“சிகப்பு சுடி வேணும்ப்பா” குறும்படம் குறித்து….

This entry is part 13 of 13 in the series 22 மார்ச் 2020

நான் இயக்கிய “சிகப்பு சுடி வேணும்ப்பா” குறும்படம் கூட்டணியின் உழைப் பால் விளைந்தது. இதில் பங்காற்றிய யாவருக்கும் வாழ்த்தும் அன்பும்.VF ENTERTAINMENTS பெருமையுடன் உங்கள் முன் இந்தப் படத்தைச் சமர்ப்பிக்கிறது.யாவரும் படம் பார்த்து விருப்பக்குறியீடும் சப்ஸ்கிரைப்பும் செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். இச்சிறுபடத்திற்கு நீங்கள் தரும் உற்சாகம் மேலும் படங்கள் எடுக்க ஊக்கமளிக்கும்.உங்கள் ஆதரவு தாருங்கள்.நன்றி/ சிகப்பு சுடி வேணும்ப்பா படக்குழு. / கவிஞர் அய்யப்ப மாதவன் வணக்கம் அய்யப்ப மாதவன், உங்களுடைய எத் தனை வருட கனவு இது! […]

இருப்பும் இன்மையும்

This entry is part 12 of 13 in the series 22 மார்ச் 2020

கண்ணன் நான் அளிக்கும் விளக்கம் உனக்கு விளங்கவில்லை என்ற பொழுது, மீண்டும் அதை நான் கூற முற்பட்டு உனக்கு புரிய வைக்க இயலவில்லை எனில் நான் அதன் சாராம்சத்தை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்றே அர்த்தம் என்று ஐன்ஸ்டீன் வேறொரு எடுத்துக்காட்டுடன் சொன்னதாக எங்கோ வாசித்த ஞாபகம் …………………. இப்படியாக தொடர்ந்தது அன்றைய  மாலைப் பொழுது……… ஆம், கார்முகனும், வேலாட்சியும் இன்றைக்கு இப்படித்தான் பேச்சை ஆரம்பித்தார்கள். திருமணம் ஆனதில் இருந்து இருவருக்கும் இடையில், “வீட்டில் அரிசி இல்லை, […]

கனவுகளை விற்பவன்

This entry is part 11 of 13 in the series 22 மார்ச் 2020

சுரேஷ் சுப்பிரமணியன்  தடாகத்தினுள் நடக்கிறேன் தடம் மாறாமல் தாமரை இலைகள் சாமரம் வீசுகின்றன பாதங்களுக்கு! விண்ணில் பறக்கிறேன் வானம்படியாய் மணலில் நீந்துகிறேன் மீனின் நகலாய் அனலில் நீராடுகிறேன் பீனிக்ஸ் பறவையாய்! நிழல் விழாத இரவு என் பகல் நிலவு இல்லாத வானம் என் பூமி நித்திரையில் கனவு இல்லை கனவுக்குள் நான்! கிரகங்கள் என் பந்துகள் வானம் மைதானம் நட்சத்திரங்கள் விளையாட்டு தோழர்கள் ! கடல் மடி துயில் கொள்ளும் தாயின் மடி! மலை என் கர்வத்தின் […]

தக்கயாகப்பரணி [தொடர்ச்சி]

This entry is part 10 of 13 in the series 22 மார்ச் 2020

வளவதுரையன்     கடைதிறப்பு கடை என்பதை வாசல் எனப்பொருள் கொண்டு கடைதிறப்பு என்பதை வாசல் திறப்பு எனக் கொள்ள வேண்டும். தக்கனது யாகத்தைச் சீரழித்து அவனை வெற்றி கொண்ட வீர்ராக வரும் வீரபத்திரரின் பெருமையைப் பாடும் பெண்கள் இல்லத்தினுள் இருக்கும் பெண்களிடம் அவர்களின் வாயிலில் நின்று வாசல் கதவு திறக்கப் பாடுவதே கடைதிறப்பு பகுதியாகும்.       இன்றைய கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் அந்தக் காலத்தில்  இரண்டாம் இராசராச சோழனின் தலைநகராக விளங்கியது. அந்நகரத்தில் தேவமாதர்களும் கடவுளர்களும் […]

குட்டி ரேவதி – ‘பூனையைப் போல அலையும் வெளிச்சம்’ தொகுப்பை முன்வைத்து …

This entry is part 9 of 13 in the series 22 மார்ச் 2020

          ஸ்ரீரங்கம் சௌரிராஜன்      குட்டி ரேவதி கவிதைகளைப் பற்றிப் பேசிய தேவதேவன் ,”  இத்தொகுப்பு மூலம் குட்டி ரேவதி அசலானஒரு கவிஞராகப் பிறந்துள்ளார். ” என்கிறார்.      குட்டி ரேவதியின் கவிதைகள் உணர்ச்சிகள் திரண்டு மேலெழுந்து பொங்கும் இயல்பு கொண்டவை. அரிய சொற்றொடர்கள் விரவிக் கிடக்கின்றன.தனித்தன்மை கொண்ட நடை சாத்தியமாகி இருக்கிறது. நல்ல படிமங்கள் காணப்படுகின்றன.      ‘ நின்றுவிட்ட காலம் ‘ — புதிய படிமத்துடன் தொடங்குகிறது. கருமேகம் தரையிறங்கி உறைந்திருக்கிறது […]

“வல்லூறுகளுக்கு மட்டுமா வானம்” என்ற நூலாக வெளியிட்டுள்ளது.

This entry is part 8 of 13 in the series 22 மார்ச் 2020

அருணா சுப்ரமணியன்  அன்புடையீர், வணக்கம்.  திண்ணை மற்றும் இதர இணைய இதழ்கள், கணையாழி இலக்கிய இதழ்களில் வெளியான எனது கவிதைகளை தொகுத்து நியூ சென்சுரி புக் ஹவுஸ் பதிப்பகம் “வல்லூறுகளுக்கு மட்டுமா வானம்” என்ற நூலாக வெளியிட்டுள்ளது.    திண்ணை இதழில் தான் எனது கவிதை முதன் முதலில் பிரசுரமானது. என்னைப்  போன்ற புதிய கவிஞர்களையும் ஊக்கப்படுத்தும் திண்ணை ஆசிரியர் குழுவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள். புத்தகம் கிடைக்கும் இடம்:New Century Book House (P) Ltd – ChennaiHead Office41-B, […]

ஒரு கதை கவிதையாக

This entry is part 7 of 13 in the series 22 மார்ச் 2020

கம்பிக் கூண்டில் காதல் பறவைகள் ஆடிப் பாடிய காதல் அடிமைக் காதலானது அடைத்துப் போட்டவன் அயல்நாட்டில் இருந்துவிட்டு அறுபது நாள் தாண்டி வந்தான் ஜோடிஜோடியாய்க் குருவிகள் செத்துப் போயின சாவின் வாசலில் துடித்த ஒரு கருஞ்சிவப்புக் குருவி கடவுளைக் கேட்டது ‘நீதியின் அரசனே கொல்லப்பட்ட எம் குலத்திற்கு என்ன நீதி? கொன்றவனுக்கு என்ன நீதி? ‘வாயில்லா உங்களை வாய்மை ஏதுமின்றி வன்கொலை செய்தோரை வைரஸ் கொல்லும்’ ‘கடவுள் சொன்ன கணக்குச் சரிதான்’ என்ற கருஞ்சிவப்புக் குருவியின் கணக்கும் […]

சமகாலங்கள்

This entry is part 6 of 13 in the series 22 மார்ச் 2020

ப.தனஞ்ஜெயன். நேற்றை செய்திகளை கேள்விபட்டததிலேயே நகர்ந்த நாட்களை உடைத்து சென்றதுஇந்தமாதம்அனைவருக்கும் அப்படியே அறிவியலை சேர்த்துவிட்டதுநுண்கிருமிகளின் போராட்டம் முடிந்ததுஎன கதைகள் கேட்டதுண்டு.எப்பொழுதோ புதைந்து நின்றுகொடிய நுண்கிருமிகள்மனிதர்களை அசைத்து பார்க்கிறதுஇன்றைய பொழுதில்வாழ்வின் போரட்டங்களை கட்டமைப்பில்எதிர்கொண்டான் மனிதன்மனதோடு மோதிக்கொண்டு மனிதர்களை எழுப்பிகொண்டிருக்கிறான்சுவரோடு போராடி வீடுகளை எழுப்பி நின்றான்பணத்தோடு போராடி தேவைகளைஎழுப்பும் காலத்தில்தன் வாக்குகளோடு போராடி உரிமைகளை மறந்துவிட்டான்இன்றைய ஆட்சியாளர்களுக்கு இது சவால்தான்பேரிடர் அறிவிப்பை ஏற்க்காமல் இருக்கவும் முடியவில்லைநமது உயிரியல் ஆய்வகங்கள் இவ்வளவு நாள் என்ன செய்து கொண்டிருக்கிறதுஇயற்பியல் ஆய்வில் கவனம்கொண்டது சற்று […]

சொல்வனம் 219ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

This entry is part 5 of 13 in the series 22 மார்ச் 2020

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 219 ஆம் இதழ் இன்று (22 மார்ச் 2020) வெளியிடப்பட்டிருக்கிறது. இதழை https://solvanam.com/ என்ற முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கதைகள்: முதல் காலடி  – சிவா கிருஷ்ணமூர்த்தி நிழல் – லோகேஷ் ரகுராமன் திருவண்ணாமலை – காளி பிரசாத் தரிசனம் – தருணாதித்தன் முறைப்படியான ஒரு பதில் – ஹா ஜின் (தமிழில்: மைத்ரேயன்) வேலைக்கு ஆள் தேவை – அமர்நாத் வால்டிமர் ஏட்டர்டே – ஸெல்மா லாகர்லவ் (தமிழில்: தாமரைக்கண்ணன் கோவை) ஸ்லாட்டர்ராக் போர்க்களத்தில் முதல் வருடாந்திர ஆற்றுகைக் கலை விழா -2 – தாமஸ் டிஷ் (தமிழாக்கம்: நம்பி ) கட்டுரைகள்: ‘Luce’ -திரைப்பட விமர்சனம் – டாலீட் ப்ரௌன், ஜெஃப்ரி ஏ. டக்கர் (தமிழில்: கடலூர் வாசு) வேகமாகி நின்றாய் காளி- பகுதி 5 – ரவி நடராஜன் வாழ்வும் வாழ்தலும்- விலியம் ஜேம்ஸின் நடைமுறை வாதம் – ஜேன் ஓ’க்ரேடி […]

நெஞ்சு பொறுக்குதில்லையே…..

This entry is part 4 of 13 in the series 22 மார்ச் 2020

கடந்த சில வாரங்களாக தினமும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் செய்தியை தமிழ் ஆங்கில நாளிதழ்களில் படிக்க நேர்கிறது. மிகவும் அவலமாக உணர்கிறது மனம். இன்று சென்னை மதுரவாயில் பகுதியில் ஒரு வீட்டின் மூன்றாவது மாடியில் வசிக்கும் குடும்பத் தைச் சேர்ந்த 10 வயதுச் சிறுமி இரவு பனிரெண்டு மணிக்கும் மேல் சிறுநீர் கழிக்க வீட்டுக்கு வெளிப் புறத்தில் இருந்த கழிப்பறைக்குச் சென்றபோது அந்தக் குடியிருப்பில் வசிக்கும் 29 வயதுக் கட்டிடத் தொழிலாளி ஒருவர் மேற்கொண்ட […]