திருமால் புகழ்பாடும் திருப்புகழ்

This entry is part 13 of 24 in the series 9 ஜூன் 2013

எஸ் ஜெயலட்சுமி                       ”திருமால் புகழ் பாடும் திருப்புகழ்” என்ற இந்தத் தலைப்பைக் கேட்ட என் தோழி ”திருமால் புகழ் பாடுவது திருவாய் மொழியல்லவா? முருகன் புகழ் பாடுவது தானே திருப்புகழ்? திருமாலின் புகழையும் திருப் புகழ் பாடுகிறது என்றால் கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கு” என்றாள். ஆமாம் திருப்புகழ் முருகனின் புகழோடு திருமாலின் புகழையும் பாடுகிறது.                              முருகனின் தீவிர பக்தரான அருணகிரிநாதர் சைவ […]

“இவரைத் தெரிந்து கொள்ளுங்கள்” – திரு கர்ணன்

This entry is part 2 of 24 in the series 9 ஜூன் 2013

முதலில் இம்மாதிரி ஒரு தலைப்பில் ஆரம்பிப்பதே தவறு என்றுதான் தோன்றுகிறது. தலைப்பை வைத்தே அவரை யாருக்கும் தெரியாது என்பதை நாமே உறுதிப் படுத்துவதாக ஆகி விடுகிறது என்பதுதான் உண்மை. ஆனாலும் கூட இம்மாதிரி விஷயத்திற்கெல்லாம் இப்படித் தலைப்பிட்டுத்தான் சொல்லித் தொலைக்க வேண்டியிருக்கிறது. காரணம் நம் தமிழ்நாட்டின் நிலைமை அப்படி. அதாவது தமிழ்நாட்டிலுள்ள பல எழுத்தாளர்களின் நிலைமை என்று சொல்ல வந்தேன். கேரளா போன்ற மாநிலங்களில் ஒருவர் ஒரு புத்தகம் வெளியிட்டிருந்தால் கூட அவரை ஊரறிய மேடை ஏற்றி […]

நாகூரின் தாகூர் என அதிக பட்ச சொற்களால் பாராட்டப் பட்ட கவிஞர் நாகூர் சலீம்

This entry is part 18 of 21 in the series 2 ஜூன் 2013

கவிஞர் நாகூர் சலீம் 01-06-2013 அன்று மரணமடைந்தார்..வண்ணக் களஞ்சியப் புலவர்அவர்களின் பரம்பரையில் பிறந்த கவிஞர் நாகூர் சலீமுக்கு வயது 77. , இவர் எழுதிய 7,500க்கும் மேற்பட்ட இஸ்லாமியப் பாடல்கள், நாகூர் ஈ.எம்.ஹனீபா காயல் ஏ.ஆர்.ஷேக்முகமது ,இறையன்பன் குத்தூஸ் உள்ளிட்ட அனைத்து இஸ்லாமியப் பாடகர்களும் பாடி பிரசித்திப் பெற்றவை. கவிஞர் நாகூர் சலீம் பாடல்கள் 500 இசைத்தட்டுகளாகவும், 100க்கும் மேற்பட்ட ஒலிநாடாக்களாகவும் வெளிவந்துள்ளன முதல் இஸ்லாமியப் பெண்மணி எழுத்தாளர் சித்தி ஜுனைதா பேகம், திரைப்பட வசனகர்த்தா தூயவன் […]

கதிர்பாரதியின் ” மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்” – கவிதை நூல் விமர்சனம்

This entry is part 15 of 21 in the series 2 ஜூன் 2013

      கவிதை என்பது பேரனுபவம்… அது படைப்பவனுக்கும் படிப்பவனுக்கும் வாய்க்கக் கூடியது. கதிர்பாரதியின் மெர்சியாவுக்கு மூன்று மச்சங்கள் என்ற நூலில் காணக் கிடைக்காத ஒரு உலகம் காட்சி அளிக்கிறது. ஒரு முரட்டு குதிரையின் வேகத்தில் காட்சிகள் அனுபவங்களை மனதில் வரைந்து செல்கின்றன. அவைகள் வெறும் சித்திரங்களாய் அல்லாது உயிருள்ள உருவங்களாய் நம்மை உணர்வூட்டி அசைத்துச் செல்கின்றன.   அன்றாட வாழ்க்கையில் சாமான்ய தொழிலாளரிலிருந்து கணினியிலேயே வாழ்க்கையை நகர்த்துகிற முகநூல் பொழுதுபோக்கி வரை அவர்களின் அன்றாட […]

கவிதாவின் கவிதைகள்

This entry is part 3 of 21 in the series 2 ஜூன் 2013

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் 2008-ல் வெளியான ‘சந்தியாவின் முத்தம்’ கவிதைத் தொகுதியை எழுதியவர் கவிதா. எம்.ஏ., பட்டதாரியான இவர் சென்னையைச் சேர்ந்தவர். இப்புத்தகம் காலச்சுவடு அறக்கட்டளை நடத்திய பெண் கவிஞர்களுக்கான போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளது. இதில் 34 கவிதைகள் உள்ளன. இவை காதலைப் பாடுபொருளாகக் கொண்டவை! 4 கவிதைகளுக்கு மட்டுமே தலைப்பு உள்ளது. ‘ஒளியின் நிறத்திலொரு இரவு’ என்ற கவிதை காதல் பிரிவைக் கருப்பொருளாகக் கொண்டது. இது வழக்கமான காதல் கவிதை இல்லை. புதிய ஆழமான சிந்தனை […]

நோயல் நடேசனுடைய “அசோகனின் வைத்தியசாலை“ என்ற புதிய நாவல்

This entry is part 31 of 40 in the series 26 மே 2013

அசோகனின் வைத்தியசாலை – கருணாகரன் நோயல் நடேசனுடைய “அசோகனின் வைத்தியசாலை“ என்ற புதிய நாவல் அவருடைய Noelnadesan’s Blog என்ற இணைத்தளத்தில் தொடராக வெளியாகிக் கொண்டிருக்கிறது. இணையத்தில் இந்த நாவல் பிரசுரமாவதற்கு முன்பு, முழுமையாக வாசிக்கக் கிடைத்தது நல்லதோர் வாய்ப்பே. மின்னஞ்சல் மூலமாக இதை அனுப்பி வைத்திருந்தார் நடேசன். புலம்பெயர் சூழலிலிருந்து புதிதாக ஏதாவது வரும் என்று எதிர்பார்க்கப்பட்டதற்கு ஏற்றமாதிரி, வேறுபட்ட கதைக்களத்தையும் நிகழ்ச்சிகளையும் பாத்திரங்களையும் கருவையும் கொண்டு தமிழில் எழுதப்பட்ட இன்னொரு நாவலாக “அசோகனின் வைத்தியசாலை“ […]

தியத்தலாவ எச்.எப் ரிஸ்னாவின் “இன்னும் உன் குரல் கேட்கிறது”

This entry is part 25 of 40 in the series 26 மே 2013

  மொழிவரதன்   புரவலர் புத்தகப் பூங்காவின் 30 ஆவது வெளியீடாக வந்துள்ள தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் “இன்னும் உன் குரல் கேட்கிறது” கவிதைத் தொகுதி என் கரம் கிட்டியது.   அழகான முகப்பு அட்டைப் படம் நூலுக்கு அழகு சேர்த்துள்ளது. வானத்தில் உலாவும் ஒரு தேவதையின் தோற்றமும், பறக்கும் அவளது மெல்லிய ஆடை, சிறகுகள் எல்லாம் வண்ணத்தால் மிளிர்கின்றன. ஊதா நிறத்திலான பின்னணி நிறமும், அதன் கீழே இளம் பச்சை நிறமும் கண்ணுக்கு இதமாக உள்ளன […]

எழிலரசி கவிதைகள்

This entry is part 12 of 40 in the series 26 மே 2013

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் 1968-ல் ராணிப்பேட்டையில் பிறந்த எழிலரசி தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது நாமக்கல் பள்ளி ஒன்றில் தமிழாசிரியையாக இருக்கிறார். இவரது முதல் கவிதைத் தொகுப்புதான் ‘மிதக்கும் மகரந்தம்’ இதில் 44 கவிதைகள் உள்ளன. தத்துவப் பார்வை, வாழ்க்;கையை ஊடுருவிப் பார்த்தல், எளிமை, பூடகத் தன்மை வழி வாசகன் மனத்தில் கேள்விகளை எழுப்புதல், அகநோக்கி ஆகியவை இவரது கவிதை இயல்புகள் எனலாம். ‘அந்தக் கணம்’ – முன் வைக்கும் வியப்பு எல்லோருக்குமானதுதான். கையால் பிடிக்க முடியாமல் […]

அழியாத காதலின் ஆலயம் – நூல் விமர்சனம்

This entry is part 8 of 40 in the series 26 மே 2013

  குமரி எஸ். நீலகண்டன். இதுவென்று எதுவுமில்லை. எதிலும் இது இல்லை. எனதென்று உலகில் எதுவுமில்லை. உனதென்று உலகில் ஒன்று மில்லை.. ஒன்றுமில்லா உலகத்தில் பேருருவுடன் பெருத்த புன்னகையுடன் காத்திருக்கிற ஒன்று அன்பு. பலருக்கும் அது காட்சி அளிப்பதில்லை. சுந்தரம் அவர்களுக்கு மட்டும் அது சூரியனாய் காட்சி அளித்திருக்கிறது.   ஒவ்வொரு வீட்டிற்குள் நுழையும் போதும் இருக்கைகள் தெரியும். புத்தகங்கள் தெரியும். பொருட்கள் ஒவ்வொன்றும் தெரியும்… விலை உயர்ந்த பொருட்கள், கலைப் பொருட்கள் சிலர் மனதில் ஆழமாய் […]

SECOND THOUGHTS [ஸெகண்ட் தாட்ஸ்] கவிஞர் நீலமணியின் ஆங்கிலக் கவிதைத்தொகுப்பு

This entry is part 2 of 40 in the series 26 மே 2013

கடந்த 55 ஆண்டுகளாக கவிதை எழுதிவருகிறவர் கவிஞர் நீலமணி. தமிழ் சிறுபத்திரிகைகளுக்கு நன்கு அறிமுகமானவர். சமூகவுணர்வு மிக்க அதேசமயம் கவித்துவம் குறையாத கவிதைகளை கணிசமான எண்ணிக்கையில் எழுதியிருப் பவர். அவருடைய கவிதைகளில் நிறைய நீள்கவிதைகளும் உண்டு. தமிழ் வளர்ச்சிக் கழகம் விருது, பாவேந்தர் நூற்றாண்டு விழாவில் வழங்கப்பட்ட பாவேந்தர் விருது ஆகிய விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டிருக்கிறார். இவருடைய வலைப்பூ தமிழ்க்கடலில் கவி அலைகள். www.kavineelamani.blogspot.com   ஆங்கிலமொழியிலும் தேர்ச்சிபெற்றவரான அவர் நேரடியாக ஆங்கிலத்திலேயே எழுதிய கவிதைகள் அடங்கிய […]