This entry is part 3 of 10 in the series 21 ஜூன் 2026

ஒரு முல்லைப்பூவோடு

முதியவரின் உரையாடல்

‘கொடுத்துவைத்தவள் நீ

முகம் மலர்கிறாய்

முதிர்கிறாய்

உலர்கிறாய்

உதிர்கிறாய்

முடிகிறாய்

நானும்தான்

முதிர்ந்தேன்

உலர்ந்தேன்

ஆனால்…….

உதிரவும் முடியவில்லை

ஒட்டவும் முடியவில்லை

ஆயுத எழுத்தாய் 

என் ஆயுள் கழிகிறது’

அமீதாம்மாள்

Series Navigationகாற்றுவெளி மின்னிதழின்(2026) ஆவணி மாத இதழ் மொழிபெயர்ப்புச் சிறப்பிதழாககொலுசு மாத இதழ்