழ்த்தியுள்ளார். அந்த உரைகளைத் தொகுத்து ஈரோடு புத்தகக் கண்காட்சியின் முக்கியத் தூணாக விளங்கும் . ஸ்டாலின் குணசேகரன் இந்நூலை வெளியிட்டுள்ளார். முதல் உரை “ஒவ்வொரு வீட்டிலும் நூலகம் “ என்ற தலைப்பில் அமைந்திருந்தது. கற்பனை சக்தி கொண்ட சமுதாயத்தை மூத்த பத்திரிக்கையாளர்கள் எழுதத் […]
சோம.அழகு நாட்டுக்கானவர்களையும் சமூகத்துக்கானவர்களையும் போற்றுவதும் பாடுவதும் நம் மரபு. போற்றுதலுக்குரிய மரபு. வீட்டுக்கானவர்களும் குறைந்துபட்டவர்களா என்ன? வீடு சேர்ந்துதானே நாடு! அடுப்பூதும் பெண்ணுக்குப் பாடல் பெறும் தகுதி இல்லையா ? இதோ என் பாட்டுக்குரியவள்…………………………… எலுமிச்சம்பழ நிறம்; குட்டையுமல்லாத நெட்டையுமல்லாத இச்சமூகம் பெண்களுக்கென்று வரையறுத்து வைத்திருக்கும் அளவான உயரம்; உயரத்திற்கேற்ற அளவான உடல்வாகு; அறுபது வயதிலும் புசுபுசுவென்றிருக்கும் கன்னங்கள்; தலையில் ஆங்காங்கே வெள்ளி நரம்புகள்; பல வருடங்களாக வைத்த குங்குமத்தினால் கருப்பான நடுவகிடின் நுனி, இன்றும் […]
அருணா சுப்ரமணியன் பூக்கும் பூக்கள் எல்லாம் பூஜைக்கு செல்வதில்லை.. பூவையரை அடைவதில்லை… அவைகளின் மணமோ அழகோ அதனால் குறைவதுமில்லை.. தன்போக்கில் தன்னியல்பாய் மலர்ந்துவிட்டுப் போகின்றன எண்ணிலடங்கா பூக்கள்… யார் கண்ணிலும் படாது பூக்கும் பூக்களின் வண்ணங்களும் வடிவங்களும் கற்பனைக்கு அப்பாற்பட்டவை…. அடையாளங்களுக்கு ஆசைப்படாத மலர்களின் வாழ்வு தான் எத்தனை அற்புதமானது!!!