தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

ஹைக்கூக்கவிதைகள்

வசந்தி முனீஸ் கொளுத்தும் வெயில் காட்டுக்குள் ஓடி ஒளிகிறது ஒத்தையடிப் பாதை! * திருவிழா— சிறுவன் கையில் ஜவ்வுமிட்டாய்க் கடிகாரம்! * ​ ஓடைத் தண்ணீர்— தொட்டுப் பார்க்கிறது நாணல்! * ​ஐஸ்பாய் விளையாட்டு—…

மழை புராணம் : 49

பூமியும் மழையும் காதல் காட்சி கண்டது பூமி மீது பெரும்காதல் கொண்ட மழைக்காதலன்பகலெல்லாம் இடியால் செருமினான்உணர்வார் யாருமில்லைபிறகுமின்னலால் கையெழுத்து இட்டும் விளக்கினான்புரிவார் சிலரே என அறிந்துஇரவெனும் தாதியிடம் சேதி சொல்லஅவள் கொண்டு சென்று கூட்டி…

கடற்பயணத்தில் என் சின்ன படகு

வசந்ததீபன் வேரோடு பிடுங்கி எறியப்பட்ட மரம் குற்றுயிராக... குலையுயிராக... துடித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் சில மணிகளில் இடம் தூய்மைப்படும். மனைவி, குழந்தைகள் கை கோர்க்க பிறந்த மண் உதறிச்செல்கிறேன். தரித்துச் செழிக்க இனி எந்த…

வேட்கைப் பயணம்

ரவி அல்லது துண்டாடிக் கிடக்கும்  மூங்கில்களுக்கு வனமென்றொரு வரலாறு இருக்கிறது. அவைகளின் நர்த்தன ரீங்காரமற்றதன் வெறுமை இயலூக்கிகளுக்கு என்னவோ செய்கிறது. சிலது இசை எழுப்பும் வாத்தியங்களாக மாறின. பலது கூடார, கூடைகளென பயன்படும் பொருள்களாயின.…

மறைச்சொல்

ஐயா சாலமன் பாப்பையா  நினைவாக புரிந்துகொண்டோம் ‘பூவிலும் தேனுண்டு  நாவிலும் தேனுண்டு ‘ அதிசயச் சந்திரனாய் நீ கண்ட ஒரே அமாவாசை உன் மரணம் தாமரை முகங்களை மலரச்செய்த  கருப்புச் சூரியன் நீ சங்கத்…

காலத்தின் கையொப்பம்

இரா.பவித்ரா காகிதத்தில் சிந்திய மழையின் துளிகள்,  வார்த்தைகளாக மாறிக் காத்திருக்கின்றன... ஒரு வாசகனின் பார்வைக்காக அல்ல, காலத்தின் மௌனத்தைப் பேசுவதற்காக! பூட்டி வைத்த கதவுகளின் பின்னே  தூங்கி வழியும் பழமையான திண்ணை,  இன்னும் நினைவில்…

மாய ஜீவிதம்

__________________________ நான்  கட்டுவது  கற்பனைக்  கோட்டை காற்றுக்கும்  மழைக்கும்  தப்பிக்கும் கண பெருமூச்சில்  சுக்குநூறாய்  உடைந்து  சிதறும் மழைத்துளி  விழுந்தது விழித்தது  உயிர் உயிருக்குள்  உயிர்  துளிர்த்தது ஆறுமுகனுக்கு  ஆறு  தலை இராவணனுக்கு  பத்து …

மழை புராணம் : 48

மழை நீக்குமா பற்று எனும் அழுக்கை? இருட்டிலிருக்கும் சாலைகண் புரியாமைக்கு நாம் வருந்தியதில்லைசற்று பார்த்து வந்திருக்கலாமெனும்சமாதானம் மட்டும் கொண்டோம். இருட்டில் பெய்யும் பெருமழை மீதுஅன்பு கவனிப்பு  நமக்கு ஏற்பட்டதில்லைகண்ணற்ற மழை என்றே   நினைக்கிறோம்…

சோனா மானா

இரா. ஜெயானந்தன் கட்டை விரலில்  ஒட்டிக்கொண்டிருந்த  துளி சுண்ணாம்பையும் கடைசி வெத்திலையில் தடவி  வேட்டியில் மடித்து வைத்த  சீவல் பொட்டலத்தில்  ஒரு சிட்டிகை போட்டபின்  நீடாமங்கல டைலர் மாமாவின்  கடைசி மகன் ஜாதகத்தை  காண்பித்தார்…

ஒன்று புரிந்தது – உண்மைச் சம்பவம்

காலை நடை கண்டேன் ஒரு காட்சி கண்ணுள் முள்ளாய் செல்லநாயோடு ஒருவர் இடுப்பில் வார்கட்டி லேசாய்த் தூக்கி அவர் நடக்க முன்னங்கால்களால் நகர்ந்தது நாய் அந்த நாயின் இடுப்புவரை தங்கதிறம் இடுப்புக்குக் கீழ் ஈயம்…