<strong>ஊடகவியலாளர் பாரதி இராசநாயகம் எம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார்</strong>

ஊடகவியலாளர் பாரதி இராசநாயகம் எம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார்

குரு அரவிந்தன் சிரேஸ்ட ஊடகவியலாளரான, பலராலும் அறியப்பட்ட பாரதி இராசநாயகம் அவர்கள் தனது 62 ஆவது வயதில் திடீரென எம்மைவிட்டு நேற்றுப் பிரிந்த செய்தி (9-2-25) அதிர்ச்சி தரக்கூடியதாகவே இருக்கின்றது. ஊடக தர்மத்தை கடைசிவரை கடைப்பிடித்த இவர், போர்ச் சூழலில் பல…
`பறவைகள்’ நூல் அறிமுகம்

`பறவைகள்’ நூல் அறிமுகம்

கே.எஸ்.சுதாகர் மாலினி அரவிந்தன் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.தற்போது கனடாவில் வசிக்கின்றார். கணக்காளராகவும், அதே நேரத்தில்பீல் பிராந்தியக் கல்விச் சபையில் சர்வதேச மொழித்திட்டத்தின் கீழ்ப்பகுதி ஆசிரியராகவும் கடமை புரிகின்றார். பல இலக்கியப் போட்டிகளில்பரிசு பெற்றுள்ள இவரின் படைப்புகள் கனடா உதயன், தமிழர் தகவல்,தினக்குரல்…
துணை

துணை

புத்தகக்கடைக்கு  மனைவியையும்  அழைத்துச்சென்றேன்  வயோதிகத்தில்.  கோயில்,குளமோ போகாமல்  புதுமைப்பித்தனையும்  கி.ரா.வையும், பிரமீளையும்,  ஜெயகாந்தனையும் காட்டியவுடன்  மிரண்டுப்போய்,  மயிலை, கபாலீஸ்வரர் கோயிலுக்கு  வழிக்கேட்டாள்.  அந்த தெய்வம்  இங்கும் இருக்கின்றது  வா, வாங்கிப்படிக்கலாம்.  இனி  படியேறி, முருகனை அடையமுடியாது.  முட்டிவலி, முதுகுவலி,  கைக்கால் குடைச்சல். …
கவிதைகள்

கவிதைகள்

எனக்கில்லை                                                                       மத்திய சிறைக்குள்ளே                              நுழைவதென்றாலே                              மனத்தில் ஓர் அச்சம்தான்.                              மாறாத ஒரு நடுக்கம்தான்.                              நான்கைந்து தடுப்பு                              வாசல்களிலும்                              நல்லமுறைச் சோதனைகள்.                              கோரிக்கைகளை வென்றெடுக்க                              ஆசிரியர் போராட்டத்தில்                             …
வசந்தம் வரும்

வசந்தம் வரும்

அப்போதுதான் வந்தமர்ந்த  புதுப்பறவையை பார்த்தேன்.  இணைக் காண சோகம்  பாடும் தேடலில் கண்டேன்.  எங்கிருந்தோ  வந்த  வண்ணத்துப்பூச்சி  பறவையின்  முகத்தில் அமர்ந்து சென்றது.  அது கொடுத்த  மகரந்த யாழின்  பாடலில்  பல்லாங்குழி வாசித்தது  புதிய பறவை.  தேடி  நிதம் சோறு தின்னும் …
சாம்பல்

சாம்பல்

வளவ. துரையன் வீடு முழுவதும் உன்பெருஞ்சினத்தைஇறைத்து வைத்திருக்கிறாய்அதன் வெப்பம்வீதியெலாம் கனக்கிறதுஎப்பொழுது அதுஅணையுமென்று சிலபுறாக்கள் காத்திருக்கின்றனவிதையே இல்லாமல்பெரிய மரமாக வந்துநிற்கும் மாயம்உன்னிடம் உள்ளதுஎந்த அறைக்குள்நுழைந்தாலும் உன்வெப்ப வாசனைதான்நாசியைக் கருக்குகிறதுஅணைப்பதற்குஅறுசுவை நீர் தேடிஅலைவதே என்வாழ்வின் பெரும்பயணம்எந்த எரிமலையும்தணிந்துதான் தீரவேண்டும்சாம்பல் எப்போது வரும்?

ஆறுதலாகும் மாக்கோடுகள்

ரவி அல்லது முக்கோணத்தில்முளைத்திருக்கும்கொம்பான வளைவுகளையும்.சதுரத்தில்நெளிந்திருக்கும்பின்னல்கோலங்களையும் பார்க்கும்பொழுதெல்லாம்அம்மாவின்நினைவு வரும்.அவரைப் போன்றஒருவர்இங்கிருப்பதுசற்றேஆறுதலாகத்தான்இருக்கும்.கடக்கும் கணம்நேசத்தில்ஏக்கமாக மனம் எட்டிப்பார்க்கும்.கவனம் பெறாதமாக்கோலத்தைப்போலகண்டுக்கொள்ளப்படாமல்இங்கு இவர்கள்இருப்பார்களோ என்றகவலையோடுகடப்பதுஒவ்வொரு முறையும்நடந்தேறும்இல்லாமையின்இன்னலின்நெருடலாகஎங்கேயும்எப்பொழுதும். -ரவி அல்லது.ravialladhu@gmail.com

பெயின்ட் அடிக்கும் விடலை

சசிகலா விஸ்வநாதன் பதினெட்டு வயது இளந்தாரி பையன் பல வண்ணங்கள் தெறித்து,பழசான ஆங்காங்கே நைந்து போன கால்சராய்; என்றோ மஞ்சள் வண்ணத்தில் இருந்து  இன்று பல வண்ண தெறிப்புகளின் கோலம்  வண்ணக் கலவையில் அவசரமாய் முக்கியெடுத்து  பிழிந்தும், பிழியாமலும் உலர்த்தினாற் போல்,…
உறைந்து போகுமா நயாகரா நீர்வீழ்ச்சி?

உறைந்து போகுமா நயாகரா நீர்வீழ்ச்சி?

குரு அரவிந்தன் நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்து போயிருப்பதாக நண்பர் தெரிவித்ததைத் தொடர்ந்து சென்ற சனிக்கிழமை நயாகரா நீர்வீழ்ச்சியைப் பார்க்கப் போயிருந்தேன். பல தடவை கனடிய பக்கமுள்ள 187 அடி உயரமும், 2590 அடி அகலமும் கொண்ட பெரிய நீர்வீழ்ச்சிக்கு அருகே படகில்…
சென்றிடுவீர்  எட்டுத்  திக்கும்!

சென்றிடுவீர்  எட்டுத்  திக்கும்!

சோம. அழகு அமெரிக்க வாழ் தமிழர்களின் தமிழை வைத்து அவர்களது சொந்த ஊரைக் கண்டுபிடிக்கவே இயலாது. ஏனெனில் எல்லா வட்டார வழக்குகளையும் விழுங்கிவிட்ட ஒரு செயற்கையான மேட்டுக்குடித் தமிழ் அது. குழந்தைகளின் தமிழைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். எங்கேனும் எப்போதேனும் அவர்களிடமிருந்து…