வசந்ததீபன்
_______
தனிமை சுரந்தொழுகும்
நடுநிசியில்
மெளனம் வீற்றிருக்கிறது
த்யானத்தில்.
கடிகார ராட்டினத்தின்
காலச் சுழலில் தொங்கியபடி
பென்டுலமாக
இடமும் வலமுமாக
நில்லாது அலைவுறுகிறேன்.
மணித்துளிகள் அருந்திய
இரவின் இறப்பானது
மெலிதான ஆற்றலாக
இனம் பிரிக்கவியலா
ரீங்கார ஒலிப்பாகிறது.
கனவு மரத்தினடியில்
போதிசத்துவர்
துண்டுப்பகலை
ஏந்தியபடி நிற்கிறான்.
வசந்ததீபன்