This entry is part 12 of 15 in the series 22 நவம்பர் 2026

பாலமுருகன்.லோ

“கலா, தெரியுமாடி சேதி…”

“ஏனுங்க்கா, என்னன்னு சொன்னாதானே தெரியும்? யாரைப் பத்திப் பேசுறீங்க, இல்ல எதைப் பத்திச் சொல்லுறீங்கன்னு விலாவாரியா சொன்னாதானே தெரியும்?”

“இல்லடி கலா, நியூஸ் பார்த்தியா? நம்ம தெருவுல உன் வீட்டிற்கு ஐந்து ஆறு வீடு தள்ளி இருக்கும் மணிகண்டன், அந்த ஆளோட சம்சாரம் மற்றும் அவளோட கூடப் பொறந்தவங்க, அம்மான்னு ஒரு குடும்பம் இருந்தாங்கல்ல?”

“ஆமாம்க்கா, அவங்களுக்கு என்ன இப்போ?”

“கொஞ்ச நாளா அந்த ஆளை மட்டும்தான் பார்க்க முடியுது.”

“ஆமாடி, அதைப் பத்தித்தான் சொல்ல வந்தேன்.”

“என்னவாம்க்கா?”

“அடியே, நியூஸைக் கேட்டதும் அடிவயித்துல புளியைக் கரைக்குதுடி.”

“என்னக்கா சொல்லுற?”

“அந்த வீட்டுல இருந்த மணிகண்டனின் சம்சாரம், அவளோட கூடப் பொறந்தவங்க, அப்புறம் அவங்க அம்மாவும் இப்ப இல்லையாம்.”

“எங்க போயிட்டாங்களாம் அக்கா?”

“ஏண்டி, அவங்க எல்லாரும் செத்துப் போயிட்டாங்களாம்.”

“என்னக்கா சொல்லுற! நெஜமாவா? உண்மையாத்தான் சொல்லுறியா?”

“ஏண்டி, நான் ஏன் பொய் சொல்லப் போறேன்? நியூஸுல சொன்னதை நான் உனக்குச் சொல்லுறேன்.”

“ஏனுங்க்கா, எங்க வீட்டுக்காரர்கிட்ட இந்த டி.வி பெட்டியைச் சரி செஞ்சு கொடுங்கன்னு நான் கடந்த பத்து நாளா கேட்கிறேன். அந்த மனுஷன் காதுலயே போட்டுக்க மாட்டேங்கிறாரு. டி.வி மட்டும் இருந்திருந்தா நானும் இந்தச் சேதியைப் பார்த்திருப்பேன்.”

“என்ன ஆச்சாம்? ஏன் செத்தாங்களாம்?”

“ஏண்டி, அவங்க தற்கொலை செய்துக்கல, அடியே கலா, அவங்களைக் கொலை செஞ்சுட்டாங்களாம்.”

“ஏனுங்க்கா, அவங்களைப் போய் யாருக்கா கொல்லப் போறா?”

“நீதாண்டி அப்படி நினைக்கிற. நியூஸுல புட்டுப் புட்டு வைக்கிறானுங்க.”

“நீ என்னன்னு நினைச்ச? குடும்பத் தலைவனா அந்த ஆளு இருக்கிறாருன்னுதானே?”

“லீலாக்கா, ஆமாம்க்கா, அவருதானே குடும்பத் தலைவன்?”

“ஏண்டி, அதான் இல்லையாம்! அந்த ஆளு வீட்டோட மாப்பிள்ளையாம். அதான் மாமியார், பொண்டாட்டிக்கூட அவரு இவங்களோட ஒண்ணா இருக்கிறாராம்” என்றாள் லீலா.

“ஏனுங்க்கா, லீலாக்கா அவருக்கு யாரும் இல்லையா? சொந்த பந்தம்னு ஒண்ணும் அவருக்கு இல்லையா?”

“இல்ல போல. அதான் அவரு மாமியார் வீட்டுக்கு வந்துட்டாரு.”

“லீலாக்கா, அதற்கும் இந்தக் கொலைக்கும் என்ன சம்பந்தம்?” வெங்காயத்தை நறுக்கிக்கொண்டே கேட்டாள் கலா.

“இருக்குடி. பாவம், ஒரு மனுஷன் எவ்வளவு வருஷம்தான் அடங்கிப் போவாரு?”

“ஏண்டி கலா, அந்த வெங்காயத்தைத் தண்ணியில போட்டு நறுக்க வேண்டியதுதானே? பாரு, இப்போ கண் எரியுது.”

“லீலாக்கா, எனக்குப் பழகிப்போச்சு; நீ வேணுமுன்னா முகத்தைக் கழுவிகிட்டு வாயேன். அதுக்குள்ள நான் இந்த வெங்காயத்தையெல்லாம் நறுக்கிடுறேன்.”

“சரி, அதுவும் சரிதான். நான் போய் முகத்தைக் கழுவிகிட்டு வந்துடறேன்” என்று சமையல் கட்டுச் சிங்கு இருக்கும் பக்கம் போனாள் லீலா.

ஒரு ஐந்து நிமிடங்கள் கழித்து மீண்டும் சமையல் கட்டிலிருந்து வந்து, கலா இருக்கும் இடத்திற்கு வந்து அமர்ந்தாள் லீலா.

“ஏனுங்க்கா, அப்படி அந்த அக்கா என்ன கொடுமை அந்த ஆளுக்குப் பண்ணுச்சாம்?”

“கலா என்னென்னமோ சொல்லுறானுங்க, அதைக் கேட்டவுடனே நம்பவே முடியல.”

“லீலாக்கா அப்படி என்னத்தான் சொன்னானுங்க நியூஸுல?”

“மணிகண்டன் கார் தான ஓட்டுறாரு. மாத வாடகைக்கு. அரசாங்கத்தில் பல பிரிவுகள் இருக்குல்ல, அதுல அந்த ஆளுடைய வண்டியையும் அவருக்குத் தெரிந்த ஒரு கார் குத்தகைக்காரர் இணைச்சிருக்காரு. இந்த ஆளும் காரை ஓட்டிக்கிட்டிருந்திருக்கு.”

“ஏனுங்க்கா, அதான் அந்த ஆளோட காருல அரசாங்கத்திற்காக ஓடிக்கிட்டு இருக்குன்னு எப்பவும் ஒரு ஸ்டிக்கரு கண்ணாடியின் உள்புறம் ஒட்டப்பட்டிருந்ததா?”

“ஆமாண்டி அதுவாத்தான் இருக்கும்.”

“சரி, அதுக்கும் இந்தக் கொலைக்கும் என்னக்கா முடிச்சுப் போடற?”

“ஏண்டி கலா, நான் எங்க முடிச்சுப் போடறேன்? இதெல்லாம் போலீஸ் விசாரணையில வெளியில வந்ததாம்.”

“அப்படியாக்கா! என்னத்த கண்டுபிடிச்சாங்க?” என்றாள் கலா.

“இந்த மணிகண்டன் தான் கொன்றிருக்கிறாராம்!” என்றாள் லீலா.

“லீலாக்கா, பார்த்தா அப்படி ஒண்ணும் தெரியலையே!” என்றாள் கலா.

“ஏண்டி, எந்தக் கொலைக்காரன் நான் கொலைச் செய்யப் போறேனு சொல்லுவான்?”

“அதுவும் சரிதான்” என்றாள் கலா.

“இல்லடி இப்படிக் கூட நடக்குமானு எனக்குப் புரியாத புதிராத்தான் இருக்கு இந்த கொலை.”

“லீலாக்கா என்னக்கா சொல்லுற? அப்படி என்ன புரியாத புதிரா இருக்கு?”

“இல்லடி கலா, பொதுவா கொலைக்காரனுக்கு ஒரு காரணம் இருக்கும், அதை வன்மமா இருக்கும். அதனால அவன் தன் வன்மத்தைப் போக்கிக்க கொலை செய்றான்.”

“ஆனா இங்க பொண்டாட்டி மட்டுமில்ல, அவளோட இருந்த சொந்தங்களையும் அவன் கொன்றிருக்கானுன்னா பாரேன்.”

“லீலாக்கா அப்ப என்ன வன்மம் இருக்கப்போகுது?”

“அதைக் கேட்டாதாண்டி எனக்கு மனசே ஒப்பல.”

“சரி சொல்லுக்கா நேரமாகுது, வீட்டுக்காரர் சாப்பிட வந்துடுவார், அதற்குள் நான் சமையலை முடிக்கணும்.”

“அந்த ஆளு வீட்டுல உள்ளவங்க அவரை ஒழுங்கா நடத்தலையாம். தினமும் சண்டை, அந்த ஆளை மரியாதை இல்லாம நடத்துறாங்களாம். பொண்டாட்டி மட்டுமில்ல வீட்டுல உள்ள எல்லாரும் அந்த ஆளைத் தரக்குறைவாவாத்தான் நடத்துறாங்களாம். அதனால அந்த ஆளு எல்லாத்தையும் கொன்னுட்டாறாம்.”

“என்னக்கா இது புதுத் தினுசாவுல இருக்கு, இப்படியும் கூட ஆட்கள் இருப்பார்களாக்கா?” என்றாள் கலா.

“அதாண்டி எனக்குப் புரியாத புதிரா இருக்குன்னு உன்கிட்ட சொன்னேன்” என்றாள் லீலா.

“இதுல என்ன விசேசமுன்னா, விசாரணையில நான்தான் செஞ்சேன்னு ஒப்புக்கொண்டு, போலீஸ்கிட்ட ‘இப்பதான் நிம்மதியா இருக்கு’ன்னு அந்த ஆளு சொல்லியிருக்கானாம் பாரேன்!”

கலா ஆச்சர்யத்துடன் லீலாவின் முகத்தைப் பார்த்தாள்.

-பாலமுருகன்.லோ✍️

Series Navigationசேரனின் இலக்கியப் புலம்: நவீன இலங்கைக் கவிதை, போர்க்கால சாட்சியம், புலம்பெயர்வு இலக்கியம்2025 ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு