அர்னாப் ராய்
இது 90களின் ஆரம்பம். கொல்கத்தாவில் உள்ள எங்கள் பகுதியில் ஒரு மனிதர் இருந்தார், அவரை நாங்கள் பாரா என்று அழைப்போம். அவர் ஓய்வு பெற்றவர், அவருக்கு நிறைய கருத்துக்கள் இருந்தன, அதை யார் கேட்க விரும்புகிறார்களோ அவர்களுடன் பகிர்ந்து கொள்வார், கேட்காதவர்களிடமும் கூட. கிரிக்கெட் பந்து அவரது கதவுக்கு அருகில் வருவதை அவர் உணர்ந்தால், (ஏதோ ஒரு காரணத்திற்காக அவர் கதவை திறந்து வைத்திருப்பார்) அவர் சத்தமாக எங்களை, குழந்தைகளைத் திட்டினார், ஆனால் எல்லோரும் அவரைத் திட்டினார்கள். இருப்பினும், அவரை தனித்துவமாக்கியது என்னவென்றால், மக்கள் இன்று பேசுவதை விட அரசியலைப் பற்றி குறைவாகப் பேசிய காலத்தில், சமூக ஊடகங்கள் இல்லாததால், அவர் தனது அரசியல் சார்புகளை வெளிப்படையாகக் காட்டினார். வங்காளத்தில் இடது முன்னணி ஆதிக்கம் செலுத்திய நேரத்தில், ஜூலியஸ் சீசர் தனது ஆட்சியில் இருந்ததைப் போல, மேலாதிக்கத்தில் இருந்தனர், ஆனால் பாரதிய ஜனதா கட்சி தேவை என்று அவர் கூறுவார். அவரை நாங்கள் கேலி செய்வோம் – அவரது முதுகுக்குப் பின்னால் இருந்து தான்.மூங்கிலால் “தோட்டம்” என்று அடைக்கப்பட்ட நடைபாதையில் தான் தாமரை மலர்கள் பூக்கும். அன்பாகவும் அலட்சியமாகவும் சொல்லும் விதத்தில் அதைச் சொன்னோம், ஏனென்றால் அக்காலத்தில் சிபிஎம் தோற்கடிக்கப்படும் என்றும், பாஜக ஆட்சி செய்யும் என்றும் சொல்வது சாத்தியமற்றது.
இன்று நாம் இங்கு 2026=ம் ஆண்டு. மேற்கு வங்க சட்டமன்றம். 294 இடங்களைக் கொண்ட சட்டப்பேரவையில் பாஜக 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற உள்ளது. இது ஒரு மிகப்பெரிய, முன் எப்போதும் இல்லாத வெற்றியாகும். மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, ஜோதி பாசுவின் இடது முன்னணிக்கு உண்மையான ஆன்மீக வாரிசாக இருந்தது. அவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 215 இடங்களை வைத்திருந்தனர், ஆனால் இப்போது சுமார் 80 இடங்களாகக் குறைந்துள்ளனர். இந்த மாநிலத்தை 34 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி செய்த CPM ஒரே ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது. முப்பத்தைந்து வருட கம்யூனிஸ்ட் ஆட்சி, முதலில் அசல் பிராண்டின் கீழ் இருந்தது, பின்னர் போலியான ஒன்றாக திரிணாமுல் கீழ். பதினைந்து வருடங்கள் கழித்து வலதுசாரி தாமரை மலர்ந்திருக்கிறது.
வங்காளத்தில், ஆட்சிகள் ஒரு பிரபஞ்ச கால அளவில் நிலைத்திருக்கின்றன; பால்வீதிகள் இருளாகிப் போகலாம், ஆனால் நம் அரசாங்கங்கள் மறைவதில்லை. இது மார்க்சிச செயல் திட்டத்தின் ஒரு சிறப்பு அம்சம், CPIM இன் அசல் பிராண்ட் , பின்னர் திரிணாமுல் காங்கிரஸால் குளோன் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டது. அதாவது “கட்சி” தங்கள் டிஎன்ஏவை நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைக்கிறது, அல்லது மார்க்சிஸ்டுகள் முன்னர் “நிறுவனக் கைப்பற்றுதல்” என்று அழைத்தது, வாழ்க்கையாக முழுக்க இருப்பது அனைத்தும் கட்சியே, கட்சியாக இருப்பது முழுதும் வாழ்க்கை. வங்கிகள், காவல்துறை, விளையாட்டு அமைப்புகள், திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பூஜை கமிட்டிகள் அனைத்தும் கட்சியின் ஆயுதங்களாகின்றன, இது ஒரு கட்சியை வெளியேற்றுவதை மிகவும் சாத்தியமற்றதாக்குகிறது. சில தொகுதிகளில் ஒரு சில சதவீத புள்ளிகளை அதிகரிக்க வேண்டும், ஆனால் அது அரிதாகவே நடப்பதாகத் தெரிகிறது. வங்காளத்தில் ஒரு அரசாங்கம் மாற வேண்டுமென்றால், நீங்கள் பல எண்கள் உள்ள பூட்டை உடைக்க வேண்டும்; எல்லா எண்களும் சரியாக ஒரே நேரத்தில் விழ வேண்டும். ஒரூ எண் தவறாகப் பெற்றால், உங்களுக்கு “சிஸ்டம் பூட்டப்பட்டது, நான்கு வருடங்களுக்குப் பிறகு முயற்சிக்கவும்” என்ற செய்தி கிடைக்கும்.
2026 இல் வங்காளத்தில், முதன்முறையாக பாஜக எல்லாவற்றையும் சரியாகச் செய்தது. அவர்கள் கூட, எல்லா ஆரவாரங்களையும் மீறி, இது இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
அந்த இரண்டு கதைகளுக்கு வருவதற்கு முன்பு, ஆட்சி மாற்றத்திற்கு எது காரணமல்ல என்பது பற்றி ஒரு வார்த்தை, ஏனென்றால் இது முக்கியமானது. ஒவ்வொரு தேர்தல் சுழற்சியிலும், ஆய்வாளர்கள் நலத்திட்டங்களை கணக்கிடுகிறார்கள். TMC மாதம் ரூ 1,500 கொடுக்கிறது; BJP ரூ 3,000 தருவதாக உறுதியளிக்கிறது. இந்திய வாக்காளர்கள் முட்டாள்கள் அல்ல; ஒரு கட்சி ஆட்சியில் இல்லாதபோது அது எந்த வாக்குறுதியும் அளிக்க முடியும் என்பதை அவர்கள் அறிவார்கள். மானியக் கணக்கீடுதான்தேர்தலைத் தீர்மானிக்கும் காரணியாக இருந்தால், எந்த அரசாங்கமும் இரண்டாவது முறையாக ஆடசிக்கு வர முடியாது. வங்காளத்தில் அரசுகள் பல தசாப்தங்களாக உயிர்வாழ்கின்றன. நலத்திட்டங்கள் தேர்தலில் நுழைவுக் கட்டணம் மட்டுமே. வெற்றிக்கு உத்தரவாதம் அல்ல.
வங்காளத்தில் ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்துவது குறைந்தபட்சம் இரண்டு சொல்லாடல்கள் ஒரே நேரத்தில் மக்கள் மனதில் இருந்தால் தான். . ஒன்று “நான் ஏன் இந்த அரசாங்கத்தை வெறுக்கிறேன்”. மற்றொன்று “நான் ஏன் மாற்று வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?”. ஒரு மாற்று வழி தோன்றாவிட்டால், அரசாங்கம் அதிருப்தியின் காரணமாக பல தேர்தல் சுழற்சிகளுக்கு ஆளாகிறது. முப்பத்தைந்து (சரி அது முப்பத்து நான்கு) வருட பழைய CPIM ஆட்சி தொடர்ந்தது, வங்காள மக்கள் அதன் தீய எண்ணத்தையும் வன்முறையையும் பார்க்கவில்லை என்பதால் அல்ல, ஆனால் சிங்கூர் மற்றும் நந்திகிராம் நடக்கும் வரை அந்தத் திருப்புமுனை இருந்ததே இல்லை, அப்போதும் கூட இடது முன்னணி நிலைத்திருக்கும் – மம்தா பானர்ஜி ஒரு சாத்தியமான எதிர்க்கட்சி வேட்பாளராக இறுதியாக முன் வராமல் இருந்திருந்தால்.
ஆனால் நாம் இந்த 2026 தேர்தலைப் பற்றி பேசுகிறோம். தீதி இபபோது தனது சிறப்பான பொழுதில் அல்ல, ஆனால் அவரது மோசமான நிலையில் இருக்கிறார். . அவர் எப்படி இந்த நிலையை வந்தடைந்தார்?
மம்தா பானர்ஜிக்கு ஒரு அர்த்தம் இருந்த காலம் இருந்தது. நானே ஒருமுறை அவருக்கு வாக்களித்தேன். மம்தா பானர்ஜியின் காங்கிரஸ் சகாக்களில் பெரும்பாலானோர் கம்யூனிஸ்டுகளின் கூலிக்கு வேலை செய்பவர்களாக இருந்தனர்; அந்த அரசியல்வாதியை வாங்கவோ அல்லது அச்சுறுத்தவோ முடியாது என்று சொல்லக்கூடிய ஒரே நபர் தீதி மட்டும் தான். அவர் எப்போதும் தெருக்களில் இருந்தார். அவர் எப்போதும் போராடிக் கொண்டிருந்தார். அவர் எந்தவொரு ஒத்திசைவான சித்தாந்தத்திற்கும் குறிப்பாக நிற்கவில்லை, அப்போதும் ஒரு கலவரக்காரராகவே இருந்தார். ஆனால் ஜோதி பாசுவின் கீழ் CPM இருந்ததைப் போல திட்டமிட்ட சர்வாதிகாரத்தின் கீழ் நீங்கள் வாழும்போது, சித்தாந்தம் குறைவாகவே முக்கியத்துவம் பெறுகிறது. தைரியமான எதிர்ப்பு தான் முக்கியத்துவம் பெறுகிறது.
எதிர்க்கட்சியில் ஒரு தலைவரை சிறந்தவராக மாற்றும் குணங்கள், அமைதியான செயல்முறையை உதாசீனம் செய்வது, எப்போதும் மோதலுக்குத் தயாராய் உள்ள தெருப் போராளியின் உள்ளுணர்வு ஆகியவை. ஆனால் அதிகாரத்தில் பொறுப்புகள் ஏற்க வேண்டும். எதிர்க்கட்சி மனநிலை ஆட்சி செய்ய உதவாது. சில நேரங்களில் பேரழிவுகரமானவை கூட. மம்தா பானர்ஜி எப்போதும் தன்னளவில் எதிர்க்கட்சித் தலைவராகவே இருந்தார். அவர் பதினைந்து வருடங்கள் கழித்துக்கூட ஆட்சி புரியும் மனநிலைக்கு மாறவில்லை. அவர் எதையாவது குறித்து தொடர்ந்து போராடினார், மாணவர்கள் பணிவாக அவரிடம் கேள்விகள் கேட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இருந்து வெளியேறினார், அவரைத் தூக்கியெறிவதற்கு சதித்திட்டங்களைக் கண்டுபிடித்தார், இதுவும் சதி , அதுவும் சதி என்று நிழல்களை நோக்கி வாள் சுழற்றினார். மற்ற எதிர்க்கட்சிகள் தம் மாநிலத்திற்கு நலன் வேண்டி மத்திய அரசுடன் ஒத்துழைத்தபோது, அவர் பாஜக அரசாங்கத்துடன் இடைவிடாத போரைத் தொடர்வார், மேலும் அவரது மாநிலம் இதனால் பாதிக்கப்பட்டாலும் அவர் உண்மையில் கவலைப்படவில்லை
மோதல் மற்றும் பலியாதல் பற்றிய ஒரு கதை இருந்தால் மட்டுமே அவரால் தனது பேரணிகளில் தொடர்ந்து பயன்படுத்த முடியும்.
ஊழல் இருந்தது. அரசியல் கட்சிகள் ஊழல் இல்லாமல் காற்றை உட்கொண்டு இயங்க வேண்டும் என்றோ , தங்கள் கருணை மனம் கொண்டு ஆட்சி செய்ய வேண்டும் என்றோ யாரும் எதிர்பார்ப்பதில்லை. சிபிஎம் முப்பத்து சொச்ச ஆண்டுகளில் தனது சொந்த ஆதரவு வலையமைப்புகளை கட்டி எழுப்பியது. அதிகாரத்தின் பலன்கள் அதிகாரப் படிநிலையில், அதிகாரத்திற்கும் செல்வாக்கிற்கும் ஏற்ப விநியோகிக்கப்பட்டன, இது அவர்களின் முன்னோடிகளான காங்கிரஸ் செய்ததை விட மிகவும் நியாயமான அமைப்பாக இருந்தது. காங்கிரஸ் ஆட்சியில் உயர்மட்ட அதிகாரிகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டனர். ஆனால் சிபிஎம் மற்றும் பாஜகவுக்கு இடையே உள்ள வித்தியாசம் என்னவென்றால், இந்த இரண்டு கட்சிகளுக்கும் அர்ப்பணிப்புள்ள தொண்டர்கள் உள்ளனர், மக்கள் அதன் சித்தாந்தத்தை நம்புகிறார்கள். தவறோ சரியோ , ஆட்சி பற்றிய பார்வை மற்றும் அரசியல் போக்கு எப்படி இருக்க வேண்டும் என்ற பார்வையுடன் இரண்டு கட்சிகளும் உள்ளன. கட்சித் தொண்டர்கள் எல்லோரும் பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே கட்சியில் இல்லை. திரிணமூல் ஒரு இயல்பான கருத்தியல் வெற்றிடமாக உள்ளது, அதாவது இந்தக் கட்சி மமதா பானர்ஜி மற்றும் பின்னர் அவரது மருமகனும் வாரிசுமான அபிஷேக் பானர்ஜிக்கான ஆளுமை வழிபாடு தவிர வேறு எதற்காகவும் உண்மையில் நிற்காது. அவர்கள் என்ன பெற முடியுமோ அதைப் பெறுவதற்காகவே அனைவரும் இதில் உள்ளனர்.
அது கூட பரவாயில்லை. ஊழல் ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு அரசியல் கட்சியிலும் உள்ளது. மேலும் இது வங்காளத்தில் இருந்ததை விடவும் விட மிக அதிகமான அளவில் உள்ளது. மற்ற மாநிலங்களில் உள்ள வித்தியாசம் என்னவென்றால், அரசியல்வாதிகள் வளர்ச்சித் திட்டங்கள், ரியல் எஸ்டேட் மற்றும் தொழில்களைச் சுரண்டுகிறார்கள், இவை கிட்டத்தட்ட யாருக்கும் தீங்கு செய்யாத குற்றங்களாகக் காணப்படுகின்றன: தோடா காவோ, தோடா ஃபென்கோ, (கொஞ்சம் வாயில், கொஞ்சம் விட்டெறி) “ஜானே பி தோ யாரோன்” (தொலைகிறது விடு) என்று மேற்கோள் காட்டுகின்றனர். அரசியல்வாதிகள் செயல்பட வேண்டுமானால், இந்த கப்பம் கட்டுவது போன்ற வசூல் அவசியம் தான் எனபது மக்கள் எண்ணம்.. வங்காளத்திலும், ஊழல் ரியல் எஸ்டேட்டுக்கு (ஷாரதா) மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் வரை நன்றாக இருந்தது, ஆனால் பின்னர், மற்ற மாநிலங்கள் பெற்ற வளர்ச்சி வங்காளத்தில் இல்லாததால் ஊழல் உள்நோக்கித் திரும்பி போது மக்களை வாட்டியது.
ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களை நியமிக்கும் பொறுப்பில் இருந்த வங்காள பப்ளிக் சர்விஸ் ஆணையம், அடிப்படையில் பணத்திற்கு வேலை என்ற திட்டத்தை முன்னெடுத்தது. சுமார் 26,000 ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டனர். அவர்களின் நியமனங்கள் பின்னர் கல்கத்தா உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது. அந்தச் செயல்முறை “கறை படிந்த”தாகவும், “பெரிய அளவிலான மோசடி” அடிப்படையிலானது என்றும் நீதிமன்றம் விவரித்தது. ஊழல் நடந்தபோது டிஎம்சியின் கல்வி அமைச்சராக இருந்த பார்த்தா சாட்டர்ஜி 2022 இல் அமலாக்க இயக்குனரகத்தால் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து நடந்த சோதனைகளில், அவரது நெருங்கிய கூட்டாளியான அர்பிதா முகர்ஜியின் குடியிருப்புகளிலிருந்து சுமார் ரூ. 50 கோடி ரொக்கத்தை புலனாய்வாளர்கள் மீட்டனர். இது வங்காளத்தில் இதற்கு முன்பு கேள்விப்படாத ஊழலின் அளவு மட்டுமல்ல, பாதிக்கப்பட்டவர்கள் நடுத்தர வர்க்கத்தினராகவும் இருந்தனர். அவர்கள் தங்கள் வேலையை இழந்து, சாலையில் அமர்ந்து போராடினர். அதற்கு பதிலாக அவர்களுக்கு கிடைத்ததெல்லாம் திரிணாமுல் வழக்கமாக சொல்லும் பதிலாக பாஜகவின் சதி, ஊடகம் செய்யும் சதி என்று பொறுப்பற்ற பதில் தான் கிடைத்தது.
அது பெரிய அளவிலான ஊழல் மட்டுமல்ல; இது எல்லா இடங்களிலும் இருந்தது: மணலை நகர்த்துவது, சிமெண்ட் நகர்த்துவது, மீன்களை நகர்த்துவது என ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு சந்திப்பிலும் பொது மக்களிடமிருந்து டிஎம்சி தனது “டோலா” அல்லது பறிமுதல் தொகையை வசூலித்தது. கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி வந்தால், அவரைப் பார்க்க பிரீமியம் செலுத்த வேண்டும் , ஆனால் அங்கேயும் கூட, அவர் டிஎம்சி கட்சி உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் நண்பர்களால் சூழப்பட்டிருப்பார், அவருடன் செல்ஃபி எடுக்க வாய்ப்பு கிடைத்தவர்கள் டிஎம்சி சலுகை வட்டத்திற்குள் இருப்பார்கள்.
இந்த ஊழல் இடைவிடாமல் இருந்தது, நிறுத்தப்படாது இருந்தது. நிறுவனங்கள் சமரசம் செய்யப்பட்டால், வன்முறை இருந்தால் மட்டுமே இது போன்ற ஒன்று நீடிக்கும். நீதி இல்லாமல் தொடரும்.அது தான் நடந்தது.
வங்காளத்தில் அரசியல் எப்போதும் வன்முறையாகவே இருந்துள்ளது. டிஎம்சி ஒரு கட்சியாக மாறுவதற்கு முன்பிருந்தே மார்க்சிஸ்டுகளின் மற்றொரு நச்சு மரபு அது. சிபிஎம் தனது முப்பத்து நான்கு வருட சாம்ராஜ்யத்தை எப்படி நிலை பெறச் செய்தது? அரசியல் எதிர்ப்பை திட்டமிட்டு ஒழிப்பது, பூத் கைப்பற்றுதல், போட்டியிடும் தொண்டர்களைக் கொலை செய்வது, மாற்றுக கட்சிக்கு வாக்களித்தவர்களிடமிருந்து சொத்துக்களைப் பறிமுதல் செய்தல் போன்றவற்றைச் செய்தது. டிஎம்சி 2011 இல் ஆட்சிக்கு வந்தபோது இந்த இயந்திரத்தை அகற்றவில்லை, ஆனால் அதைக் கையகப்படுத்தியது. எதிர்க்கட்சித் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் வீடுகள் எரிக்கப்பட்டன அல்லது கைப்பற்றப்பட்டன. 2021 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, பல மாவட்டங்களில் பாஜக தொண்டர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் மீது ஆவணப்படுத்தப்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டன, இதன் அளவு காரணமாக கல்கத்தா உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இது எதுவும் வன்முறையை நிறுத்த வில்லை. கொலை உத்தரவுகளை வழங்கியவர்களை யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் டிஎம்சியின் நிலையான பதில் இது தான்: மறுப்பு, எதிர்க் குற்றச்சாட்டு மற்றும் எல்லாம் பாஜகவின் சதி என்று. இவை அனைத்தின் மூலமாகவும், தீர்வு காண வேண்டிய நிறுவனங்கள், காவல்துறை, நிர்வாகம், அரசு ஊடகங்கள் ஆகியவை நீண்ட காலமாக கட்சியின் அமைப்புக்குள் உறிஞ்சப்பட்டன. நீதி கேட்டு செல்வதற்கு எங்கும் இல்லை. புகார் சொல்ல யாரும் இல்லை. ஆளும் கட்சியின் தயவில் இல்லாத சாதாரண மனிதனுக்கு எங்குமே செல்ல வழியில்லை.
(தொடர்ச்சி அடுத்த இதழில்)
- யானைச் சுமை
- காற்றுவெளி இதழ்
- மாட்டு சந்தையில் விற்கப்படும் மனிதர்கள்….
- கவிதை
- தவம்
- அட!
- மழை புராணம் : 31
- மழை புராணம் – 32 -யோசித்தால் வாழும் மழை
- அழகே உன் விலை இதுதானா?
- வங்காளத்தின் மாற்றம் – எப்படி புரிந்து கொள்வது?