எல்லாருக்கும் பிடித்த எம்ஜியார் -நூல் அறிமுகம்

This entry is part 1 of 26 in the series 1 ஜூன் 2014

எம்ஜியார் என்ற மூன்றெழுத்து மந்திரம் நம் தமிழ் சினிமாவையும் அரசியலையும் ஆட்டிப்படைத்த விபரத்தையும் அவரது வாழ்க்கைச் சரிதத்தையும் பால கணேஷ் சுருக்கமாக அழகாக விவரித்துள்ளார். பிறப்பிலிருந்து அவர் சந்தித்த சோதனைகள், ஈழத்திலிருந்து கேரளாவுக்குப் புலம் பெயர்ந்தது, மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடகக் கம்பெனியில் நடிக்கத்துவங்கி சினிமாவுக்கு வந்தது, சினிமாவில் பெற்ற வெற்றிகள், எம் ஆர் ராதா சுட்டது, அதன் பின் அரசியல் ப்ரவேசம் , திமுக விலிருந்து விலகி அதிமுக துவங்கியது, மூன்று முறை முதல்வரானது, சத்துணவுத்திட்டம்,நல்லாட்சி […]

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் – திரை விமர்சனம்

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

சிறகு இரவிச்சந்திரன். இயக்கம் : ஸ்ரிநாத் கதை : ராஜமௌலி இசை : சித்தார்த் விபின் ஒளிப்பதிவு : சக்தி – ரிச்சர்ட் எம்.நாதன் நடிப்பு :சந்தானம், ஆஷ்னா, மிர்ச்சி செந்தில், வி.டி.வி.கணேஷ், சுப்பு பஞ்சு, ஜான் விஜய். சந்தானத்தின் நாயகப் பிரவேசம். பாதிதான் பரவசம். அளவு சாப்பாடாக, நிறைவில்லாத “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் “ ஒரு நாயகனுக்குரிய அழகுடனும் அசத்தலான உடைகளுடனும் சந்தானம் திரையில் பார்க்க லயிப்பு. அவர் வாயைத் திறந்தால், உண்மையான நாயகனைத் தேடும் […]

வருகைப்பதிவு

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

சுப்ரபாரதிமணியன் “எத்தனை முறை உற்றுப்பார்த்தாலும் மறுபக்கம் காட்டுவதில்லை கண்ணாடி ” கவிஞர் – கவிதையின் பின் மறைந்துள்ளதையும் மறுபக்கத்தையும் காட்டாமல் நேரடியாக அவரின் முகத்தையும், அபிப்பிராயங்களையும் இக்கவிதை போல் இத்தொகுப்பில் காட்டுகிறார். அதை அவரின் பாணியாகவும் கொண்டிருக்கிறார் என்று சொல்லலாம். காக்கிக் சட்டைக்குள் மனிதாபிமானம் இருக்கிறது.ஈர நெஞ்சம் இருக்கிறது. காக்கிக் சட்டைப்பணியில், பயிற்சியில் மனதைத் தொட்ட அனுபவங்கள் கவிதைகளாய் மிளிர்கிறது. அம்மாவின் பெயர் பொறித்த தட்டு போன்ற கவிதைகளில் இது பட்டென வெளிப்படுகிறது. இன்னும் நெகிழ்ச்சியாகவும் சொல்லியிருக்கலாம் […]

நூல் அறிமுகம். சேது எழுதிய “ மேலும் ஓர் அடையாளம்”

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

-வே.சபாநாயகம். தமிழ் மொழியின் பெருமைக்கு வளம் சேர்த்ததில் மொழி பெயர்ப்புகளுக்கு முக்கிய பங்குண்டு. ஒவ்வொரு காலகட்டத்திலும் அவை பேரலை போல வந்து தமிழர்களை திணற அடித்து வருகின்றன. 1940 களில் சரத்சந்திரர், பக்கிம் சந்திரர் போன்றோரின வங்காள மொழி நாவல்கள், 50களில் வி.ஸ.சாண்டேகரின் மராட்டி மொழி நாவல்கள், தொடரும் மலையாள மொழி ஆக்கங்களின் மொழி பெயர்ப்புகள் என காலம்தோறும் வந்து தமிழை மேலும் இனிமையாக்கி வருகின்றன. இன்றைய காலகட்டதில் தொடர்ச்சியாய் குறிஞ்சிவேலன் போன்றோரின் சிறப்பான மொழி பெயர்ப்புகளால் […]

மாயன்  மணிவண்ணன்

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

  வளவ. துரையன் நாயகனாய்நின்றநந்தகோப[ன்]னுடைய கோயில்காப்பானேகொடித்தோன்றும்தோரண வாசல்காப்பானேமணிக்கதவம்தாள்திறவாய் ஆயர்சிறுமியரோமுக்கறைபறை மாயன்மணிவண்ணன்நென்னலேவாய்நேர்ந்தான் தூயோமாய்வந்தோம்துயிலெழப்பாடுவான் வாயால்முன்னமுன்னம்மாற்றாதேயம்மாநீ நேசநிலைக்கதவம்நீக்கேலோரெம்பாவாய் இதுதிருப்பாவையின்பதினாறாம்பாசுரமாகும். இதற்குமுன்உள்ளபத்துப்பாசுரங்களிலும்தங்கள்இல்லத்தின்உள்ளேஉறங்கிக்கொண்டிருக்கும்பத்துப்பெண்களைஎழுப்பியதாகக்கூறப்பட்டுள்ளது. இதன்மூலம்ஆயர்பாடிச்சிறுமிகள்அனைவரையும்எழுப்பியதாகக்கொள்ளலாம். இதுஆச்சார்யசம்பந்தத்தைஉண்டாக்கபுருஷகாரமாய்இருப்பவர்களைஉணர்த்தும்பாசுரம். இதுமுதற்கொண்டு 7 பாசுரங்களில்எல்லாப்பெண்களும்வந்துவாசல்காக்கும்முதலிகளையும், நந்தகோபர், யசோதை, பலராமன், நப்பின்னைப்பிராட்டி, முதலியவர்களைமுன்னிட்டுக்கொண்டுகண்ணபெருமானைஎழுப்புகிறார்கள். முதலிலேயேஇவர்கள் ’செய்யாதனசெய்யோம்’ என்றுகூறியிருக்கிறபடியால்இப்போதுபாகவதர்களைக்கொண்டுபகவானைப்பற்றநினைக்கிறார்கள். ”வேதம்வல்லார்களைக்கொண்டுவிண்ணோர்பாதம்பணிந்து” என்றுநம்மாழ்வார்அருளிச்செய்திருப்பதுஇங்குநினைக்கத்தக்கது. பாஞ்சராத்ரசாஸ்திரத்திலும்பெருமாளின்திருக்கோயிலுக்குச்சேவிக்கச்செல்லும்போதுஅச்சன்னதியின்திருவாசல்காவல்புரியும்முதலிகளிடம்அனுமதிபெற்றுத்தான்செல்லவேண்டும்என்றுகூறப்பட்டிருக்கிறது. ஆயர்குடிச்சிறுமிகள்அதைஅறியார்களானாலும்ஸ்ரீவைஷ்ணவகுடியிலேவந்தவர்களாதலின்இந்தஅனுஷ்டானம்அவர்களிடம்இயற்கையாகவேகுடிகொண்டுள்ளதுஎன்றுகொள்ளலாம். மேலும்பகவத்சம்பந்தத்தால்உண்டானபிறப்பு, முக்திக்குக்காரணமானகல்வி, பகவத்கைங்கர்யமானகர்மம்ஆகியபெருமைகள்யாரிடம்காணப்படுகிறதோஅவர்கள்அனைவரும்சேவிக்கத்தக்கவர்கள்ஆவர். இந்தஆய்பாடிப்பெண்கள்செய்வதெல்லாமேஅனுஷ்டானமாகிறது. ‘ரஸவாதம்கைப்பட்டவன்இருந்தஇடமெல்லாம்பொன்னாமாப்போலேபகவானிடம்ப்ரேமைகொண்டவர்கள்சொல்லும்எல்லாமேவார்த்தையாம்’என்றுநஞ்சீயர்நம்பிள்ளைக்குஅருளியதுஇங்குநினைவுகூறத்தக்கது. சூர்ப்பனகைபாகவதர்களைப்பற்றாமல்நேரேபகவானைப்பற்றமுயன்றதால்படாதபாடுபட்டாள். விபீஷணன்நேராகஸ்ரீராமனிடம்செல்லாமல் ”நான்வந்திருப்பதைஎம்பெருமானுக்குத்தெரிவியுங்கள்” என்றுகூறிச்சென்றதைநினைவுகூறவேண்டும். ‘வில்லிபுதுவைவிட்டுசித்தர்தங்கள்தேவரைவல்லபரிசுவருவிப்பரேல்அதுகாண்டுமே” என்றுஅருளியபெரியாழ்வாரின்திருமகளன்றோஆண்டாள்நாச்சியார். அடுத்துஇவர்கள்நாயகன்என்றுகுறிப்பிடுகிறார்கள். உலகுக்கோர்தனிநாயகனாய்ஏழுலகும்தனிக்கோல்செல்லஆற்றல்மிக்கபெருமான்கண்ணன். மேலும்அவன்நாயகனாய்நின்றுசலித்துப்போய்இங்குஎளிமையாய்வந்துள்ளான். ஆனால்இங்குநாயகன்என்றவிளிநந்தகோபனைக்குறிப்பிடுகிறது. நந்தகோபன்எப்படிநாயகன்ஆவான்? நந்தகோபன்மிகவும்பெருமைஉடையவன். என்னபெருமைஎன்றால்பகவானையேபிள்ளையாகப்பெற்றவன். எல்லாஉலகத்தையும்ஆளும்எம்பெருமான்அவன்முன்கைகட்டிநிற்பாரன்றோ? மேலும்கண்ணனுக்கும்நாயகனன்றோஅவர்.       கிருஷ்ணனுக்கும்நாயகன்நந்தகோபன்தானே! மேலும்நந்தகோபனைமிகச்சிறந்தஆச்சாரியனாகஇச்சிறுமிகள்எண்ணுகிறார்கள். ஆச்சாரியசம்பந்தத்தோடுதான்பகவானைஅணுகவேண்டும். பெருமாளையேநமக்குஉபதேசிக்கும்ஆச்சாரியன்குருவாகிறார். அவர்பகவானைக்காட்டிலும்பெரியவர்தானே? […]

திரைவிமர்சனம் கோச்சடையான்

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

  சிறகுஇரவிச்சந்திரன் இயக்கம்  : சவுந்தர்யாரஜினிகாந்த்அஸ்வின் கதை, திரைக்கதை, வசனம் : கே.எஸ்.ரவிக்குமார் இசை  : ஏ.ஆர். ரகுமான். பாடல்கள்  : அமரர்வாலி, கவிஞர்வைரமுத்து நடிப்பு : ரஜினிகாந்த், தீபிகாபடுகோனே, ஷோபனா, நாசர், சரத்குமார், ஜாக்கிஷ்ராஃப், ஆதி, ருக்குமணி, நாகேஷ்.   சுவையானஅம்புலிமாமாகதை. அசத்தலானதிரைக்கதை. அற்புதஇசை. கண்களைவிரியவைக்கும்தொழில்நுட்பம். ஆனால், ஓவியமலரைநிசமென்றுநம்பிஅமர்ந்தவண்டுபோலஏமாந்துபோகும்திரைரசிகன். சாதனாசர்கம், எஸ்.பி.பி. குரல்களில்ஒலிக்கும் “ மெதுவாகத்தான் “ வாலியின்வாலிபவரிகளோடு, இசைப்புயலின்இழையோடும்லயத்தோடுநெஞ்சில்சம்மணமிட்டுஉட்கார்ந்துகொள்கிறது. வெள்ளைத்தோகைவிரித்தமயிலோடுதீபிகாகாட்டும்அசைவுகள்கிராபிக்ஸின்உச்சம். சபாஷ்! படம்நெடுகஒலிக்கும்ரகுமானின்இசை, உலகத்தரத்தைதொடுகிறது. பலே! உயர்ந்தமலைகள், பிராவாகமாகவிழும்அருவி, பரந்தகடற்பரப்பு, அதில்கிழித்துக்கொண்டுபாயும்பாய்மரக்கப்பல்கள், கோரைப்பற்களுடன்ஓநாய்கள், அவற்றைநாயகன்வேட்டையாடும்வேகக்காட்சிகள்என்றுதொழில்நுட்பத்தின்உச்சிக்குபோயிருக்கிறதுகோச்சடையான். […]

பசுமைப் பூங்கா – சுப்ரபாரதிமணியனின் சிறுவர் கதைகள்

This entry is part 1 of 22 in the series 18 மே 2014

கோவை திருமூர்த்தி சுப்ரபாரதிமணியன் தமிழகம் அறிந்த ஒரு மிகச்சிறந்த படைப்பாளி. பல நாவல்களையும், சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டவர். சிறுவர் கதைகளை எழுதி இருப்பது மிகுந்த பாராட்டுக்குரியதாகும். அண்மையில் எழுத்தாளர் எஸ்.வி.வேணுகோபால் ஒரு பிரபல பத்திரிக்கையில் சிறுவர் இலக்கியம் பற்றி எழுதியிருந்தார். அதில், சில நண்பர்கள் கேட்டார்களாம். “எப்படி சிறுவர்களின் / குழந்தைகளின் நிலைக்கு இறங்கி எழுத முடிகிறது” என்று, “உண்மையில் குழந்தைகள்தான் மேல்நிலையில் இருக்கின்றனர், நாம்தான் நம் சமூகத்தின் தாக்கத்தினால் கீழே இருக்கிறோம். அவர்கள் நிலைக்கு உயர்வது […]

”மென்மையானகுரலோடு உக்கிரமானசமர்” -நா. விச்வநாதன்

This entry is part 1 of 33 in the series 12 மே 2014

”மென்மையானகுரலோடு உக்கிரமானசமர்” —-நா. விச்வநாதன் [ வளவ. துரையனின் “சின்னசாமியின்கதை” புதினத்தைமுன்வைத்து ] ”எவன்இங்குவேற்றுமையைக்காண்கிறானோஅவன் மரணத்திலிருந்துமரணத்தையேஅடைகிறான்”—–கடோபநிஷத் [4-10] உண்மையில்கதைகளில்ஏதாவதொருபாத்திரமாகஆசிரியன்இருப்பதுபோலவேவாசகனும்உலவிக்கொண்டிருக்கிறான்என்பதுசரியானது. தமிழ்ப்படைப்புலகில்வெகுசொற்பமானவர்களாலேயேஇந்தயுக்திகையாளப்படுகிறது. வாசித்துமுடித்தவனைஎதையோதேடச்சொல்லும்உந்துதலைத்தரவேண்டும்; தொந்தரவுசெய்யவைக்கவேண்டும். ஏன்? ஏன்? இதுஏன்இப்படிஇருக்கிறது;நடக்கிறதுஎனலட்சம்கேள்விகளைக்கேட்கவேண்டும். வளவ. துரையனின்எழுதுகோல்மிகஇயல்பாகஇந்தவிந்தைகளைச்செய்கிறது. சமூகம், வாழ்க்கைமுதலானவார்த்தைகளின்இன்னும்கூடுதலான செறிவானபொருளைஅகராதிகளில்தேடிக்கண்டடையும்அபத்தமானவேலையைச்செய்வதில்லை. முழுமையற்றவாழ்க்கையிலிருந்துவிடுபடும்முயற்சிஏதுமற்றுகம்பீரமாகநிற்கும்முறைமைமகிழ்ச்சியானது. கதைவேறு, வாழ்க்கைவேறுஎன்பதாய்இல்லை; இதைகவனப்படுத்திக்கொண்டுஇவருடையஇயக்கம்சரியானதாகஇருக்கிறது. வெற்றுமுழக்கங்களும், அறைகூவல்களுமாய்அலுத்துப்போகுமளவுக்குஇரைச்சலுமாய்நிறைந்துதளும்பும்தமிழ்ச்சூழலில் ‘சின்னசாமியின்கதை’ வந்திருக்கிறது. புதியதரிசனம்ஒன்றுஇயல்பாய்க்கிடைக்கிறது. இந்தக்கதைஎன்னதான்சொல்லவருகிறது? ஒரேவரியில்சொல்லிவிடமுடியும். வாழ்வியலைச்சொல்கிறது. வாழ்தல்கலையைச்சொல்கிறது. வாழ்வியல்எனில்போஜனம், சம்போகம், சயனம்என்பதாயில்லை. நிறைந்தநேசம், மேன்மையானமானிடஉறவுகள்என்பனவற்றைக்களப்படுத்துகிறது. மென்மையானமயிலிறகுவருடல்தானாவாழ்க்கைஎன்றகேள்வியைக்கேட்பதேஅபத்தம். எல்லாமானதுதான்வாழ்வு. அவலங்களையும், நேசமின்மையையும், கயமையையும், பொய்மையையும்கூடஇன்னதுதான்இவைஎன்றுவிளக்கும்வேலையும்படைப்பாளிக்குஇருக்கிறது. அறம்சார்ந்தமெல்லியவரிகளின்சேர்க்கையில்இவைகளைஅப்புறப்படுத்திவிடலாம். இந்தப்புதினத்தின்பிரதானஅறிவிப்பாகஇதுவேஇருக்கிறது. நீதிநூல்கள்நம்மைஎதிர்காலத்திலேயேஇருக்கச்சொல்கின்றன. நாம்விரும்பியஅனைத்தும்அங்கேதான்கிடைக்கும்என்றசெய்தியைநாசூக்காகச்சொல்லித்தருகின்றன. கடந்தகாலம்மறந்துஇன்றையஇருப்பையும்மறந்துகண்களைமூடிக்கொள்ளும்இலகுவானகலையைப்பொறித்துநம்மைஇருட்டுக்குள்தள்ளிவிடுகின்றன. நம்மைநிழலாகஇருக்கச்செய்துஅதற்குள்ளானகுருதியோட்டத்தையும்உயிர்ப்பையும்அசைவுகளையும்நிஜமானதுஎனஅறிவித்துப்பழக்கப்படுத்திவிடுகின்றன. […]

காணாமல் போன கவிதைகள் (கவிதை தொகுப்பு) நெப்போலியன். விமர்சனம் – இமையம்.

This entry is part 1 of 33 in the series 12 மே 2014

காணாமல் போன கவிதைகள் (கவிதை தொகுப்பு)                                                                         நெப்போலியன். விமர்சனம் – இமையம்.   தமிழில் கவிதை புத்தகங்கள் விற்பனை ஆவதில்லை என்று சொல்லப்படுவது நிஜமல்ல. தமிழில் ஆண்டுக்கு குறைந்தது இருநூறு முதல் முந்நூறு கவிதை தொகுப்புகள் வெளிவரும் நிலையில் கவிதை தொகுப்புகள் விற்பனை ஆவதில்லை என்று கூறுவதை ஏற்பதற்கில்லை. கவிதை படிப்பதும், கவிதை எழுதுவதும் சமூகம் சார்ந்த செயல். சமூகம் சார்ந்த சிந்தனை, அக்கறை, ஈடுபாடு, கவலை. கவிதையை எழுதுவதும் படிப்பதும்தான் முக்கியமானது. விற்பனை […]

 வாஸந்தியின் நாவல் “விட்டு விடுதலையாகி”

This entry is part 1 of 33 in the series 12 மே 2014

  வாஸந்தியின் நாவல்,  “விட்டு விடுதலையாகி” ஒரு நாவல் என்பதற்கும்  மேல்,  நம் வாழ்க்கை மாற்றங்களையும் அவ்வப்போது மாறும் நம் பார்வைகளையும், மதிப்பீடுகளையும், ஸ்தாபன தோற்ற காலத்து தர்மங்கள் நம்மின் குணம்  சார்ந்து, மாறுவதையும் பற்றியெல்லாம் சிந்திக்கத் தூண்டும் களமுமாகிறது தேவதாசி என்றும் தேவரடியாள் என்றும் அழகான பெயர் சூட்டி நடனத்தின், சங்கீதத்தின் பக்தியின் உறைவிடமாக உருவாக்கப்பட்ட ஒரு ஸ்தாபனம் தேவடியாளாகச் சீரழிந்தற்கு, அல்ல, சீரழிக்கப் பட்டதற்கு நம் குணமும் பார்வையுமே தான் காரணமாகியுள்ளன என்பதை நாம் […]