சு.பசுபதி, கனடா 1. அறிமுகம் யாப்பிலக்கண நூல்களின் வரலாறு தமிழிலக்கிய வரலாற்றுடனும், கவிதை வடிவங்களின் வளர்ச்சியுடனும் இணைந்து நடைபோடும் ஒரு களம். சங்க காலத்தின் ஆசிரியப்பாக்கள், நீதிக் காலத்தின் வெண்பாக்கள், காப்பிய காலத்தின் விருத்தங்கள், சிற்றிலக்கிய காலங்களின் சந்தங்கள், பிரபந்தங்கள் முதலியவற்றின் வளர்ச்சிகள் புதிய யாப்பு நூல்கள் எழக் காரணங்களாய் இருந்தன. கால வரிசைப்படி அத்தகைய வரலாற்றை ஒரு பருந்துப் பார்வையாய்ப் பார்ப்பதே இந்தக் கட்டுரையின் முக்கிய நோக்கம். நூல்களில் ஏற்பட்ட வளர்ச்சிகளும், மாற்றங்களும் […]
(02.02.1969 ஆனந்த விகடனில் வெளியானது. கவிதா பப்ளிகேஷன்ஸின் “கோபுரமும் பொம்மைகளும்” எனும் என் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது.) ஜோதிர்லதா கிரிஜா நிர்மலாவின் இமைகள் தாழ்ந்திருந்தன. ‘டைப்’ அடித்தது சரியாக இருந்ததா என்பதை அவள் படித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த சாரங்கன் தன்னையும் அவளையும் தவிர வேறு யாருமில்லை என்கிற நிலையில், துணிவுற்று – அவள் குனிந்துகொண்டிருந்தாள் என்பதால் தயக்கமற்று – கண்கொட்டாது அவளைக் கவனித்தான். அடர்த்தியான கூந்தல் அலை அலையாய் நெளிந்து […]
அழகியசிங்கர் இக் கதை மிகக் குறைவான பக்கங்களில் முடிந்து விடுகிறது. இந்தக் கதை எப்படி ஆரம்பிக்கிறது என்றால் தன்னுடைய பையன் கோபுவிற்குப் பாட்டுச் சொல்ல விரும்புகிறாள் இந்திரா. பையன் கோபுவிற்கு அதில் விருப்பம் இல்லை. அவன் கராத்தே வகுப்பில் சேர துடியாய்த் துடிக்கிறான். இந்திரா சொல்கிறாள் : “நீயும் இரண்டு பாட்டுப் பாடணும்தான். பாட்டாக் கத்துக்கலேன்னாலும் லகுவா ரெண்டு பஜனை பாட்டாவது கத்துக்கலாம்,”என்கிறாள். அப்போதுதான் கோபு கராத்தே வகுப்பில் சேர விருப்பத்தை வெளிப்படுத்துகிறான். “அதெல்லாம் நம்பளுக்கு […]
எதற்கும் இருக்கட்டுமென்று அந்த சூரிக் கத்தியை உள் டவுசருக்குள் ஒளித்து வைத்துக் கொண்டான் திப்பிலி. வேட்டி டப்பாக்கட்டுக்கும் மீறி மேலே அது துருத்திக் கொண்டு தெரிகிறதா என்று கவனமாய்ப் பார்த்தான். மெயின் ரோடிலிருந்து விலகிச் செல்லும் மண் சாலையிலிருந்து குறைந்தது ஐநூறடி தூரத்தில் உள் வாங்கி இருந்தது அந்த மயானம். அடிக்கும் காற்றில் புகை பூராவும் மேலும் உள் வாங்கிப் பறந்து சற்றுத் தள்ளியிருந்த புது நகர் வீடுகளை நோக்கி வேகமாய்ச் சென்று கொண்டிருந்தது. […]
கடல்புத்திரன் “முதலில் இந்த தலை மறைகளை (முறை,கிறை பார்க்கிற ,மரபுகளை ) ஒழிக்கணும்”சாந்தன் உள்ளுக்குள் குமுறினான்.அவன் ஏற்கனவே …இவற்றை இனம் கண்டு தான் இருந்தான்.இருந்தாலும் எந்த ஒரு மாறுதலையும் அதில் ஏற்படுத்தி விட முடியவில்லை..ஆசிரியையின் பையன் என்ற பிம்பம் வேறு அவனை சுயமாக வாழ விடவில்லை என்று தோன்றுகிறது.அவன் அதை விடுதலைக்கு தாரை வார்க்கப் படட்டும் என்றே செயல்பட்டிருக்கிறான்.அதில் ஏற்பட்ட சிந்தனைகள் அவனை மூடி காலம் முழுதும் கரைந்து விடும் என்று நினைத்திருந்தான். மாறி விட்டது.சென்ற வாரம் […]
காவலுக்கு ஒரு நடைச்சித்திரத்தை அழகிய சிறுகதையாகக் கொண்டு வருவது எப்படி? மனிதர்களில்தான் எத்தனை வகை? ஆனால் எல்லோரையும் எல்லாவற்றையும் இருவரின் பேச்சில் வெளிக் கொணரும் கலைத்திறமை தி. ஜானகிராமனிடம் பளிச்சிடுகிறது. வெத்திலைக்கார வேதாந்தி (மனுஷன் பாம்பாட்டிச் சித்தரின், சிவவாக்கியரின் சிந்தனைத் தெறிகளை உள்வாங்கிக் கொண்ட சாயபு !) வாடிக்கையாளரின் வீட்டுக்கு வெத்திலை கொடுத்து விட்டுப் போக வருகிறார். அங்கே அவர் சந்திப்பது,பொல்லென்று வெளுத்த தலை, நெற்றியில் சந்திர வளையம் போல் திருமண், தள்ளாடித் தள்ளாடி முந்தானை பக்கம் தொங்கத் தொங்க […]
கோ. மன்றவாணன் எடிட்டிர் என்பதைத் தமிழில் எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. திருத்தர் என்கிறார்கள். செம்மையாக்குநர் என்கிறார்கள். இதுகுறித்துச் சரியான சொல்காண வேண்டும். அதுவரை செம்மையாக்குநர் என்றே குறிப்பிட விரும்புகிறேன். ஆங்கிலப் பதிப்பக உலகில் தொழில்முறை செம்மையாக்கம் உள்ளது. தமிழில் அப்படி இல்லை. என்றாலும் தெரிந்தோ தெரியாமலோ சிறுஅளவில் செம்மையாக்கப் பணி இங்கு நடந்துகொண்டுதான் இருக்கிறது. சிலர், தாங்கள் எழுதும் படைப்புகளை நூலாக்கும் போது, தமக்குத் தெரிந்த எழுத்தாளர்களிடமோ வாசகர்களிடமோ காட்டிக் கருத்துக் […]