This entry is part 16 of 19 in the series 25 ஜூன் 2023

கோவிந்த் பகவான்

மூதாதையரின் தொன்ம கிணற்றிலிருந்து

நீர் இறைத்துக்கொண்டிருக்கிறாள் ஒருத்தி.

அடி ஆழம் வரை தொங்கும் கயிறு

பல நூற்றாண்டுகளின் நீளம்.

மூச்சிரைக்க அவள் இறைக்கும்

வாளி நீரிலிருந்து

கொஞ்சம் கொஞ்சமாய்

வழிந்து கண்டிருக்கிறது

இப்பெரும் வாழ்வு.

    -கோவிந்த் பகவான்

Series Navigationடைட்டானிக் கப்பலால் மீண்டும் உயிரிழப்பா?நான் ஒரு மலையாதல் அல்லது என்னில் ஒரு மலை உருவாதல்