மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் -3 ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல ! ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல ! ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, […]
தமயந்தி நூல்கள் அறிமுகம் ————————————— 30 – 09- 2012 * ஞாயிறு மாலை 6 மணி., ஓசோ பவன்,எம்.ஜி.புதூர் , திருப்பூர். தலைமை: சுப்ரபாரதிமணியன் பங்கேற்போர்: சுப்ரபாரதிமணியன்,சுகன்யா, சுபமுகி,சாமக்கோடாங்கி ரவி, வெங்கடேசன், சிவதாசன், ஜோதி, மூர்த்தி * * தமயந்தி நூல்கள்: நிழலிரவு ( நாவல்), வாக்குமூலம், அக்கக்கா குருவிகள், சாம்பல் கிண்ணம் ( சிறுகதைகள்) வருக! கனவு* 8/2635, Pandiyan Nagar, TIRUPUR – 641 602. S. India. 9486101003 […]
— ரமணி கோபமோ தாபமோ காமமோ காதலோ எதையும் வாய்ச் சொல்லாய்ச் சொல்லாது கவிதைக்குள் பதுக்கிவிடலாம். படித்துப் பார்த்தபின் கோபமும் தாபமும் காமமும் காதலும் இரட்டிப்பானது தனக்கென்று புலம்புவாள் மனைவி — ரமணி
– நாகரத்தினம் கிருஷ்ணா 1. உ.வே.சா “தம்மின் தம்மக்கள் அறிவுடமையை” மருந்தாளுனர் பையன் மருத்துவர்; தாலுக்கா அலுவலக ஊழியர் மகன் மாவட்ட ஆட்சியர்; எனப் பொருள்கொள்ளாமல் இரு வேறு காலத்தைச்சேர்ந்த ஒரு […]
கி.பி. 2050 பவானி 60 – ‘செஞ்சி அழிந்து சென்னை பட்டினம் உருவாயிற்று‘ – அப்படீங்களா? – உன் பேரு என்னன்னு சொன்ன? – பவானி, உங்கள் சினேகிதி ஹரிணியுடைய பெண். – புதுச்சேரின்னு சொன்ன ஞாபகம்? – தற்போதைக்கு புதுச்சேரி. பிரான்சு நாட்டிலிருந்து வந்து மூன்று மாதமாகுது நல்ல கோதுமைநிறத்தில் வயதுக்குப்பொருத்தமின்றி மனிதர் ஆரோக்கியமாகவே இருந்தார். கோடைவெயில் நிறத்தில் குர்த்தாவும் பைஜாமாவும், அவர் உயரத்திற்கு நன்றாகவே பொருந்தியது. தலைமயிர் வெள்ளைவெளேர் […]
புனைப்பெயரில் ——————- எனக்கு பொருளாதார, இன்பெலெஷன் ரீதியாக பேசத் தெரியாது… ஆனால், சமூக ரீதியாக சில வினாக்கள்… என்னைப் பொறுத்தவரை பன்னாட்டு நிறுவனங்களும் இந்த இடைத் தரக பன்னாடைகளும் ஒன்றுதான். சில்லறை கடைக்காரரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமாம்..? ஆனா, என் கேள்வி வேறு… நீங்கள் காய்கறி கடையோ, பலசரக்கு கடையோ திறப்பதாக இருந்தால், ஒரு குறிப்பிட்ட ஜாதியினராக இருந்தால் தான் முடியும்… அதனால், தான் நாடார் கடைகள் இருக்கும். அதை விட்டால் முஸ்லீம் கடைகள் […]
கவிதை தொன்மையானது. எத்தனையோ நூற்றாண்டுகளாக உலகின் எல்லாப் பாகங்களிலும் பயனில் இருந்து, பல துறையைச் சார்ந்தவர்களாலும் எழுதப்பட்டு வாசிக்கப்பட்டு செம்மைப்படுத்தப்பட்டு உணர்வுகளின் மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. இருப்பினும் கூடவே கவிதை வாழ்க்கைக்குத் தேவையா எனும் கேள்வியும் இருந்து வரவே செய்திருக்கிறது. அதற்கு விடையாக வாழ்க்கையின் அத்தனை கூறுகளையும் தன் எல்லைக்குள் கொண்டு வந்து காட்டியிருக்கிறது, காட்டிக் கொண்டிருக்கிறது கவிதை. தனது முதன்மையான குறிக்கோள் அழகை ஆராதிப்பதிலோ, தத்துவங்களைப் பொழிவதிலோ, கருத்துக்களை நம்ப வைப்பதிலோ அன்றி கற்பனையோ […]
க. சோதிதாசன் அவள் ஓவியம் வரைபவள் கண்ணீர்க் கோடுகளை நன்றாக கீறுவாள் தனிமையை தீட்டி இருக்கிறாள் அடக்கு முறையை சித்தரிக்க முடிந்திருக்கிறதுதுன்பத்தையும் சோர்வையும் சொல்பவை பல ஓவியங்கள் பலவீனத்தை படமாக்கி இருக்கிறாள் வீடும் பணிச்செயல்களும் உயிர்ப்பானவையாக இருக்கும் இருளை இணைக்க முடிந்திருக்கிறது ஆனால் விடுதலையையும் ஒளியையும் இறுதி வரை அவளால் வரைய முடிந்திருக்கவில்லை.. க. சோதிதாசன் யாழ்ப்பாணம் இலங்கை. drsothithas@gmail.com
தங்கம்மூர்த்தி எனக்கே எனக்கென்றிருந்த ஒரே ஒரு நட்சத்திரமும் நேற்றிரவு திருடு போய்விட்டது. நெடுவானில் தவித்தபடி அலையும் என்னைக் கவ்விக்கொள்கிறது இருள். இருளோடு இணைந்து பயணித்து ஒளி தேடி அலைந்து களைத்து இருளுக்குள் இருளாகிறேன் புலரும் கலை புரியாமல்.
சு.துரைக்குமரன் பெரும்பாலும் உற்சாகத்தோடு தொடங்கும் பயணங்கள் மறுமுனையின் தொடக்கத்தில் கசப்பின் நுனியைத் தொட்டுவிட்டே தொடருகின்றன அசதியும் வசதிக்குறைவும் தரும் கசகசப்பில் ஊரத்தொடங்கும் மனமும் உடலும் தகித்துக் கிளர்கின்றன கசப்பைக் கக்கியபடியே திட்டமிடலும் எதிர்பார்ப்பும் தாக்கும் ஏக்கத்தின் எதிரொளி பார்வையிலும் பின் வார்த்தையிலும் பற்றி எரிகின்றது பரிமாற இயலாத எண்ணங்களின் ஏற்ற இறக்கங்கள் சங்கடத்தைச் சரிபார்ப்பதில் நுனிபற்றிய கசப்பு வேரையும் விட்டுவைப்பதில்லை அதீத அலட்சியத்தாலும் அழுந்திப்பிதுங்கிய பெருமூச்சிலும் இருப்பையே விசாரணைக்குள்ளாக்கும் கேள்விகளோடு முடிகின்றன பயணங்கள் ஏதொன்றும் நிகழாததுபோல் மீண்டும் […]