This entry is part 7 of 9 in the series 17 மே 2026


*****************************
 வாழ்வது அவசியம்
**************************

“உயிர்த்திரு உயிர்த்திரு” என்கிறது
என் மேல் மோதும் காற்று

“உரமுள்ளது உரமுள்ளது” இந்த விதை
என்கிறது உள்ளே ஒரு எண்ணம்

“உனது நீதி வெல்லும்” என்று
மழையிலிருந்து செய்தி வந்து
ஒரு துளிச் சொட்டென

மீண்டு கொள்ளத்தான் வேண்டும்
மாண்டு போகும் வினாடிகள் என்னைச் சந்திப்பது
தானாய் நிகழும் வரை.

  –  பா. சத்தியமோகன்

Series Navigationஅட!மழை புராணம் – 32 -யோசித்தால் வாழும் மழை