அரங்கனுக்கு ஆட்பட்ட அரசர்

This entry is part 2 of 16 in the series 20 செப்டம்பர் 2020

                                        சேரநாட்டை ஆண்ட“த்ருட வ்ரதன்” என்ற அரசனுக்கு மகனாய் கௌஸ்துபரத்தினத்தின் அம்சமாய் குல சேகரர் (ஆழ்வார்) தோன்றினார். மூவேந்தர்களையும் வென்று “கொல்லி காவலன்” ”கூடல்நாயகன்” ”கோழிக்கோன்”குலசேகரன் என்னும் விருதுகளைப் பெற்றார். இவருக்கு “த்ருடவ்ரதன்” என்ற மகனும் “இளை” என்ற மகளும் பிறந்தனர். திருமால் அடியார் களை மிகவும் உபசரித்தும் இராமாயண காலக்ஷேபத்தைக் கேட் பதில் மிகவும் விருப்பமுடையவராகவும் அரச போகங்களில் ஈடுபாடு இல்லாமலும் வாழ்ந்து வந்தார்.                                            காலம் செல்லச்செல்ல அரச போகத்தைத் துறந்து […]

குஜராத்- காந்தியின் நிலம் – 1

This entry is part 13 of 16 in the series 20 செப்டம்பர் 2020

இந்தியாவில் அதிகமாக உல்லாசப்பிரயாணிகள் செல்லும் மாநிலங்கள் ராஜஸ்தான்,   கோவா,  மற்றும் கேரளம் என்பன. இதைவிடப் மற்றய  மாநிலங்ளுக்கு  செல்வதற்கான வசதிகள் செய்வதற்கு வழிவகைகள்  வெளிநாட்டில் உள்ள பிரயாண முகவர்களிடம் இருப்பதில்லை. பெரும்பாலும் நியூ டெல்கி –  தாஜ்மகால்- ஜெய்ப்பூர் படங்கள் பதிவான  முக்கோணத்தை இந்திய பயணத்திற்கான  முக்கிய இடங்கள்  என விளம்பரப்படுத்துவார்கள். இதற்கு யார் காரணம்?  பெரிய வசதிகள் உள்ள தமிழ்நாடு  மாநிலத்திற்கான பயணத்தைப்பற்றிய  தகவல்களை  வெளிநாடுகளிலிருக்கும்  முகவர்களிடம்  தேடினால் கிடைக்காது. மற்ற மாநிலங்களுக்குப் பயணிப்பவர்கள் பெரும்பாலும் […]

காந்தியின் சபர்மதி ஆச்சிரமம் – 2

This entry is part 16 of 16 in the series 20 செப்டம்பர் 2020

நடேசன் அகமதாபாத்தில் சபர்மதி ஆற்றருகில் மகாத்மா காந்தியின் ஆசிரமத்தில் உள்ள அவர்  வழக்கமாக அமரும் அந்த   வீட்டின் திண்ணையில் பல ஐரோப்பியர்கள் இருந்தார்கள்.  அவர்களின்  குழந்தைகள் அங்குள்ள கைராட்டையில் நூல் சுற்றிப்பார்த்தார்கள். அவர்கள் எல்லோரும் விலகியபின்னர்,  அந்த இடத்தில் நானும் மனைவியுடன்  இருக்க விரும்பி காத்திருந்தேன். தொடர்ந்தும்  ஆட்கள்  வந்துகொண்டிருந்தார்கள் . சிறிது இடைவெளி வந்ததும்  நானும் எனது மனைவியும் சில நிமிடங்கள்  அங்கிருந்து ஏற்கனவே பார்த்த ஆசிரமத்திலுள்ள  கடிதங்கள்,  படங்கள் ,மற்றும் பத்திரிகை செய்திகளை அசை போட்டேன் […]

முத்தொள்ளாயிரத்தில் யானைகள்

This entry is part 1 of 16 in the series 20 செப்டம்பர் 2020

                              யானைக்கு அஞ்சிய நிலவு       சோழநாட்டில் ஒரு தலைவியும் அவள் தோழியும் நாள்தோறும் நிலாமுற்றம் செல்வார்கள். அங்குக் காட்சியளிக்கும் நிலவைக் கண்டு மகிழ்வார்கள். ஒருவர்க்கொருவர் மனம் மகிழும்படிப் பேசிக்கொள்வார்கள். அதுபோல ஒரு நாள் இருவரும் சென்றனர். அப்போது தலைவி தோழியைப் பார்த்து, “ஏனடி தோழி! இதோ இந்த முழுநிலவு இருக்கிறதே; இது தினமும் தேய்ந்துகொண்டே வருகிறதே; ஏன் தெரியுமா?” என்று கேட்டாள். அதற்குத் தோழியோ, “எனக்குத் தெரியாது; நீயே விடை சொல்” என்றாள். தலைவி, தோழியைப் […]

ஜானகிராமனின் மரப்பசு என்ற நாவல்….

This entry is part 10 of 16 in the series 20 செப்டம்பர் 2020

 அழகியசிங்கர்     ஜானகிராமனின் மரப்பசு என்ற புதினத்தை எடுத்துப் படித்தேன்.  1978ல் புத்தகத்தை வாங்கியிருந்தபோது  ஒரு முறை படித்திருந்தேன்.  இப்போது படிக்கும்போது அன்று என்ன படித்தோம் என்று சுத்தமாக ஞாபகமில்லாமலிருந்தது.  ஜானகிராமன் கதைகள் எல்லாம் பிராமண சமுதாயத்தை ஒட்டி நடக்கிறது.  அந்த சமுதாயத்தில் நடக்கும் அபத்தங்களைக் கிண்டல் பண்ணுவதுபோல் ஜானகிராமன் படம் பிடித்திருக்கிறார்.     இந்தக் கதையிலும் அம்மணி என்ற கதாபாத்திரம் மூலம் அதை வெளிப்படுத்துகிறார்.  வாழ்க்கை நடைமுறையில் உள்ள போலியான சம்பவங்களைப் பார்த்து அம்மிணிக்கு சிரிப்பு […]

நேர்மையின் எல்லை

This entry is part 14 of 16 in the series 20 செப்டம்பர் 2020

     அந்த அமைச்சர் நேர்மையின் வடிவம் என்று பேரெடுத்தவர். வங்கிக் கணக்கில் அவர் பெயரில் இருந்த தொகை ஒரு நடுத்தரக் குடிமகனின் சேமிப்புக்கு ஈடானது. இந்தியா  விடுதலை பெற்ற புதிதில் அவர் ஒரு மாநிலத்தில் ஓர் அமைச்சராகப் பதவி ஏற்றவர். கையூட்டு என்றால் என்ன வென்பதையே அவர் அறியாதவர். அந்த மாநிலத்தின் முதலமைச்சரும் அப்படிப்பட்டவரே! ஐம்பதுகளின தொடக்கத்தில் நம் நாடு பெரும்பாலும் அப்படித்தான் இருந்தது. எனவேதான் காவல்துறையை முதலமைச்சார் அவரிடம் ஒப்படைத்திருந்தார். எல்லா அமைச்சர்களுமே நாணயமானவர்கள் என்று […]