கோவில், கடவுள், பள்ளிக்கூடம், மருத்துவமனை….

This entry is part 11 of 11 in the series 10 மே 2020

_லதா ராமகிருஷ்ணன் சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஏ.வி.எம் கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இலக்கிய விழாவொன்றுக்குச்  சென்றிருந்தேன்.  வந்திருந்த சிறப்பு விருந்தினர்களில் ஒருவரான பிரபல பேச்சாளர் ஒருவர் தனது உரையின் நடுவே, அம்மாவை விட மனைவியே மேலானவள். என்னென்றால், அம்மாவால் தர முடியாததை மனைவியால் தர முடியும்’, என்று  தனது கணீர் குரலில் கூறினார்.  அரங்கமே அதிர்ந்துபோய் அருவருப்போடு முகஞ்சுளித்ததை அவர் பொருட்படுத்திய தாகவே தெரியவில்லை. சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஏ.வி.எம் கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இலக்கிய விழாவொன்றுக்குச் சென்றிருந்தேன். வந்திருந்த சிறப்பு விருந்தினர்களில் ஒருவரான பிரபல பேச்சாளர் ஒருவர் தனது உரையின் நடுவே, ‘அம்மாவை விட மனைவியே மேலானவள். என்னென்றால், அம்மாவால் தர முடியாததை மனைவியால் தர முடியும்’, என்று தனது கணீர் குரலில் கூறினார். அரங்கமே அதிர்ந்துபோய் அருவருப்போடு முகஞ்சுளித்ததை அவர் பொருட்படுத்திய தாகவே தெரியவில்லை. எத்தனை […]

மொழிவது சுகம் மே 10 – 2020 -சாமத்தில் முனகும் கதவு

This entry is part 10 of 11 in the series 10 மே 2020

மொழிவது சுகம் மே 10 – 2020 அ. படித்த தும் சுவைத்த தும்: சாமத்தில் முனகும் கதவு         மனம் அதிசயமானது, அதிவினோத பராக்கிரமசாலி. ஐம்புலன்களால்: தொட்டு, பார்த்து, கேட்டு, சுவைத்து,  நுகர்ந்து அறிய இயலாதவற்றை மனம் தொடுகிறது, மனம் காண்கிறது, மனம் கேட்கிறது, மனம் சுவைக்கிறது, மனம் நுகர்கிறது.           மனத்தின்  உண்மையான சொரூபம் நிர்வாணமானது.  உடலைப்போல அலங்கரிக்கப்பட்டதோ, வாசனை ஊட்டப் பட்ட தோ அல்ல. சமயம், சமூகம், அறிவதிகாரம், அனுபவ மூதுரை முதலான […]

அன்னை & மனைவி நினைவு நாள்

This entry is part 9 of 11 in the series 10 மே 2020

சி. ஜெயபாரதன், கனடா++++++++ இல்லத்தில் அம்மாதான் ராணி !ஆயினும்எல்லோருக்கும் அவள் சேவகி !வீட்டுக் கோட்டைக்குள்அத்தனை ஆண்களும் ராஜா !அம்மாதான் வேலைக்காரி !அனைவருக்கும் பணிவிடை செய்துபடுத்துறங்க மணிபனிரெண் டாகி விடும் ! நித்தமும்பின்தூங்குவாள் இரவில் !சேவல் கூவமுன்னெழுவாள் தினமும் !அம்மாவைத் தேடாதஆத்மாவே இல்லை வீட்டில் !அம்மா இல்லா விட்டால்கடிகாரத்தின் முட்கள்நின்று விடும் ! எந்தப் பிள்ளைக்கும் அவள்பந்தத் தாய் !பால் கொடுப்பாள்பாப்பாவுக்கு !முதுகு தேய்ப்பாள்அப்பாவுக்கு !சமையல் அறைதான்அவளது ஆலயம் !இனிதாய் உணவு சமைத்துப்பரிமாறிஎனக்கு மட்டும் வாயில்ஊட்டுவாள் ! வேலையில் […]

திசைவேலிக்குள் சுழலும் வாழ்க்கை இது…

This entry is part 8 of 11 in the series 10 மே 2020

(Containment Zone சொல் குறித்து) கோ. மன்றவாணன்      கொரோனா தொற்றூழிக் காலத்தில் அச்சத்தின் பிடியில் நாம் நொறுங்குகிறோம். கொரோனாவின் அறிகுறி என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று சொல்கிறார்கள். யாருக்கும் அதன் முழுமுகம் தெரியவில்லை.      ஒரு பகுதியில் கொரோனா தொற்று உள்ளோரைக் கண்டறிந்தால் அந்தப் பகுதியை Containment Zone என்று குறிப்பிடுகிறார்கள். அதைத் தடைசெய்யப்பட்ட பகுதி என்று சிலர் அழைக்கிறார்கள். அது சொல்போல் இல்லை. சொல்விளக்கம் கொண்ட சொற்றொடராக உள்ளது. கட்டுப்பாட்டு மண்டலம் என்று சிலர் […]

தனிமை

This entry is part 7 of 11 in the series 10 மே 2020

ரா.ஜெயச்சந்திரன் மொழிக்களம் தேடும்                     தவம் எனக்கு; பொருமல் விரிசலானது. இரவுணவு அரவமில்லாமல் அரைபட்டது; காலையுணவு காலமானது; தூங்கி எழ தனிமை வணக்கம்! என்னிடம் பேசச் சொல்லி காற்றில் கட்டிச் சென்ற எண்ண அலைகள் தேடி எப்போதும் ஏற்றி விடும் தொடரி வரை பயணம்! நடையிடை வான்கொடை; முகம் முழுதும் முத்துகள்; சொத்தின் சத்துகள்!

அப்துல்ரகுமானின் அயல்மகரந்த சேர்க்கை உணர்த்தும் சமூகம்

This entry is part 6 of 11 in the series 10 மே 2020

முனைவர் பீ. பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632521. mail id: periyaswamydeva@gmail.com  முன்னுரை சமுதாயக் கேடுகளை, அரசியல் அக்கிரமங்களை, எழுத்தாளர்களின் வக்கிரங்களைக் கண்டிப்பதில் அப்துல்காதர் அவர்கள் சிறிதும் தயங்கியது இல்லை என்பதை இக்கட்டுரை தெள்ளிதின் உரைக்கிறது. நட்பின் இறுக்கம், இயற்கையின் நெருக்கம், ஆன்மிகச்சாரம், இசுலாம் ஈடுபாடு, கவிதையின் ஈரம், காதலின் கனிவு, புதுமையின் துணிவு, பூக்கள் தரும் வரம், ஜனநாயகம் இப்படி வாழ்வின் அடிமுதல் முடிவரை உள்ள ஏராளமான சமூக நிகழ்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். சமூகத்தின் உயர்வு தாழ்வுகளை அப்துல்காதர் அவர்கள் கடிந்து கூறியுள்ளார். நுட்பங்களை உணர்த்தியுள்ளார்.  எதிர்ப்புக்குரல் கொடுத்துள்ளார்.  இவருடைய கட்டுரைகளில் இலக்கியமும் சமூகமும் கைகோர்த்து […]

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

This entry is part 5 of 11 in the series 10 மே 2020

                                                                                        பூஐந்தாலும் புகுதற்கரும் பொலம்                   காஐந்தால் ஐந்து சோலை கவினவே.                  [71] [அரும்=அரிதான; பொலம்=பொன்; கா=சோலை]       காமனின் மலர் அம்புகள் ஐந்தும் பூ ஐந்து எனக் குறிப்பிடப்படுகின்றன. அவை: தாமரை, சோகு, முல்லை, மா, நீலோற்பலம். கா ஐந்து என்பது ஐந்து வகை மரங்கள் நிறைந்துள்ள சோலைகளைக் காட்டுகிறது. ஐவகை மரங்களாவன: கற்பகம், பாரிசாதம், சந்தனம், அரிசந்தனம்,மந்தாரம்.       ஐந்து வகை மலர்களான அம்புகளைக் கொண்ட மன்மதனும் உள்ளே நுழைய முடியாத […]

இயலாமை !

This entry is part 4 of 11 in the series 10 மே 2020

காலை நடைப்பயிற்சியில் அமைதியான சூழலை கிழித்துப் போடுகிறது அந்தக் கிளியின் அலறல் வானத்தின் பொது அமைதி பாழ்பட அந்தக் கிளியைத் துரத்துகிறது ஒரு காகம் காகத்தைத் தடுக்கவோ சுய இன நேயம் உணர்த்தவோ கரைந்து கொண்டே பின் செல்கின்றன சில கிளிகள் அபயக்குரல் நின்றபாடில்லை கிளியின் தவிப்பு என் மனத்தில் சிறகடிக்கிறது தொலைக்காட்சியில் பார்த்த புலி வாயில் சிக்கிய மான் சிங்கம் பிய்த்தெடுக்கும் எருமையோடு அந்தக் கிளியையும் சேர்ந்து கொண்டுவிடுமோ ?              ———-

நண்பனின் அம்மாவின் முகம்

This entry is part 3 of 11 in the series 10 மே 2020

குமரி எஸ். நீலகண்டன் ஒரு நெருங்கிய நண்பனின் அம்மாவை முதன்முதலாக இப்போதுதான் பார்க்கிறேன். சில வருடங்களாக என் நட்பு வட்டத்தில் வந்தவன் அவன். அம்மாவின் பொலிவான முகத்தில் வயதான நண்பனின் ஆளுமை வழிந்தோடியது. பால்ய காலத்தில் நான்றியாத நண்பனின் அந்த பால் வடியும் முகம் எனது கற்பனையில் வியாபித்து திரிந்தது. அம்மா பால்ய நண்பனுக்கு பாலூட்டினாள். சிரித்தாள். கோபத்துடன் கண்டித்தாள். வாழைத் தண்டின் நார் பட்டையால் மகனை வலிக்காமல் அடித்தாள். மகனைக் காணாமல் மகனின் பெருமை கூறி […]

உள்ளத்தில் நல்ல உள்ளம்

This entry is part 2 of 11 in the series 10 மே 2020

பாலமுருகன் வரதராஜன் தஞ்சாவூர் “என்ன சத்தமிந்த நேரம்” என SPB இழைந்து உருகிக் கொண்டு இருக்க.. அருண் பரபரத்துக்கொண்டு இருந்தான். அவனது வேலைக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொண்டும், குழந்தைகள் ஸ்கூலுக்கு ரெடியாவதற்கு உதவிக்கொண்டும்… “ஏங்க புள்ளைங்க யூனிஃபார்மை அயர்ன் பண்ணீட்டிங்களா?” என சமைத்துக் கொண்டே இவனை விரட்டிக்கொண்டிருந்த அனிதாவை சமாளித்துக்கொண்டும்… ஒருவழியாய் சிபியும், மானஸாவும் புறப்பட்டுச் செல்ல… இவனும் ரெடியானான்.. இன்று ரெட்ஹில்ஸ் மற்றும் மாதவரம் செல்ல வேண்டும்… சில டுபாக்கூர் பார்ட்டிகளைப் பார்த்து… EMI 3 மாசமா […]