கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் இருப்பதைப் பகிரும் இன்பமும்

  ஜி. ஜே. தமிழ்ச்செல்வி   நான் மாற்றுத்திறனாளி என்பது எத்தனை பேருக்குத் தெரியும் என்பது தெரிய வில்லை. ஆனால் நானே என்னை ஊனமானவள் என்று ஏற்றுக்கொள்ள அநேக வருடங்கள் தேவையாய் இருந்தன. குழந்தையாய் இருக்கும்போது நானும் போலியோ நோய் தீர்ந்து…

ஆட்டோ ஓட்டி

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி டர்ர்ர்ர்ரென்று டயர் தேயும் சப்தத்துடன் யு டேர்ன் அடித்துத் திரும்பியது அந்த ஆட்டோ. அதன் டிரைவர் அதிகம் குடித்திருந்தான். அதற்குள் ஒரு மூதாட்டி...தன் சுருக்குப் பையை திறந்து உள்ளே இருக்கும் சில்லறைகளைப் பொறுக்கி, அதிலிருந்து இரண்டு ஐந்து ரூபாய்…

தினம் என் பயணங்கள் – 47 யுக்தி

தினம் என் பயணங்கள் – 47 யுக்தி ஜி. ஜே. தமிழ்ச்செல்வி இந்த யுக்தி எனக்கு புதியதாகத் தெரிந்தது. அவன் நெடுநெடுவென்று வளர்ந்திருந்தான். மாநிறம். முகத்தில் அம்மைத் தழும்புகள், அவனை விகாரமாய் காண்பிப்பதற்கு பதிலாக வித்தியாசப்படுத்தியிருந்தது. அடர் கத்தரிபூ நிறத்தில், கருநிற…

தினம் என் பயணங்கள் -46

  எத்தனைத் துயரங்களோடு துவங்கி விட்டது இன்றைய தினம். (04.10.2015) ஏதோ முரண்பாடுக்கொண்ட எண்ணங்கள் மனதைக் கொத்தி உணவாக்கிக் கொள்ள முனையும் அத்தகைய எண்ணங்களில் இருந்து விடுபட முயன்றபடி தவழ்கிறது இன்றைய வாழ்வியல் பயணம். சாலை வெறிச்சோடி இருந்தது. சைக்கிள் பயணம்…
தினம் என் பயணங்கள் -45  இலக்கை நோக்கிய பயணம்!

தினம் என் பயணங்கள் -45 இலக்கை நோக்கிய பயணம்!

ஒரு வழியாய் அலுவலகங்களிலேயே பெரும்பாலும் வாழ்க்கைப் பொழுதும் கழிந்து கொண்டிருக்கிறது. யக்கோவ் குப்பேத்தாக்கோவ் (அக்கா குப்பை எடுத்து வாங்க அக்கா) என்று கூவும் பெண்மணியின் குரலோடு விடிந்தது இன்றைய இரவும். ஒருவழியாய் சீரான பாதையை நோக்கிப் பயணம் செய்கிறேன் என்று எண்ணுகிறேன்.…

தினம் என் பயணங்கள் – 44 மலர் அணிவது !

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி குழந்தை, கவிழப் பழகி, பின் கவிழ்ந்தபடி நகரப் பழகி, முழங்காலிட்டு நகரும், குழந்தைப் பருவம் போல், நானும் இந்த வயதில் முழங்காலிட்டு அந்த நீண்ட பாதையில் நகர்ந்து கொண்டிருந்தேன். முழங்காலிடுதலும் சில அரியக் காட்சிகளைக் கண்டுவிட ஏதுவாகும்…

அந்நியத்தின் உச்சம்

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி அவகாசம் கேட்கிறாய் கடந்த அத்தனை வருட அவகாசம் போதாதா? நின்று நிதானித்துப் பின் யோசித்தேன் மூளையைக் கசக்கியதில் உண்மை புலப்பட்டது. நீ அந்நியன் ! யாரோ ஒருவன் உன்னிடத்தில் என்னவனை நாடுவது பைத்தியத்தின் உச்சம் என்பது ! உறவிருக்கிறது…

சஹானாவின் மூக்குத்தி

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி இலியாஸ் ஒருக்களித்துப் படுத்திருந்தார். வழக்கமான அந்த குறட்டைச் சப்தம் கேட்கவில்லை. சுக்குக் காப்பி கொதிக்க வைக்கும் பாத்திரம் ஙொய் என்று நான் கொதித்து விட்டேன் என்று குரல் கொடுத்தது. இனி மேல் எழுந்து குளித்து நமாஸ் செய்துவிட்டு…

நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் -12

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி ஊஞ்லின் மீது அமர்ந்திருந்தாள் யாழினி. சுற்றிலும் பரந்து விரிந்திருந்த மணற் பரப்பு. இரண்டு ஊஞ்சல்கள் ஒரு சருக்கு மரம், ஒரு சாரியில் வைக்கப்பட்டிருந்ததென்னை மரம், அந்த தென்னை மரங்களை கடந்து சதுரமாய் ஒரு புல்வெளி. அதற்கு பார்டர்…

நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் -11

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி சாத்தனூர் அணை செல்லும் சாலை! சொர்ப்பனந்தல் என்ற அழகான ஊரின் அரசினர் உயர்நிலைப் பள்ளியின் எதிர்சாரியில் அமைந்திருந்தது. அந்த அறக்கட்டளை கிராமத்திலேயே உயர்ந்த அடுக்குமாடிக் கட்டிடங்களைக் கொண்டிருந்தது. அங்கு சிறுவர்களுக்கு இலவசக் கல்வியும், அனைத்து மதப் புத்தகங்களும் போதிக்கப்பட்டது.…