லதா ராமகிருஷ்ணன் செப்டெம்பர் 11 – பாரதியாரின் நினைவுதினம். 38 வயதிற்குள் எத்தனை எழுதிவிட்டார் என்று எண்ண எண்ண பிரமிப்பாக இருக்கிறது. அவருடைய இந்தக் கவிதையில் வரும் ’பெரிய கடவுள் காக்கவேண்டும்’ என்ற வரியையும், ’தரணியிலே பெருமை வேண்டும்’ என்பதையும் நாம் வழக்கமான அர்த்தத்தில் புரிந்துகொண்டால் பின் எந்தக் கவிதையையும் நம்மால் உள்வாங்கவே இயலாது. ஒரு கவிதை ஒற்றை அர்த்தத்தைக் கொண்டதாய் அனைவருக்கும் புரியும் அளவில் எழுதப்பட்டதா லேயே அது கவிதையாகிவிடுவதாகச் சொல்லமுடியாது. அதேபோல்தான் புரியாக் கவிதையும். […]
_ வெளி ரங்கராஜன் எழுதி சமீபத்தில் வெளியாகியிருக்கும் கலை, இலக்கியம் சார்ந்த கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு குறித்து…. லதா ராமகிருஷ்ணன் புத்தக அச்சாக்கம் நேர்த்தியாக இருக்கிறது. குறைவான அச்சுப் பிழைகளுக்காகவும், நேர்த்தியான அட்டை வடிவமைப்புக்காகவும் போதிவனம் பதிப்பகம் பாராட்டுக்குரியது. இந்தக் கட்டுரைத்தொகுப்பில் சிறிய கட்டுரைகளும் நீளமான கட்டுரைகளுமாக 22 கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. இலக்கியம், நிகழ்த்துகலை சார்ந்த கட்டுரைகள். ஏழெட்டு மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் உட்பட. கட்டுரைகளில் வெளி ரங்கராஜனுக்கே உரிய நிதான தொனியும் கருத்துகளை முன்வைப்பதில் அவர் வெளிப்படுத்தும் […]
விக்ரம் தளவுளவிக்கு 14 நாட்கள் ஓய்வு +++++++++++++++++++++ https://www.space.com/topics/india-space-program https://www.space.com/india-moon-lander-time-running-out.html https://www.space.com/lro-fails-see-india-moon-lander-vikram.html https://www.space.com/india-chandrayaan-2-moon-south-pole-landing-site.html +++++++++++++++++ விக்ரம் தளவுளவி சாய்ந்து இறங்கியுள்ளது சூரிய ஒளிமறைவுப் பகுதி நிலவில் சிக்கிய விக்ரம் தளவுளவி. 2019 செப்டம்பர் 17 இல் நாசாவின் நிலவுக் கண்காணிப்புச் சுற்றி [(LRO) LUNAR RECONNAISSANCE ORBITOR] நிலவின் தென் துருவத்தை நெருங்கி சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி விழுந்திருக்கும் இடத்தின் மீது பறக்கும் போது, அந்திமப் பொழுதாகி விட்டதால் தளவுளவி உருவத்தைப் படம் எடுக்க முடியவில்லை. […]
_ லதா ராமகிருஷ்ணன் முன்பொரு நாள் யதேச்சையாக தொலைக்காட்சி ஆங்கில சேனலில் பார்க்கக் கிடைத்த படம் THE CONDEMNED. கதாநாயகன் ஜாக் கான்ராட் மரண தண்டனைக் கைதியாக ஊழல்மிக்க சால்வடார் நாட்டுச் சிறையில் இருக்கிறான். (படம் பார்த்து நிறைய வருடங்களாகிவிட்டன என்பதால் கதையின் விவரங்களைத் துல்லியமாக நினைவிலிருந்து தர இயலவில்லை). ஒரு தொலைக்காட்சி சேனல் உரிமையாளர் புதிய பரபரப்பான, ‘உலகெங்கும் முதல் முறையாக’க் காண்பிக்கப்படும் ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பி லாபம் தேடும் வியாபார நோக்கோடு ஜாக்கையும், அவனைப் […]
காற்றாடி விடும் காலங்களில் அறந்தாங்கி புதுக்குளக் கரை பட்டம் விடும் எங்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். நான் எதையும் வித்தியாசமாகச் செய்வேன். எல்லாரும் ஒற்றைப்பட்டம் விட நான் 7 பட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து பறக்கவிட்டேன். பத்துக் கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள ஏகப்பட்ட மக்கள் கூடிவிட்டனர் என் பட்டத்தைப் பார்க்க. பம்பரக் கயிறு தடிமனில் நூல். இன்னும் ஒரு பந்து நூலைச் சேர்த்தால் இன்னும் உயரமாகப் பறக்கும். ஆசைப்பட்டேன். பந்துநூல் தயார். எப்போதும் என்னுடனேயே இருப்பான் கரீம். […]
“சார்… உங்களுடைய காருக்கு சினிமாவில் நடிக்க சான்ஸ் ஒண்டு கிடைச்சிருக்கு. சம்மதமா?” சினிமாத்துறையைச் சார்ந்த ஒருவர் சாந்தனிடம் ரெலிபோனில் கேட்டார். சாந்தனின் உற்ற நண்பன் ஒருவன் மூலம் இந்த வாய்ப்பு சாந்தனுக்குக் கிட்டியது. சாந்தன் சுற்றுலாப் பயணிகளை தனது காரில் சுற்றிக் காண்பிப்பவன். கிலோமீட்டருக்கு 15 ரூபாய்கள் வீதமும், ஒரு நாளைக்கு குறைந்தது நானூறு கிலோமீட்டர்களுக்கு மேல் பயணம் செய்வீர்களாயின் – சாரதிக்கான உதவித்தொகை 300 ரூபாய்களும் அவனுக்குக் கொடுக்க வேண்டும். காருக்கான எரிபொருள், மற்றும் அவனுக்கான […]
கிழவன் என்பது தலைவனைக் குறிக்கும் அவன் கார்காலத்தில் வருவேன் என்று கூறிப் பிரிந்து சென்றான். ஆனால் வினை முடித்துக் கார்காலம் வருவதற்கு முன்னமே வந்து விட்டான். அப்படி வந்தவன் கார்காலத்தைப் பாராட்டிக் கூறும் பத்துப் பாடல்கள் உள்ளதால் இப்பகுதி இப்பெயர் பெற்றது. இப்பத்துப் பாடல்களும் தலைவன் கூற்றாகவே இருக்கின்றன. =====================================================================================1.ஆர்குரல் எழிலி அழிதுளி சிதறிக் கார்தொடங் கின்றால், காமர் புறவே; வீழ்தரு புதுப்புனல் ஆடுகம் தாழிருங் கூந்தல்! வம்மதி, விரைந்தே! [ஆர்குரல்=மிக்க ஒலி; எழிலி=மேகம்; […]
கே.எஸ்.சுதாகர் பாடசாலைக்கு முன்னால் நின்று பார்க்கும்போது கந்தசுவாமி கோவிலின் முன்புற தரிசனம் தோன்றும். பாடசாலைக்கும் கோவிலுக்கும் இடையே 50 மீட்டர்கள் தூரம் இருக்கும். நேரிய பாதை. கோபுரத்தின் ஒரு பகுதியையும், எட்டுக்கால் மண்டபத்தின் ஒரு கரையையும் பாடசாலைக்கு முன்னால் நின்றபடியே பார்க்கக்கூடியதாக இருக்கும். தினமும் அந்த தரிசனத்துடன் தான் எல்லா மாணவர்களும் பள்ளிக்குச் செல்வார்கள். கோபாலன் கோவிலுக்கு ஒரு கும்புடு போட்டுவிட்டு பாடசாலைக்குள் செல்கின்றான். நான்காம் வகுப்புப் படிக்கின்றான். நெற்றியிலே திருநீற்றுக் கீற்று, மத்தியிலே சந்தணப்போட்டு. பாடசாலைக்கென்று […]