பாதியில் நொறுங்கிய என் கனவு

This entry is part 13 of 36 in the series 18 மார்ச் 2012

பதினேழைத் தொட்ட ஓர் இளையவளின் ஸ்பரிசங்களுடைத்த அந்திம நேர தழுவலைப் போல் இனித்துக் கிடந்தது அந்த அதிகாலைக் கனவு முழுதுமாய் வெளிச்சம் விரித்துக் கிடந்த பகலுலகின் சம்பாஷனைகளில் உலர்ந்த படியே என் குருட்டு கனவுலகின் இருளை வியாபித்துக் கிடந்தேன் இன்னுமேற்று எக்கணமும் கவிழக் கணம் நோக்கும் விசையழுத்தப்பட்ட சூறாவளிப் பொழுதின் கிழடு தட்டிய மரத்தைப் போல் தங்களை நகர்த்தும் பொழுதுகள் என் கனவை தின்னத் தொடங்கின சிதிலமடைந்த சுண்ணாம்புக் காரையென சதா தன் மேனியலிருந்து வினாடிகளை உதிர்க்கத் […]

கூந்தல்

This entry is part 11 of 36 in the series 18 மார்ச் 2012

உடல் நொறுங்கி சரிய சபை அதிர்ந்தது சூதாடி தலைதொங்கியவன்களின் முகம் உமிழ்ந்த எச்சிலால் சபதம் நிறைவு கொள்ள பற்றி இழுத்தவனின் தொடை ரத்தம் பூசி முடிந்த கூந்தலுள் ஆதிக்க அழுகளின் வீச்சம் பெருக நீராடி கேசம் நீவிய துரோபதையை பிறப்பித்தது குளித்து வந்த மதுவாகினியின் கூந்தலில் வடிந்த நீர்த்துளிகள்…

தாகூரின் கீதப் பாமாலை – 3 உன்னைப் புறக்கணித்தவன்

This entry is part 35 of 35 in the series 11 மார்ச் 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கண்ணீ ரோடு இருந்த யாரைத் திருப்பி அனுப்பினாய் நீ ? என்ன தந்திரம் செய்து மீண்டும் இழுத்து வரப் போகிறாய் இப்போது உன் வழிக்கு ? இந்த இனிய தேன் இரவில் பூத்துப் பொங்கும் பூங்காவில் போகுல் மரத்தடி நறுமண அசைவில் புகுந்தவன் அவனா உன் மனதில் ? அந்தோ ! ஓர் வசந்த இரவினிலே நம் இதயங்கள் கலந்து பற்றிக் கொண்டன. பத்துத் […]

பாராட்ட வருகிறார்கள்

This entry is part 30 of 35 in the series 11 மார்ச் 2012

பாராட்ட வருகிறார்கள் அவசரமாய் ஒரு ஆளுயரக்கண்ணாடி தேவை! சம்பிரதாய வாழ்த்து , அழுத்தும் கைகுலுக்கல், பொய்யெனப் புரியும் புனைந்துரைகள் எல்லாவற்றுக்கும் முகநூலின் ஒற்றை விருப்பச் சொடுக்காக புன்னகைக்கலாமா? பல்….? தலையசைப்பு சம்மதமாகவா ?மறுப்பாகவா? மையமாகவா? கண் பணித்துவிடுமோ… சீரான சுவாசத்தோடு வெற்றுப்பார்வை தோதாகுமா? பெருமிதம்?கூச்சம்? ”எவ்வளவோ பாத்துட்டோம்..? இதற்குத் தானே ஆசைப்பட்டாய்….? எது பொருந்தும்….? அவசரமாய் ஒரு கண்ணாடி , அல்லது ஒத்திகைக்கு ஒரு நல்ல துணை! -உமாமோகன்

கவிதைகள்

This entry is part 29 of 35 in the series 11 மார்ச் 2012

தொடர்பறுதல் ஏகாந்த இரவொன்றில் வான்பார்த்து மாடியில் படுத்தபோது தென்பட்ட நட்சத்திரங்கள் ஒவ்வொன்றின் இடையேயும் விரிந்துக் கிடக்கிறது ஏகப்பட்டத் தொலைவு எனை விட்டுத் தொடர்பறுந்துப் போனவர்கள் போல.. ஒன்றாய்ப் படித்து, சுற்றிய நண்பர்கள் … நெருக்கமாய்ப் பழகிய தொடர் கடிதத் தோழிகள் பக்கத்து வீடுகளில் குடியிருந்துப் போனவர்கள் நெருக்கமாய் இருந்த தூரத்து உறவுகள் இலக்கியம் பேசி உணர்ச்சி வசப் பட்டவர்கள் … பலருடனும் இற்றறுந்துப் போயிற்று தொடர்பு.. முகநூலிலும், ஆர்குட்டிலும் தேடித் தேடி அலுத்தப் பின்பும் அழிபடாமல் மனதுள் […]

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 10)

This entry is part 25 of 35 in the series 11 மார்ச் 2012

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 10) எழில் இனப் பெருக்கம் ஒரு வேண்டுகோள் மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் […]

மொட்டுக்கள் மலர்கின்றன

This entry is part 14 of 35 in the series 11 மார்ச் 2012

இயற்கை மூடி வைத்த மொட்டுக்கள் ஒவ்வொன்றும் சிறுசத்தம்போட்டு உலகை எட்டிப் பார்க்கின்றன பூக்களாக… பூவுலகின் சிறுதூண்டலால் அழகழகாய் மலர்கின்றன எழில் பூக்கள் – தம் புறவிதழால் புதுக் காற்றை பிடிபிடித்தும் பார்க்கின்றன… வளிபோன போக்கில் அசைந்தாடவும் வாயின்றி சில வார்த்தை இசை போடவும் வான் போடும் மழை நீரில் விளையாடவும் வையத்தில் தேன் பூக்கள் பூக்கின்றன. ஒரு மொட்டு மலரும் போது… மெல்லப் பேசுகின்றது… பேசும் விழிகளால் புன்னகை பூக்கின்றது… பூமிக்கு வளையோசை கேளாமல் காற்றிலே நடனம் […]

கவிதைகள்

This entry is part 3 of 35 in the series 11 மார்ச் 2012

1. விதை சிந்‌திய கண்ணீர் விருட்சமாகும் விதை… 2. சித்ரவதை பெற்ற வதை இப்பொழுதோ சித்திரமாக புகழுடன், மிடுக்குடன் வனிதைகள். நெகிழ்ச்சியுடன் தமிழ் மூண்டாசு 3. வாக்காளான் நித்தமும் புறமுதுகிட்டு ஒரு நாள் மட்டும் விரல் உயர்த்தி 4. கணிணி கலகம் , காமம், காதல் , கற்க நீ கண்ணன்ணா ?

எழுத்தாளர்கள் ஊர்வலம் (4 ம் பாகம்)

This entry is part 45 of 45 in the series 4 மார்ச் 2012

ஆத்மாநாம் =========== சுஜாதாவுக்குள் சூல் கொண்ட மேகம் இந்தக் கவிதை. மௌனி ======= ஞான இரைச்சல்களை தின்று விழுங்கியவர். பேயோன் ======== “பின் ந‌வீன‌த்துவ‌த்துக்கும்” பேன் பார்த்த‌வ‌ர். கி.ராஜேந்திர‌ன் ============= க‌ல்கி வைக்காம‌ல் போன‌ முற்றுப்புள்ளிக‌ளால் க‌ல்கியை நிர‌ப்பிய‌வ‌ர் ஜெகசிற்பியன் ============= உணர்ச்சியின் விளிம்புகளை ஊசிமுனையாக்கி..அதில் உலகத்தை நிறுத்தி வைப்பவர். அநுத்தமா ========= ஈயச்சொம்பில் ரசம் வைத்துக்கொண்டே மனித ரசாபாசங்களை தாளித்துக் கொட்டுபவர். அரு.ராமநாதன் =============== கட்டில் மெத்தை எழுத்துக்கள் ஆனால் தூங்குவதற்காக அல்ல. நாஞ்சில் பி.டி […]

விளையாட்டும் விதியும்

This entry is part 40 of 45 in the series 4 மார்ச் 2012

மட்டையும் பந்தும் கொண்டு தனக்கான விளையாட்டை ஆரம்பித்துவிட்டது குழந்தை. டெலிவிஷனின் இருபத்து நாலு மணி நேர விளையாட்டுக் காட்சிகளை எள்ளளவும் பிரதிபலிக்கவில்லை அது தன் விளையாட்டில். விளையாட்டின் விதிகளைத் தானே இயற்றிக்கொண்டு குழந்தை ஆடிக்கொண்டிருந்ததில் வீட்டின் வாசல் புதுமையில் பொலிந்துகொண்டிருந்தது. அப்படி இல்லை என்பதாய் உலகம் ஏற்றுக்கொண்ட விதிகளை அதன் அப்பா திணிக்க முற்பட்டபோது குழந்தையைத் தடுக்காதே என்பதாய் விழிகள் விரித்து உதடுகள் குவித்து ” உஷ் ” என்று ஒற்றை விரலில் அம்மா எச்சரிக்கை செய்தது […]