அருமை மகனின் படுத்தும் சேட்டையால் பக்கத்து வீட்டு பையன் பங்காளி ஆனான் அவனுக்கு…! அடுத்த வீட்டுக்காரியிடம் அடுத்தடுத்து காபி பொடி, சர்க்கரை கடன் வாங்க… அவளும் உடன் பேச்சை நிறுத்தினாள் அடுத்த வீட்டுக்காரரிடம் நான் மட்டும் நட்பை வளர்க்க யார் கண் பட்டதோ ஊர் கண் பட்டதோ ஒதுங்கும் கழிவு நீரால் அதிலும் ஓட்டை விழ…! விரிசல் நட்பால் பிரிந்தன வீடுகள் பேச்சுகள் அற்று நிசப்தமாய் இரு வீடுகள்..! அனைத்தையும் வெட்டிய அடுத்த வீட்டுக்காரர் இருவரும் இணைந்தே […]
மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -10 ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல ! ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல ! ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, […]
“ உதிரி மனிதர்களின் உலகமும், சூழல் கேடற்ற நகரக் கனவும்” பிரபஞ்சன் திருப்பூர் மக்களின் வாழ்க்கை சார்ந்து, பனியன் தொழில் சார்ந்த மக்களின் வாழ்ககை பற்றிய சிந்தனைகளை தொடர்ந்து தன் படைப்புகளின் வழியே வெளிப்படுத்தி வருபவர் சுப்ரபாரதிமணியன். சாய்த்திரை நாவலில் நொய்யல் சுற்றுச்சூழல் சீர்கேடு பற்றியும் அந்த் நதியின் கலாச்சார விசயங்களையும் இலக்கியப்படைப்பாக்கியவர். இந்த நாவலில் அந்த நகரம் சார்ந்த சிந்தனைகளை வேறொரு கோணத்தில் எழுதியிருக்கிறார். உதிரி உதிரியான பாத்திரங்கள், கலங்கலான […]
:ஜெயஸ்ரீ ஷங்கர்,தில்லை. காலங்கார்த்தால ஃபோன் மணி அடித்து எழுப்பியது. எடுத்ததும், அம்மா தான்….விஷயம் பெரிசா ஒன்றும் இல்லை. ஆனால் அழைப்பில் அவசரம். இன்னைக்கு இங்கு ஸ்ரீவாரி கல்யாண உற்சவம் நடக்கப் போறது.. நீயும் எங்களோட கண்டிப்பா வந்து கலந்துககோ. இப்பவே சிதம்பரத்தில் இருந்து கிளம்பினால், சரியாயிருக்கும்…. வா….வந்து கல்யாணத்தைப் பார்த்துட்டுக் கூட நீ கிளம்பிக்கோ பரவாயில்லை. அம்மா ரொம்ப வற்புறுத்தி அழைத்த இடம் புதுச்சேரி. எப்போ கல்யாணம்…? ன்னு கேட்டேன். அது சாயந்தரமாத்தான்…..ஆனாலும் நீ கார்த்தாலயே வந்துடு….. சரியா… வெச்சுடறேன் […]
உரஷிமா தாரோ (ஜப்பான்) சித்ரா சிவகுமார் ஹாங்காங் நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பு, ஒரு கோடை மாலையில், உரஷிமா தாரோ என்ற வாலிபனொருவன், அலைவீசும் கடற்கரையில் அமைதியாக நடந்து கொண்டிருந்தான். அன்று அவன் மீன் பிடித்து, சந்தையில் விற்று, பணத்துடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அன்றைய தொழில் மிகவும் திருப்திகரமாக இருந்ததால், சற்றே மகிழ்ச்சியுடன் நடை பயின்று கொண்டிருந்தான். அவன் நடந்து கொண்டிருந்த வழியில், அவன் கண்களில், திடீரென்று ஒரு ஆமை தென்பட்டது. ஆமை.. பாவம்.. கேட்பாரற்று தன்னுடைய […]
நாகரத்தினம் கிருஷ்ணா 51. மயக்கம் தெளிந்திருந்தேன். பறவைகளும் விலங்குகளும் கூடி உரையாடுவதுபோல குரல்கள் தெளிவின்றி கேட்டன. வீட்டின் முன்வாசலிலிருந்த பூவரசமரங்களிலும், இடது புறம் களைத்து காலை பரப்பியபடி வாயில் நுரையொழுக கண் துஞ்சும் எருதுகளிடமும் வெக்கையின் பாரிய வீச்சு. விநோத கயிறுகளால் இழுப்பட்ட சர்க்கஸ் கூடாரம்போல வீட்டு வாசலை வெயில் மூடியிருந்தது. என்னைக் கண்டதும் அலை இயக்கம் நின்ற கடல்போல அங்கே மௌனம். விழல் வேய்ந்து கீழே சிமெண்ட் மெழுகிய அக்கொட்டகை […]
சாகித்திய அகாதெமி விருது குறிஞ்சிச்செல்வர் டாக்டர் கொ.மா.கோதண்டம் குறிஞ்சிசெல்வர் டாக்டர் கொ.மா.கோதண்டம் அவர்களுக்கு இந்த ஆண்டிற்கான (2012 ) ‘சாகித்ய அகாதெமியின்’ பால சாகித்ய புரஷ்கார் விருது கிடைத்துள்ளது. நிவேதிதா புத்தகப்பூங்கா வெளியிட்ட ’காட்டுக்குள்ளே இசைவிழா’ எனும் சிறுவர் நூலுக்கு இந்த விருதை குறிஞ்சிச் செல்வர் பெறுகிறார் குறிஞ்சிச் செல்வர் கொ. மா. கோதண்டம் அவர்கள், 15. 9. 1938 இல் கொட்டுமுக்கல மாடசாமி ராஜாவுக்கும், சீதாலட்சுமி அம்மாளுக்கும் பிறந்தார். மனைவி ராஜேஸ்வரிகோதண்டம் எம்.ஏ. ஹிந்தி படித்தவர். […]
முன் பின் தெரியாத ஒரு அனாதைச் சாவிலிருந்து திரும்பும் ’அவனை’ வழி மறைப்பான் முன்வாசலில் முதியவன் ஒருவன். முதியவன் கால்கள் மண்ணில் வேர் கொள்ளவில்லையா? சதா அழுக்கு சேரும் கோணிப்பை போன்ற கிழிந்த சட்டையில் கிழட்டு வெளவாலாய் அவன் தொங்கிக் கொண்டிருப்பது போலத் தோன்றும். முதியவன் வாழ்ந்தும் செத்தும் கொண்டிருப்பதை விழிகள் திறந்தும் மூடியும் சொல்வான். அப்போது பெய்து முடிந்த அந்தி மழைக்குப் பின்னால் தான் அவன் வந்திருக்க வேண்டும். […]
(செப்டம்பர் 11 பாரதியார் நினைவு நாள் சிறுகதை:) மலர்மன்னன் ரயிலடியில் இறங்கி வெளியே வந்த ராமசாமிக்குக் கிழக்கு மேற்குத் தெரியவில்லை. பொழுது அப்போதுதான் புலர்ந்து கொண்டிருந்தது. எதிராளி முகந் தெரிய ஆரம்பிக்கவில்லை. புதுச்சேரி அவருக்கு முன்பின் அறியாத ஊர். இங்கே யாரிடம் என்னவென்று விசாரிப்பது? அவன் வெறித்துப் பார்த்துக்கொண்டு நிற்பதைப் பார்த்து ஓடி வந்தான், ஒரு ஆள். “சாமீ, வண்டி வேணுமா” என்றான். ‘சரி’ என்று அவன் பின்னால் நடந்தான். அந்த […]
முகில் தினகரன் திரைப்படங்களில் கதாநாயகி மழையில் நனைந்தபடி ஓடிச் சென்று ஒரு குடிசையில் ஒதுங்குவதையம் குடிசைக்குள் அமர்ந்திருக்கும் கதாநாயகன் நனைந்த நிலையில் நிற்கும் அவளின் மேனியழகில் சொக்கிப் போய் காதல் வயப்பட்டு நெருங்கி வந்து அணைப்பதையும், அவளும் அவன் அணைப்பில் மயங்கிச் சாய்வதையும், பார்க்கும் போதெல்லாம் சிரிப்புச் சிரிப்பாய் வரும் சாவித்திரிக்கு. ஆனால் இன்று அந்தக் கதாநாயகியின் சூழ்நிலை நிஜத்தில் அவளுக்கே ஏற்பட்ட போது அவளுடைய மனநிலை வேறு விதமாயிருந்தது. சிரிப்பு வரவில்லை மாறாக…எதையோ தேடும் ஆவல்…எதிர்பார்ப்பு […]