நீ பதித்த தடத்தில் நான் பாதம் பதித்தேன் நடை வேகமானது வியர்வைப் பூ தூவி நுரை தள்ள நீ எனைத் தள்ள மிதிவண்டி கற்றேன் மூச்சடக்கி நீ முதுகு விரித்ததில் நீச்சல் கற்றேன். ராவுத்தர் குளத்தில் மீன் பிடித்தது கொலுசம்பீ சுவரேறி கொடுக்காய்ப்புளி பறித்தது காக்கா வீட்டு நாயை கல்லால் அடித்தது அத்தனையிலும் எனைத் தப்பிக்க வைத்தாய் தண்டனை நீ பெற்றாய் ஒரு மழை மாலை உன் சட்டையே முக்காடாய் நான் மொத்தமும் தெப்பமாய் நீ கல்லூரி […]
அமீதாம்மாள் தொட்டிக் கடியில் துளைகள் இல்லையேல் துளசி அழுகும் மிதப்பவைகள் ஒருநாள் கரை ஒதுங்கும் பூமிக்கு எதற்கு பிடிமானம்? உருவாக்கிய மரத்தையே உருவாக்க முடியுமென்று விதைக்குத் தெரிவதில்லை மலரப் போகும் நாளை குறித்துக் கொண்டுதான் பிறக்கிறது மொட்டு ஆயுளுக்கும் தேவையான பிசினோடுதான் பிறக்கிறது சிலந்தி வேர்கள் தன் தேடலை வெளியே சொல்வதில்லை விஷப் பாம்புகள் அழகானவை ஏறவும் இறங்கவும் தெரிந்தால் போதும் மின்தூக்கிக்கு ஆடு புலியாட்டமாய் வாழ்க்கை ஆடும் ஒருநாள் புலியாகலாம் அழகைச் சொல்வது மட்டுமே பூவின் […]
சூரியப்பெண்ணின் ஆட்சியில்……. ஒளி யருவியில் குளித்தனர் மக்கள் பிரகாச வெளியில் பறந்தன குருவிகள் வெளிச்சம் பார்த்தன குஞ்சுகள் சூரியப்பெண்ணுக் கஞ்சி பொய்க்காமல் பெய்தது மழை மறக்காமல் மாறின பருவங்கள் ஆட்சி சூரியப்பெண்ணிடம் ஆதிக்கமோ சந்திரப்பெண்ணிடம் சூரியப்பெண்ணின் காலடிச் சுவட்டில் தடம் பதித்தார் சந்திரப்பெண் சூரியப்பெண் இருக்குமிடம் சந்திரப்பெண்ணின் இருப்பிடம் சுய ஒளியில் சூரியர் இரவலில் சந்திரர் ஒரு நாள் தோல்வி அறியா சூரியப்பெண் மரணத்திடம் தோற்றார் எப்படி????? […]
சிறந்த சாதனையாம் சீரிய தலைமையாம் எடுசேவ் விருதப்பா எனக்கு இது மகனின் பெருமை நன்னடத்தையில் நான்தான் முதலாம் எடுசேவ் விருது எனக்கும் தானப்பாப்பா இது மகளின் பெருமை பெற்ற பெருமையை அப்பாவிடம் பகிர்வது பிள்ளைக்குப் பெருமைதானே வீட்டுப் பிரச்சினைகளா? அம்மாவுக்கும் அப்பாதானே என்னங்க… நாலு அடுப்பிலே மூணு தூங்குது ஒன்னுதான் எரியுது தண்ணீர்க் குழாய் கசியுது அடுத்த வாரம் மாமாவும் அத்தையும் வாராங்க… குடும்பத் தலைவனுக்கோ தலை போகும் […]
மரணத்திடம் நீ தோற்றாயாம் பொய் மரணத்திடம் தோற்றிருந்தால் ஒரு மனிதச் சுனாமிக்கு நீ மையமானது எப்படி? உன் கரைகளைக் கடக்கும்போதுதான் புல்லாங்குழல் ஊதுகின்றன புயல்கள் பூகம்பங்கள் பூக்களைச் சொரிந்தன உன் பாதங்களில் உன் மின்னல் சொடுக்கில் மௌனித்துப் போயின இடிகள் ஒரு பக்கம் மலைகளைப் புரட்டினாய் மறு பக்கம் மயிலிறகால் மக்களை வருடினாய் கடிவாளமிட்ட சிங்கங்கள் சாத்தியமாக்கினாய் வானவில்லும் வர்ண ஜாலங்களும் தோற்றுப் போயின – உன் […]
செரித்தது சேர்த்தது வந்தது வாழ்ந்தது இருப்பது தொலைந்தது இன்னும் தொப்புள் கொடிச் சேதியும் அடையாள அட்டை அறியும் உடம்புச் சேதிகள் ஊசிமுனை இரத்தம் அறியும் சல்லடைகள் இத்தனைக்கும் சிக்காத சங்கதிகளான நாம் மறைத்த உண்மையையும் தொடுத்த அநீதியையும் இரகசிய ரொக்கத்தையும் நம் சந்ததிக்குச் சொல்லிவிட்டு மரணிப்போம் நிராயுதபாணியாய் மடிகிறோம் நிரபராதியாய் மடிகிறோமா? அமீதாம்மாள்
பூங்காவனமானது புக்கித்தீமா ஆறு பூங்காவனம் பாட புள்ளிமயில்கள் ஆட வண்ண மயில்கள் வணங்க அழகு மயில்கள் ஆரத்தி சுற்ற கொள்ளை அழகாய் விரிகிறது – நம் மரபுகளின் திறவுகோலாம் தேக்கா நகைக்கடை பூக்கடை பலகாரம் பட்டாசு துணிகள் தோரணங்களாய் தேனடைகள் தேக்காவில் தேனீக்கள் மக்கள் ‘போன தீவாளி மசக்கையோட இந்தத் தீவாளி மகனோட’ கூட்டத்தில் ஒரு மாதின் குரல் மாங்கன்னு பூத்திருச்சா’ தொலைபேசியில் பூக்கிறார் இன்னொருவர் உள்ளமெல்லாம் ஹீலியம் உற்சாக […]
தாத்தாவுக்கின்று எண்பது வயது ‘சொந்தக் காலில் நிற்கிறார்’ என்று சொல்லவைத்த ‘கால்’கள் தன் காலை மறந்து ‘கல்’ லாக மறத்து இன்று உள்ளங்கால் ஊன்றினால் உச்சந்தலை இறங்குது சுத்தியடி வலி அந்தக் கால்களுக்கின்று காலவரையற்ற ஓய்வு புதிய நியமனம் சக்கர வண்டி தாத்தாவின் பாதப் பென்சில் பதிந்த தடங்களை ரப்பர் வண்டி அழித்தழித்து உருள உருள்கிறது அங்கே தாத்தாவின் வாழ்க்கை ஒரு நாள் தாத்தாவுக்கும் பேரனுக்கும் […]
அந்த மரம் கனி செய்தது வேர்கள் கிளைகள் இலைகள் எல்லாமும் கனிக்காகவே உழைத்தன வண்டுகள் மட்டும் கூலிக்காக உழைத்தன அமீதாம்மாள்
உரமற்ற மண்ணில் துளையற்ற தொட்டியில் துளசி அழுகும் ******** எரியாத மெழுகு ஒளிராது ******* பூமிக்குத் தேவையில்லை பிடிமானம் ******* வேர்களின் தேடல்கள் வெளியே தெரிவதில்லை ******** விஷமுள்ள பாம்புகள் அழகானவை ******* ஏறவும் இறங்கவும் தெரிந்தால் மட்டும் போதும் மின் தூக்கிக்கு ****** முட்கள் கொண்ட பூக்கள் அழகாய் இருக்கலாம் ஆபத்தில்லை அமீதாம்மாள்