Articles Posted in the " அரசியல் சமூகம் " Category

 • வரலாற்றில் வளவனூர்

  வரலாற்றில் வளவனூர்

                                                           [ஆவணங்களால் அறியப்படும் அரிய வரலாறு]                 முனைவர் க. நாகராசன் ”வரலாற்றில் வளவனூர்” எனப்படும் அரிய நூலை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. லட்சுமி மூர்த்தி அவர்களால் எழுதப்பட்டு 1922- இல் சேகர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு கலை விளக்கப் பெட்டமாக அது காட்சி அளித்தது.                விழுப்புரத்தை அடுத்த பிரௌட தேச மகரஜபுரம் என்னும் வளவனூரில் பல கோயில்கள் நீண்ட நெடுங்காலமாக இருந்து வந்துள்ளன. ஜகன்னாத ஈஸ்வரர் கோயிலையும், லட்சுமிநாராயணப் பெருமாள் கோயிலையும் ஆய்வுப் பொருள்களாக […]


 • காலமும் கணங்களும் – பேராசிரியர் கைலாசபதி – இன்று டிசம்பர் 06 நினைவு தினம்

  முருகபூபதி “  கைலாசபதியை மீள வாசிப்போம்   “ இன்று முதல் ஐந்து நாட்கள் தொடர்  பன்னாட்டு கருத்தரங்கு                                                                          நம்மிடத்தில் – நம்மவர்களைப் பற்றிய     எதிர்பார்ப்பு   ஒன்று    உண்டு. அவருக்கு    கடிதம்    எழுதினேன் –  பதிலே இல்லை. கடிதமா ? ஐயோ – எழுத  நேரம்  எங்கே  கிடைக்கிறது.  அமர்ந்து  கடிதம் எழுதுவதற்கு    நேரம்    தேடி    போராடுகின்றோம். கோபிக்க வேண்டாம்.    உங்கள்     கடிதம்     கிடைத்தது.    பதில்   எழுத முடியாமல்      போய்விட்டது.     அவ்வளவு     பிஸி. இவ்வாறு     உரையாடுபவர்களை      நாம்    […]


 • தமிழை உலுக்கியது

  . கோ. மன்றவாணன்       அரசு மருத்துவ மனையில் இன்றோ நாளையோ என உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். இருக்கும் போதே தன் வாழ்நாள் சாதனையான நூலை வெளியீடு செய்யத் துடிக்கிறார். செயற்கை உயிர்க்காற்றுச் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அந்த நூலை வெளியிடுகிறார். எழுத்தாளர் இமையம் பெற்றுக் கொள்கிறார். இப்படி ஒரு நூல் வெளியீட்டு நிகழ்வு வேறு எங்கும் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். உயிர் கரைந்துகொண்டிருக்கும் நிலையில் நூல் வெளியீடு நடத்திய இந்நிகழ்வே முதல் நிகழ்வு ஆகும். […]


 • க்ரியா இராமகிருஷ்ணன் நினைவுப்பகிர்வு

  முருகபூபதி – அவுஸ்திரேலியா தற்காலத் தமிழ் அகராதியில் ஈழத்தமிழ்ச்சொற்களையும்  இணைத்த மூத்த பதிப்பாளர்                                               (  இம்மாதம்  17 ஆம் திகதி அதிகாலை சென்னையில்   கொரோனோ  தொற்றினால் மறைந்த மூத்த பதிப்பாளரும் இலக்கியவாதியுமான க்ரியா இராமகிருஷ்ணனுக்காக   நினைவேந்தல் இணைய வழி காணொளி  அரங்கு நேற்று முன்தினம்   நடைபெற்றது.  சிட்னி  அவுஸ்திரேலியா தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின்                            ( A.T.B.C ) வானொலி ஊடகவியலாளரும்  எழுத்தாளருமான கானா. பிரபா ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில்  தமிழ்நாட்டிலிருந்து பேராசிரியர் அ.ராமசாமி,  ஆவணப்பட இயக்குநர் […]


 • சில நேரத்தில் சில நினைவுகள்

  சில நேரத்தில் சில நினைவுகள்

  அமெரிக்காவில் 2020 இல்  நடந்து முடிந்த தேர்தலை  மதத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் எப்படி எதிர் கொள்வார்கள்? அமெரிக்க மக்களில் அதிகமானவர்கள் இறை நம்பிக்கைகொண்டவர்கள்.  டொனால்ட்   ட்ரம்ப்பும் சரி ஜோசப் பைடனும் சரி  பைபிளில் தங்களது உறுதியை எடுத்துக் கொள்பவர்கள் . அதிலும் பைடன் ஒரு ஐரிஸ் கத்தோலிக்கர் .  தலைவர்கள் அப்படிப்பட்டவர்கள் என்றால் மக்களும் அவ்வழியே .  இல்லையா ? ஆபிரகாமிய மதங்களது தொடக்கப்புள்ளியான  ஆபிரகாம்,  கடவுள் சொன்னதற்காகத்  தனது மகனைப் பலியிடத் துணிந்தவர்.  யூதர்கள் கடவுளின்  […]


 • “மக்கள் கலைஞன்”: S.V. சுப்பையா

  (குணச்சித்திர நடிகர் S.V. சுப்பையா அவர்களுடைய வாழக்கை மற்றும் திரைப்பயணம் குறித்த முழுமையான கட்டுரைகள் எதுவும் காணக்கிடைக்காத காரணத்தினால், அக்குறையினை நீக்கும் பொருட்டு இக்கட்டுரையை எழுதியுள்ளேன். இதிலுள்ள பல தகவல்களை S.V. சுப்பையாவினுடைய மூத்த புதல்வியிடம் நேரடியாகச் சென்று சேகரித்தேன். மேலும் இந்த ஆண்டானது S.V. சுப்பையாவின் பிறந்த நூற்றாண்டாகவும் அமைந்திருக்கின்ற காரணத்தினால் இக்கட்டுரையை வெளியிடுமாறு வேண்டிக்கொள்கிறேன். ) “மக்கள் கலைஞன்”: S.V. சுப்பையா முனைவர் ரமேஷ் தங்கமணி M.Sc., PhD., SLET., DIBT., DMLT., DOA., […]


 • சாம் என்ற சாமிநாதன் – ஐம்பதாண்டு கால நட்புறவு

    திருச்சி வாசகர் அரங்கின் முதல் கூட்டம் தொடங்கி இன்று வரை தொடரும் நட்பின் இழை. சாம் மறைவு மனதைக் கடக்க வைக்கிறது. வாழ்வைக் கொண்டாட்டமாய் எடுத்துக் கொண்டு உரையாடுவத அவருக்குக் கைவந்த கலை.  திருச்சி வாசகர் அரங்கு, திருச்சி நாடகச் சங்கம் என்று அவர் இணைந்திராத கலாசார நிகழ்வு திருச்சியில் இல்லை. அவர் சென்ற இடமெல்லாம் இலக்கியம், நாடகம், சினிமா என்று பிறரை ஈடுபடுத்தி இயக்குவதில் அவருக்கு நிகர் அவரே. அதன் காரணமாக அவர் பெற்ற […]


 • நல்ல தமிழும் இல்லை ஆங்கிலமும் இல்லை

  நல்ல தமிழும் இல்லை ஆங்கிலமும் இல்லை

  தமிழ் மாநிலத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு எத்தனை முயற்சிகள் எடுத்துக்கொண்டிருக்கிறோம். அதன் சாதனை என்ன என்று கணக்குப்போட்டுப்பார்த்து இருக்கிறோமா ? நமது.  அரசுத்துறை தமிழ் வளர்ச்சியில் சாதித்தது என்ன என்று கணக்குக்கொடுக்கமுடியுமா ? அரசு நூலத்துறைக்கு புது ப்புத்தகங்கள் வாங்குவதை ஆராய்ந்து பார்த்தது உண்டா என்ன ? சம்பந்தப்பட்டவர்கள் தம் மனசாட்சியைத் தொட்டு  நூலகத்திற்குப்புத்தகங்கள் வாங்குவதில் எத்தனை நேர்மையாக அவர்கள் நடந்துகொண்டார்கள் என்பதை வெளியில் சொல்ல வாய்க்குமா ? அப்படி இப்படி சில நூல்கள்  அரசு நூலகத்துக்குத் […]


 • வரிக்குதிரையான புத்தகம்

   ஜோசஃப் ஜேம்ஸ் என்பவரைப் பற்றி  சுந்தர ராமசாமி எழுதிய ஜே.ஜே குறிப்புகள் என்ற  நாவலை வாசித்தபோது பேனாவாலும் ஹைலைட்டராலும் எனக்குப் பிடித்த பகுதிகளைக்  கோடிட்டேன். புத்தகத்தின் பெரும்பாலான பக்கங்களில் கோடாகி, புத்தகத்தின் பக்கங்கள் வரிக்குதிரையின் தோலாக மாறிவிட்டது. மீண்டும் வாசித்தேன். அப்பொழுது மேலும் கோடுகளிட்டேன் . இதுவரை நான் எனது பாடப்புத்தகங்களைக் கூட இப்படிக் கோடிடவில்லை. பல வருடங்களுக்கு முன்பு ஒரு முறை வாசிக்கக் கையில் எடுத்துவிட்டு,  வார்த்தைகள் புரியவில்லை என வைத்துவிட்டேன் . இம்முறை கூர்ந்து […]


 • ஹமாம் விளம்பரமும் அப்பாவி சிறுமிகளும்

  லதா ராமகிருஷ்ணன் விளம்பரங்களில் 99.9 விழுக்காடு பெண்களைக் காட்சிப்பொருளாகத்தான் கையாள்கின்றன என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. சில அதைக் கொச்சையாக, அப்பட்டமாகச் செய்கின்றன. சில நாசூக்காக,ச் செய்கின்றன. அவ்வளவுதான் வித்தியாசம். சில மாதங்கள் முன்புவரையும் ஹமாம் சோப்பு விளம்பரத்தில் ஒரு சிறுமி தனது ஆடையற்ற தோள்களில் ஹமாமை வைத்து உருட்டிக்கொண்டே யிருப்பாள். (குளிக்கிறாளாம்). அருகில் நின்றுகொண்டு அவளுடைய அம்மாக்காரி ‘ஓடு, துரத்து, பயந்து ஒளியாதே’ என்று வெற்றுவீர முழக்கமிட்டுக் கொண்டிருப்பாள். இப்போது வேறொரு விளம்பரப்படம் வருகிறது. முன்பிருந்த […]