************************************
வாழ்வு
மழையில் நனைகிறது அழகாகிறது
வெய்யிலில் காய்கிறது மீண்டும் அழகாகிறது
வயதாகி நரைத்த பூமிப் பந்தை
புதுப்பிக்கப்பட்ட கண்ணால் பார்
மரத்தின் கீழ்
சிவப்புமலர் வீழ்ந்து
பச்சை வயலை பனித்தூள் கவ்வி
வெளிச்ச ஆறு பாய்ந்து
வார்த்தை தாண்டிக் கூறுகிறேன் வார்த்தையால்
இவ்வுலகு
கடவுளின் கனவு.
– பா.சத்தியமோகன்
- யானைச் சுமை
- காற்றுவெளி இதழ்
- மாட்டு சந்தையில் விற்கப்படும் மனிதர்கள்….
- கவிதை
- தவம்
- அட!
- மழை புராணம் : 31
- மழை புராணம் – 32 -யோசித்தால் வாழும் மழை
- அழகே உன் விலை இதுதானா?
- வங்காளத்தின் மாற்றம் – எப்படி புரிந்து கொள்வது?