தேவதை

This entry is part 5 of 23 in the series 7 அக்டோபர் 2012

அமாவாசைக்கு அடுத்த நாள் காலை செடிகள் எதிலும் ஒரு மொட்டும் மிஞ்சவில்லை தெருவெங்கும் மொட்டுக்கள் இறைந்து கிடந்தன முற்றத்தில் திண்ணையில் கொடியில் காய்ந்து கொண்டிருந்த சேலைகளும் தாவணிகளும் வெவ்வேறு வீட்டுக்கு இடம் மாறி இருந்தன உயரமான மரத்தில் சிறுவன் ஏறி எடுக்க பயந்து விட்டுவைத்த பட்டம் குளக்கரையில் கிடந்தது ஒரு வெள்ளை மேகம் வானவில்லின் ஒரு துண்டை மறைத்தும் காட்டியும் மகிழ்ந்து கொண்டிருந்தது அம்மன் கழுத்தில் நகைகள் இருக்க பூ மாலைகளை மட்டும் காணவில்லை கோயிலின் பிற […]

தாகூரின் கீதப் பாமாலை – 34 விடைபெறும் நேரத்தில் !

This entry is part 2 of 23 in the series 7 அக்டோபர் 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இல்லா விடில் அஞ்சு வேன் நான், இன்னிசை மறக்க வேண்டு மென்று ! இல்லா விடில் அஞ்சு வேன் நான், அறுந்த நாண்கள் சிறக்கு மென்று ! இல்லா விடில் விழா கொண்டாடும்  தருணம் உறங்கி விழும் ! வினை விளை யாட்டிலும், புறக்கணிப்பிலும், புனித வேளை வீணாகி விடும்  ! இல்லா விட்டால் ஒரு கானமும் இல்லாமல் இருவர் கூடிய இன்பப் பொழுது […]

“சொள்ள‌ மாடா! மாத்தி யோசி!”

This entry is part 34 of 36 in the series 30 செப்டம்பர் 2012

  தாமிரபரணி பாய் விரித்ததில் நான் படுத்துக்கிடந்தேன். பளிங்கு நீருள் முக்குளி போடுவதில் ஒரு சுகம். கணுக்கால் அள்வே ஓடினாலும் அது என் அன்றாடக்கவிதை. அதிலும் இந்த‌ மாலைக்குளிய‌லில் “உம‌ர்க‌ய‌மும்”கூட‌ குளிப்ப‌து போல் ஒரு பாவ‌னை. வெயிலுக்கேற்ற‌ நிழ‌ல் இங்கு நீருக்குள் நெருப்பையே க‌ரைத்து குளிர்பூங்குழம்பாக்கி கிண்ண‌ங்க‌ளில் ஊற்றித்த‌ரும். கல்லிடைக்குறிச்சியின் இத‌யத்தை வ‌ருடிக்கொண்டே ஓடினாலும் உருண்டு வ‌ரும் கூழாங்க‌ல் ஒவ்வொன்றும் இம‌ய‌ம் தான். “ஜன்னி” கண்ட இம‌ய‌த்துக்கே ம‌ருத்துவ‌ம் பார்த்த‌ அக‌த்திய‌னின் க‌ண்ணாடிப்பிழ‌ம்பு அல்ல‌வா தாமிர‌ப‌ர‌ணி. தின‌மும் […]

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 39) காதலில் அடையாளம்

This entry is part 18 of 36 in the series 30 செப்டம்பர் 2012

மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை […]

காதல் துளி

This entry is part 14 of 36 in the series 30 செப்டம்பர் 2012

கரையைத் தொட்டுப் பின் செல்லும் அலைகள் எல்லாம் வேறு வேறு என்றாலும் அலைகளில் அடர்ந்த நீர்த்துளிகளுமா வேறு வேறு? ஓர் அலையில் ராட்டினமாடிக்கொண்டு வந்தவை அணிமாறி அடுத்தத் தொகுப்பில் அடைந்துகொண்டு எத்தனை முறை புரண்டெழுந்தாலும் கரைக்குத் தெரியும் எந்தத் துளியின் முத்தம் தன் மடியில் குமிழாய்ப் பொரிந்ததென்று ! — ரமணி

கண்ணீரில் எழுதுகிறேன்..

This entry is part 9 of 36 in the series 30 செப்டம்பர் 2012

-முடவன் குட்டி aஇறைவன் பெரியவன்.. அவனே மகா பெரியவன்.. கலிமாவுடன் உயிர் மூச்சு குழைய அம்மா.. காதில் நீ ஊதிய சொல் ஒன்று எனது பெயராகியபோது சுற்றமும் நட்பும் சூழ இருந்தது… யாரையோ தேடுவதாய் என் கண்ணில் கண்ட நீ சொன்னாய் ’அப்பா நாளை வருவார் மகளே’ என. மலர்ந்தேன்… சிரித்தேன்.. தவழ்ந்தேன்…. நடந்தேன்.. தந்தையே…. அள்ளி அணைத்தும் ஆரத்தழுவியும் கொஞ்சி மகிழ்ந்தும் பேசிச் சிரித்துமாய்.. உங்கள் நினைவுகளில் நிறைந்து தழும்பாது ஏழையானதே என் பிள்ளைப் பருவம் […]

வெளிநடப்பு

This entry is part 6 of 36 in the series 30 செப்டம்பர் 2012

சு.துரைக்குமரன் சிறு அசைவைக்கூட சுவையும் குதூகலமும் நிறைந்து ததும்பும் நிகழ்வாக்கிவிடும் குழந்தைமையைப் போல உனக்குள் என்னையும் எனக்குள் உன்னையும் தேடித் தெளியச் செய்தது காதல் தீராத விளையாட்டுகளால் பிள்ளைகளானோம் கொதித்தடங்கிய பாலில் படியும் ஆடையைப் போல நம் கொண்டாட்டங்களில் படிந்து கொண்டிருந்தது அடிபட்ட ஆளுமையின் விசும்பல்கள் நிலைநிறுத்த எத்தனித்த தனித்தன்மையால் பின்னப்பட்டு தனித்தனியானோம் உன் நொய்மை உண்டாக்கிய வெறுப்பும் தனிமையும் வெளியேறிக் கொண்டிருந்த குழந்தைமையின் மீது வெளிச்சத்தை வாரியிறைத்துத் தளர்ந்தன தொலைந்த முகவரிதேடி அல்லாடிக்கொண்டிருந்தது காதல். சு.துரைக்குமரன்

சும்மா வந்தவர்கள்

This entry is part 4 of 36 in the series 30 செப்டம்பர் 2012

எப்போதோ பார்த்தவர்களெல்லாம் எதிர்பாராது வந்து போகிறார்கள் இப்போது. திருட்டுக் குற்றம் சாட்டின பழைய ஊரின் பக்கத்துவீட்டுக்காரர் பிரியவே மாட்டோம் எனச் சத்தியம் செய்து பின் காலச் சூழலில் பிரிந்துபோன பள்ளி நாட்களின் இணைபிரியா நண்பர்கள் எனப் பழகியவர்கள் மட்டுமில்லாது கண்களால் மட்டும் பேசிக்கொண்டிருந்த ரகசியக் காதலிகள் கூட எதிர்பாராது வந்து பேசிப் போகிறார்கள். வந்து பார்த்ததும் பேசிப்போனதுமே பழகிய பாசம் தந்த பெரிய பரிசென்றிருக்கும் அக்காவுக்கு அமெரிக்க சித்தப்பா வெறுங்கையோடு சும்மா வந்தது மட்டும் பிடிக்கவேயில்லை. — […]

ஆலமரத்துக்கிளிகள்

This entry is part 3 of 36 in the series 30 செப்டம்பர் 2012

பச்சை வயல்வெளி .. பக்கத்தில் காவலுக்குப் பனை மரங்கள்…!! —————————————- என்றும் நீ கூண்டில்.. நான் நீதிபதி.. மனசாட்சி.! ————————————– பூமியை அளக்கிறதோ..? நெடுஞ்சாலைகள்..! —————————————– இரவும் பகலும் ஒன்றுதான் உறங்குபவனுக்கு..! ——————————————- மீண்டும் தாய்வீடு… நிம்மதியாய்…. விதைநெல்..! _________________________ வான்மேகங்கள் வேடிக்கை பார்க்கும் பூமியில் சாகசங்கள்..! _________________________ வில்லு போல் உடல் புறப்படும் அம்பு.. குறிகோள்கள்..! _________________________ கரும்புக் காடுகள் இரும்புகளால் முள்வேலி..! _________________________ சிறு புல்லும் நெடு மரமும் எண்ணுமாம் தாங்களே பூமிக்குத தூண்..! […]

ஒரு கூட்டம் புறாக்கள்

This entry is part 1 of 36 in the series 30 செப்டம்பர் 2012

கூடுகளில் அடைபட்ட புறாக்கள் கல்லெறிந்து தீ எரித்து இரவினில் கலைத்து விடுவதற்கல்ல விடிகாலையில் தீனிகொத்தும் அழகைரசித்து குழந்தைகளோடு தத்தித்தத்தி நடந்தாடும் ஒரு கூட்டம் புறாக்கள் முன்பொரு நாள் நேர்ச்சைக்கடனுக்காய் வழங்கிய குஞ்சுப்புறாக்களும் இவற்றில் காணக்கூடும் பறக்கவும் நடக்கவும் தெரிந்த புறாக்கள் மினராக்களில் உட்கார்ந்து நடுங்குகிறது.