This entry is part 2 of 9 in the series 17 மே 2026

வணக்கம்,
யாவரும் நலமா?
காற்றுவெளி இதழின் வைகாசி இதழ் தங்கள் பார்வைக்கு வருகிறது.
இதழ் கிடைக்கபெற்றவர்கள் கருத்துக்களைப் பகிர்வதுடன்,நண்பர்களுடனும் பரிமாறுங்கள்.
காற்றுவெளி இதழ் பற்றிய முழுமையான ஆய்வுக்கட்டுரைகளின் தொகுதி ஒன்றுடன்,இதழில் வெளிவந்த சிறுகதைகளின் தொகுதி ஒன்றும் வெளிவரவுள்ளது.சந்தாதாரருக்கு  அனுப்பிவைக்கப்படும்.
காற்றுவெளி ஆவணி  இதழ் மொழிபெயர்ப்புச் சிறப்பிதழாக வெளிவரும்.படைப்புகளை(பிற மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டவைகள்-கவிதைகள்,சிறுகதைகள்,மொழிபெயர்ப்புக் கட்டுரைகள்,மொழிபெயர்ப்பு நூல்களின் அறிமுகம்,பிற மொழித் திரைப்படங்களின் அறிமுகம்)அனுப்பிவையுங்கள்.
படைப்புகளை அனுப்புவோர் யூனிக்கோட் எழுத்துருவில்(எழுத்துப்பிழைகளின்றி) அனுப்புங்கள்.

காற்றுவெளி மின்னிதழின் சிறப்பிதழ்கள்:2026

ஆனி மாத இதழ்:மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ்.

ஆவணி மாத இதழ்: கவிதைச் சிறப்பிதழ்.

(கவிதை,கவிதைகள் சார்ந்த ஆய்வுக்கட்டுரைகள்,கவிதை நூல்களின் வாசிப்பனுபவம்,கவிதைச் சிற்றிதழ்களின் அறிமுகம்)

புரட்டாதி இதழ் :சிற்றிதழ் சிறப்பிதழ்.

ஐப்பசி இதழ்:சிறுகதைகளின் சிறப்பிதழ்

கார்த்திகை இதழ்: மாவீரர் சிறப்பிதழ்.

மார்கழி இதழ்:நம்மவர்களின் சிறுகதைகளின் சிறப்பிதழ்.

படைப்புக்களை அனுப்பி இதழ்களைச் சிறப்பியுங்கள்.


இணைந்திருப்போம்.
நட்புடன்,
முல்லைஅமுதன்

mullaiamuthan1954@gmail.com

Series Navigationயானைச் சுமைமாட்டு சந்தையில் விற்கப்படும் மனிதர்கள்….