தோள்களில் அமர்ந்திருக்கும் மரணத்தின் தூதுவன்

This entry is part 26 of 38 in the series 20 நவம்பர் 2011

தோட்டத்துக் காவல்காரன் நித்திரையிலயர்ந்த கணமொன்றில் தனித்துவிழும் ஒற்றை இலை விருட்சத்தின் செய்தியொன்றை வேருக்கு எடுத்துவரும் மௌனத்திலும் தனிமையிலும் மூழ்கிச் சிதைந்த உயிரின் தோள்களில் வந்தமர்ந்து காத்திருக்கிறான் இறப்பைக் கொண்டுவரும் கடவுளின் கூற்றுவன் நிலவுருகி நிலத்தில் விழட்டுமெனச் சபித்து விருட்சத்தை எரித்துவிடுகிறேன் மழை நனைத்த எல்லாச் சுவர்களின் பின்னிருந்தும் இருளுக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கிறது ஈரத்தில் தோய்ந்த ஏதோவொரு அழைப்பின் குரல் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை

வாப்பாவின் மடி

This entry is part 24 of 38 in the series 20 நவம்பர் 2011

ஹெச்.ஜி.ரசூல் எனக்கு தொப்புள் கொடியறுத்த அம்மச்சியைப் பார்த்ததில்லை … கர்ப்பப் பையிலிருந்து கிழித்தெடுக்கப்பட்டு பூமியின் முதற்காற்றை சுவாசித்தபோது என்காதுகளில் பாங்கு இகாமத் சொன்ன எலப்பையின் குரல் ஓர்மையில் இல்லை… சுட்டுவிரலால் சேனைதண்ணி தொட்டுவைத்தபோது அந்த முதல்ருசி எப்படி இருந்திருக்கும்… நோட்டுப் புத்தகங்களின் பக்கங்களில் பாதுகாப்போடு வைத்திருந்த மயிலிறகு இன்னமும் குட்டிப் போடவில்லை நாலெழுத்து படிக்கவும் நாலணாசம்பாதிக்கவும் சொல்லித்தந்த வாப்பா ஒரு துறவி போல உறவுகடந்து கடல்கடந்து கண்ணுக்கெட்டாத தூரத்தில் என்றேனும் ஒருநாள் வாப்பாவின் மடியில் தலைவைத்து ஓர் […]

தலைமை தகிக்கும்…

This entry is part 8 of 38 in the series 20 நவம்பர் 2011

_____________ சூரியனை சூழ்ந்த கோளங்கள் சுற்றி திரிகின்றன தனி சுதந்திரத்தோடு தன்னை வட்டமடிக்கிற நிலா பெண்களோடு.. தலைமை பதவியின் தனிமையால் கலகலப்பாய் பழக ஆளில்லாமல் தனித்த தலைமை தகிக்க சூரியனின் பெருமூச்சும் உஷ்ணமாய் பூமியை நேருக்கு நேர் நிறுத்தி கேள்வி கேட்டால், நிலா வருந்தி, கறுத்து விடுகிறாள் கிரகண நோய் தாக்கி. ! பூமியை பின்னுக்கு தள்ளி நிலாவை நேரே சந்தித்து காதலை சொல்ல நினைக்கையில் – சூரியனுக்கே கிரகணம் பிடித்து விடுகிறது.. மற்ற பால் வெளியில் […]

குறுங்கவிதைகள்

This entry is part 10 of 38 in the series 20 நவம்பர் 2011

பேருந்தின் இரைச்சல் ஓசையில் பேச்சு வராத தமையனைப் பற்றி ஓயாமல் பேசிக்கொண்டு வந்தாள் ஒருத்தி. எனக்கென்னவோ அவளே அவனுக்கும் சேர்த்து பேசிக்கொண்டிருப்பது போல் இருந்தது. 0 ஒன்றே போல்தான் உன் குழந்தை கைகளின் ஸ்பரிசமும். O கண்கள் சொருகும் அதிகாலைப் பொழுதில் உதட்டுச் சாயத்தை ஒத்தி ஒத்தி எடுத்து உதடுகளால் சப்பிக் கொண்டிருந்த ஒருத்தியைக் காண ஒரு மாதிரி சந்தோசமாய்தான் இருந்தது. O பின்னிருக்கையில் அமர்ந்தபடி பயணம் போக நேர்ந்த வண்டியோட்டியின் ஆச்சர்யம் வழியெங்கும் காணும் இத்தனையும் […]

அந்த நொடி

This entry is part 12 of 38 in the series 20 நவம்பர் 2011

அந்த நொடி எப்போதும் நிரப்பபடாமலே உள்ளது அந்த நொடி எதை கொண்டு நிரப்ப அதை நிரம்பிவழியும் எனது நினைவுகளைகொண்டு அதன் முனையை கூட நிரப்ப முடிவதில்லை கதைகளையும் கவிதைகளையும் ,வார்தைஜாலங்கலையும் கொண்டு நிர்ப்பிவிடலமா? மழையையும் வண்ணத்தையும் கொண்டாவது! பதற்றமான பல பொழுதுகளில் உன்னை நிரப்பும் அந்த நொடியை நினைத்தே மலைத்து போகிறேன் தேடிய பொழுதுகள் உன்னை நிரப்ப போவதில்லை தேடாத பொழுதுகலால் உன்னை நிரப்பும் சாத்தியமும் இல்லை களவாடவும் முடியாது போனதால் எப்போதும் என்னை பின்தொடர்கின்றது அந்த […]

பா. சத்தியமோகன் கவிதைகள்

This entry is part 7 of 38 in the series 20 நவம்பர் 2011

பா. சத்தியமோகன் கவிதைகள் அதாகப்பட்டது..! என்னிடம் ஒரு பேனா உள்ளது உள் சட்டைப் பையில் வைக்கிறேன் வெளியில் வைத்தால் வரவு செலவு கணக்கு எழுதவே கேட்கிறார்கள் அதுவோ காவியம் எழுதும் காப்பியம் பழகும் அன்பு பேசும் என்னிடம் அழகிய மாலைப்பொழுது உள்ளது அங்கு எப்போதும் குயில்களின் கீச்சு கேட்கும் சங்கீதக் குருவிகள் குளிர் பேசும் அதன் முகவரியை பொழுதுபோக்காகவே கேட்கிறார்கள் உள் சட்டையில் துடிக்கும் இதயம் போல தினம் தினம் பூத்து ஒளிர சந்தனச் சூரியன் உண்டு […]

பம்பரம்…

This entry is part 17 of 38 in the series 20 நவம்பர் 2011

படைவீடு அமுல்ராஜ் . கென்னிப்பன் வூட்டு ஐயப்பன மிஞ்சரதுக்கு ஒருத்தனும் இருந்ததில்ல ஊருல … அவங் செதுக்கித்தர பொம்பரத்துக்கு ஒரு கூட்டம் எப்பயும் அவங்கூட சுத்தும் … பொம்பரத்துக்கினே காட்டுக்குப் போவாங் … பொர்சிமரம்தான் பொம்பரத்துக்கு எத்ததுன்னுவாங் … சிலநேரத்துல அவுஞ்ச, கொடுகாலி, துரிஞ்ச மரங்கள தேடுவாங் … பொம்பரம் செதிக்கித்தரகேட்டா ஆணி உனதா, என்தான்னு கேப்பாங் ஆணிய நாங்குத்தா ஒன்னார்ருவான்னுவாங் ஆணிய அவனே அடிச்சி செதுக்கித்தந்தா ரெண்ருவான்னுவாங் … தெருமுழுக்க அவங் செதுக்கன பொம்பரந்தாங் வெளையாடும் […]

கவிதைகள்: பயணக்குறிப்புகள்

This entry is part 18 of 38 in the series 20 நவம்பர் 2011

11 தொடக்கப்புள்ளியிருந்து வெகுதூரம் வந்தாயிற்று- போகவேண்டிய தூரம் அதிகம் என்ற தெளிவோடு. சிறுகற்கள் மலைமுகடுகளாய் வழியடைத்த நிலை மாறி பெரும்பாறைகளும் இன்று துகள்களாகிவிட்ட ரசவாதம்! கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்!! புரியாமல் கருத்துப்போர்வையில் கற்களைச் சுருட்டியெடுத்துவந்து கைபோனபோக்கில் என் ஆறெங்கும் இறைத்துக்கொண்டிருக்கும் நீ எப்போதுமே ஐயோ பாவம்! 12 உன் உன்னும் என்னும் முன்னும் பின்னும் ஒடுங்கும் ஒருமைக்குள் எதிர்வினைக்கும் அறவுரைக்கும் இடையே நிறையும் அகழி மறைத்துக் கவியும் காரிருள். என் என்னும் உன்னும் இன்னும் என்னென்னவும் […]

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் ! (கவிதை – 50 பாகம் -5)

This entry is part 20 of 38 in the series 20 நவம்பர் 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “இனிய தோழனே ! கணப்பு அடுப்பருகில் (Fire Place) அமர்ந்து தீ அணைந்து போய்ச் செத்த சாம்பலை ஊதி தீ மூட்ட வீணாய் முயலும் மனிதனைப் போல் இருக்காதே ! நம்பிக்கை நழுவிச் செல்ல விடாதே. கடந்த தவறில் நேர்ந்த மன இழப்புக்கு ஆளாகாதே ! கலில் கிப்ரான் (ஞானியின் பொன்மொழிகள்) +++++++++++ திருமணப் பாதையில் ! திருமணம் என்பது வாழ்வில் இருமனங்களின் […]

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கோடாரியில் தகர்ப்பாய் ! (கவிதை -52 பாகம் -1)

This entry is part 19 of 38 in the series 20 நவம்பர் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா புதைந்திருக்கும் பொக்கிசம் நான், எல்லோரின் நினைவில் வர விரும்புவேன் ! தகர்த்திடு இந்தப் பழைய வீட்டை ! ஓராயிரம் புது வீடுகள் கட்டலாம் புதைந்துள்ள — ஒளி ஊடுருவிச் செல்லும் — விலை மதிப்பில்லா பளிங்குக் கல் பூமிமேல் ! அதைச் செய்ய சிதைக்க வேண்டும் பழைய வீடுகளை ! தோண்ட வேண்டும் ஆழமாய் அடித்தளம் இடுவதற்கு. விலை மதிப்புள்ள கற்களை விற்றுத் […]