(ஹைக்கூ கவிதைகள்)
அகநி வெளியீடு
- லதா ராமகிருஷ்ணன்
ரத்தினச்சுருக்கமாய் என்று தமிழில் கூறுவார்கள். சுருங்கக்கூறல் அதன் கனகச்சிதமான தன்மையால் மகிமை பெறும் பாங்கு இலக்கியத்தில் அதிலும் கவிதையில் அடிக்கோடி டப்படவேண்டிய அம்சம். 400 பக்க நாவலில் சொல்லப்படுவதை, 400 பக்க நாவல் ஏற்படுத்தும் தாக்கத்தை அடர்செறிவாய் 20 வரிகளில் ஒரு கவிதை சொல்லிவிட முடியும்! அதுவும், ஹைகூ கவிதையில் அந்தத் தாக்கம் இரண்டு மூன்று வார்த்தைகளில் அல்லது வரிகளில் ஏற்படுத்தப்பட்டுவிடுகிறது.
மூன்று அல்லது நான்கு வார்த்தைகளில் அக புற வாழ்வு சார் காட்சி அல்லது காட்சிப்-படிமம் கண்முன் விரிந்து வாசக மனதை அதனூடாய் அலைந்து திரியச் செய்கிறது!
ஜப்பானில் தோன்றிய இந்தக் கவிதை வகைமை இன்று உலகெங்கும் கையாளப்பட்டு வருகிறது. தமிழிலும் இந்த கவிதை வகைமை கையாளப்பட்டுவருகிறது. ஒருவகை யில் திருக்குறளைக் கூட ஹைகூவாகக் கூறமுடியும்! தமிழின் பழமொழிகள் பல ஹைகூ தன்மையானவை! அப்படி சமீபத்தில் அகநி பதிப்பகம் குழல்வேந்தனின் யானைச்சுமை என்ற தலைப்பிலான ஹைகூ கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக் கிறது.
குழல்வேந்தன் என்பது கவிஞர் கோ.கண்ணனின் புனைபெயர். தன் பார்வைத்திறன் சார் இழப்பையும் மீறி எத்தனையோ இடையூறுகளுக்கிடையில் படித்து தமிழில் முனைவர் பட்டம் வாங்கி இன்று அவர் படித்த தர்மபுரி அரசுக் கல்லூரியிலேயே கல்லூரித் தலைவராகப் பணியாற்றிவரும் திரு.கண்ணனின் முதல் கவிதைத்தொகுப்பின் தலைப்பே ஒற்றைவரிக் கவிதை: ஓசைகளின் நிறமாலை! கவித்துவம் குறையாமல் வாழ்வைப் பல கோணங்களில் ஆய்ந்தலசும் கவிதைகள் இவரு டையவை. அனுதாபம் தேடாமல் அதேசமயம் பார்வையிழந்த மாற்றுத்திறனாளிகளுக் கான சமநீதி – சம உரிமை, சம வாய்ப்புகளைக் கோரும் குரலாகவும் ஒலித்த கவிதை களைக் கொண்டவை இவருடைய முந்தைய இரண்டு கவிதைத் தொகுப்புகளான ஓசைகளின் நிறமாலை; (வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் அமைப்பால் வெளியிடப்பட்டது) ; மழைக்குடை நாட்கள் (விருட்சம் வெளி யீடாக பிரசுரமானது) தவிர இவருடைய ஒரு சிறுகதைத் தொகுப்பும் கட்டுரைத் தொகுப்பும் வெளியாகி யுள்ளன. தன்னளவில் தரமான கவிஞரும், இந்து தமிழ் திசை நாளிதழில் முக்கியப் பொறுப்பு வகிப்பவருமான திரு.முருகேஷ் இந்தக் கவிதைத் தொகுப்புக்கு விரிவான முன்னுரை எழுதியுள்ளார். அதில் ஹைகூவின் தொற்றம், வளர்ச்சி, வகைப்பாடுகள், கவிஞர் குழல்வேந்தனோடு தனக்குள்ள இலக்கிய உறவு, பரிமாற்றம் குறித்தெல்லாம் விரிவாக ஆத்மார்த்தமாய் பதிவு செய்துள்ளார்.
அதிலிருந்து சில வபகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன.
“ஹைக்கூவில் ஆர்வமேற்பட்டு எழுத வந்திருக்கும் பலருள் நம்பிக்கையளிக்கக் கூடிய புதுவரவாகிறார் என் பேரன்புக்குரிய அண்ணன் கோ.கண்ணன் எனும் இயற்பெயரு டைய கவிஞர் குழல்வேந்தன். தருமபுரி அரசு கலைக்கல்லூரின் ஆற்றல்மிகு முதல்வர். ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட இருபால் மாணவச் செல்வங்கள் படிக்கும் கல்லூரியில் மிகத் திறம்பட செயலாற்றி வருபவர். சிறப்பான செயல்பாடுகளுக்காகத் தமிழக முதல்வரின் பாராட்டுப் பதக்கத்தைப் பெற்ற சிறப்புக்குரியவர். இது கல்விப்புலம் சார்ந்த பங்களிப்பென்றால், இலக்கியம் சார்ந்தும் நிறையவே செய்து வருபவர். இரு கவிதை நூல்களையும், ஒரு சிறுகதை நூலையும் படைத்துள்ளார். எந்தப் புத்தகம் பற்றி வேண்டு மானாலும் இவரோடு மனம் திறந்து உரையாடலாம். அந்த நூலை வாசித்தி ருப்பார்; அல்லது வாசித்துக் கொண்டிருப்பார். அல்லது அடுத்த நாளே வாங்கி விடுவார். ‘உங்களை ஈராண்டுகளுக்கு முன்பே சிவகங்கையில் ‘காலா பாணி’ நாவலுக்காகச் சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் மு.ராஜேந்திரன், இஆப, அவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் சந்தித்திருக்கிறேன்’ என்று முனைவர் கோ.கண்ணன் சொன்னபோது, கவிஞரது நினைவாற்றல் கண்டு நெகிழ்ந்து போனேன். கடந்த 2026 மார்ச் 6 அன்று தருமபுரி அரசு குழல்வேந்தன் 5 கலைக்கல்லூரி ஆண்டு விழாவில் உரையாற்றுவதற்காகச் சிறப்பு அழைப்பா ளராகச் சென்றபோது தான் அருகமர்ந்து கைகுலுக்கிக் கொண்டேன். முதல்வர் அறையில் சில நிமிடங்களும், பின்னர் உணவருந்தும்போது சில நிமிடங்களும் எங்களுக்குள் உரையாடல் நிகழ்ந்தது. ஹைக்கூ பற்றி நிறையவே தெரிந்திருக் கிறார் என்பதை உரையாடலின் வழி அறிந்துகொண்டேன். ஹைக்கூ பற்றி நான் சொல்லச் சொல்ல மிகுந்த ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டார். நான் கொண்டு சென்ற ஹைக்கூ நூல்களையும் பெருங்காதலோடு வாங்கிக்கொண்டார். எதையும் அறிந்துகொள்வதில் மிகுதியான ஆர்வமுடையவராக என்னுள் நிறைந்துபோனார்.
இந்தக் கவிதைத்தொகுப்பில் ‘குழல்வேந்தனாகிய நான்… ’ என்ற தலைப்பில் கவிஞர் கோ.கண்ணன்(குழல்வேந்தன்) எழுதியுள்ள சிறு ‘என்னுரையும் குறிப்பிடத்தக்கது. இது இன்னும் விரிவாக எழுதப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.
இனி, கவிதைத்தொகுப்பிலிருந்து சில ஹைகூ கவிதைகள்
பிள்ளை கேட்டது யானையை
பானைக்குள் அடக்கச் சொல்லியழுதது
என்ன செய்வானோ இந்தப் பாகன்…?
சேசுவின் சுமை குட்டிக் கழுதைக்கு
சிலுவையின் சுமை ஏசுவுக்கு
வரலாற்றின் சுமை நமக்கு.
ரோசாப்பூவின் நேசம்
இதழ் சிந்தும் கள்ளுக்கல்ல
தஞ்சம் தரும் முட்களுக்கே
எச்சமிடும் பறவைகள்
எப்படி அறியக்கூடும்
சிலைகளின் மௌன சீற்றத்தை?
கருணை மழைக்காக
ஏங்கித் தவிக்கின்றனர்
அப்பாவி மக்கள்
ஏப்ரல் 2026இல் முதல் பதிப்பு வெளியாகியுள்ளது. தொடர்புகொள்ள: அகநி வெளியீடு அலைபேசி: 94443 60421 akaniveliyeedu@gmail.com
யானைச் சுமை