காலை நடை
கண்டேன் ஒரு காட்சி
கண்ணுள் முள்ளாய்
செல்லநாயோடு ஒருவர்
இடுப்பில் வார்கட்டி
லேசாய்த் தூக்கி அவர் நடக்க
முன்னங்கால்களால்
நகர்ந்தது நாய்
அந்த நாயின்
இடுப்புவரை தங்கதிறம்
இடுப்புக்குக் கீழ் ஈயம்
இயக்கமில்லை
முழங்காலிழந்த
பின்னங்கால்கள்
மூலியாய்த் தொங்கின
‘எத்தனை நாளாய் இப்படி?’
‘ஏழு ஆண்டுகள்’
‘எப்படி?’
‘சாலை விபத்து
என்னைக் காக்க
என்முன் பாய்ந்து
தன் பாதி இழந்தது
இப்போது நான்
என் பாதி இழந்து
இவனைக் காக்கிறேன்’
ஒன்று புரிந்தது
உடன் வாழும் நட்புக்காய்
உள்ளதை இழந்தால்
மரணம்கூட மகிழ்ச்சியே
அமீதாம்மாள்
- 2 மொழிபெயர்ப்பு கவிதைகள்
- அந்த 100 நாள்கள் (அரசியல்)
- மழை புராணம் : 47
- மெச்சூரிட்டி
- ஒன்று புரிந்தது – உண்மைச் சம்பவம்
- கிணறு
- சிலுவை – சுப்ரபாரதி மணியன் எழுதிய நாவல்