This entry is part 4 of 9 in the series 29 ஜூன் 2025

பணப்பையைப் பறித்து

பறந்தது குரங்கு

அறக்கப் பறக்க

துரத்தியது மனிதக்கூட்டம்

பையைக் கிழித்து

பணங்களை 

எறிந்தது குரங்கு

பணம்!பணம்!பணம்!

கட்டிச் சேர்த்தது

காற்றில் பறக்கிறது

பறத்தல்  கண்டதும்

குரங்குகளாகிப்போன

மனுஷப்பயலைப் பார்த்து

இளித்தது குரங்கு

அமீதாம்மாள்

Series Navigationஒரு பெண்ணும், சில ஆண்களும்சிதறுண்ட சிறுத்தை. (1 நிமிடக்கதை)