உறவுகளை அன்பால் வகு ஈவு இன்பம் காசால் வகு ஈவு துன்பம் ******** ராட்சசன் நண்பனானால் அவனைவிட நீதான் பலசாலி ********** சிக்கலை நீக்கையில் சில முடிகள் உதிரும் ************** வினாடிகளாகத்தான் கழிகிறது வாழ்க்கை நினைவு கூரப்படுவது சில வினாடிகளே *********** மலரப்போகும் வினாடியை எழுதிவிட்டுத்தான் ஒரு மொட்டு பிறக்கிறது *********** மிதப்பவை ஒருநாள் கரை ஒதுங்கும் ******** ஆயுளுக்கும் தேவையான பிசின் நூலோடுதான் ஒரு சிலந்தி படைக்கப்படுகிறது ******* தன்னை உருவாக்கிய மரத்தையே உருவாக்கமுடியுமென்று […]
ஆட்டுக்கல் இட்டலி அம்மிச் சட்டினி கறந்தபால் நுரையொடு காலை மாலை காப்பி கூட்டாஞ்சோறு குளத்துக் கெளுத்தி மூங்கில் கட்டில் முற்றத்து நிலா கோழி மேயும் கொல்லையில் தாயம் முகம் பார்த்துப் பேச மூணாங்கிளாஸ் மூர்த்தி பல் தேய்க்க காட்டு வேம்பு தமுக்கடிக்க தட்டான் குளம் மும்மிய வேட்டியை குடையாக விரித்து நடக்கும் பாதையில் வரப்பு நண்டு இருப்பதைத் தொலைத்து விட்டு இத்தனையோடும் என் எழுபதின் வாழ்க்கை வேண்டும் மறுக்கப்படும் இவைகளென்றால் […]
பெட்ரோல் எரிகிறது பிஸ்டன் துடிக்கிறது சுகமான பயணம் மோட்டாரோட்டிக்கு ******* பத்தாம் மாடி தொட்டிக் கள்ளி தரைத் தென்னையிடம் தம்பட்டம் அடித்தது தாமே உயரமாம் தென்னையை விட ********* எவ்வளவு பழுத்தாலும் பாகைக்கு கசக்க மட்டுமே தெரியும் ******* முகம் காட்டும் கண்ணாடி முதுகுக்குப் பின்னும் காட்டும் முக்கியக் கவனம் இருக்கட்டும் முதுகுக்குப் பின்னே அங்குதான் உங்களுக்கு குழி பறிக்கப்படுகிறது ******** விசாலமான கூரைக் […]
ஒவ்வொரு படமும் ஒவ்வொரு காலாக ஆயிரங்கால் மண்டபத்தை நம் நெஞ்சங்களில் கட்டி அதிலேயே அடங்கிப் போனார் ஆச்சி மனோரமா அமீதாம்மாள்
பத்து ஆண்டுகளாக என்னால் சாதிக்க முடியாததை ஒரு மூட்டைப்பூச்சி சாதித்து விட்டது என் கணவர் புதுக் கட்டில் வாங்கிவிட்டார் ***** ‘ஓவர் ஸ்டே’ இங்கு பிரம்படிக் குற்றம் ஓடிவிடுங்கள் புகைமார்களே ***** என்றோ கொடுத்த பத்து வெள்ளியை கொடுப்பார் என்று நானிருக்க மறந்திருப்பேன் என்று அவர் இருக்க இன்றுவரை அந்தப் பத்து வெள்ளியை அவர் தரவுமில்லை நான் பெறவுமில்லை அது கடனா? இனாமா? பிச்சையா? திருட்டா? ————— தெரியாது […]
புகை ‘ஓவர் ஸ்டே’ இங்கு பிரம்படிக் குற்றம் ஓடிவிடுங்கள் புகைமார்களே —————– ஆனந்தம் அந்தப் பெண்ணின் ஆனந்த வாழ்க்கைக்கு அந்தப் பெரியவர் அப்படி வாழ்த்தியதுதான் காரணமாம் இதோ அந்தம் பெரியவரின் வாழ்த்து ‘தாய்ப்பாசமுள்ள பிள்ளைகளும் தாய்ப்பாசமற்ற கணவனும் பெற்று வாழ்க வளமுடன்’ அமீதாம்மாள்
அமீதாம்மாள் நடந்து செல்கிறேன் மண்ணில் ஏதோ மின்னுகிறது அட! ஓர் ஒற்றைக்கல் மோதிரம் யார் கண்ணிலும் படாமல் என் கண்ணில் எப்படி? இது என்ன பிளாட்டினத்தில் வைரமா அல்லது வெள்ளியில் புஷ்பராகமா? ஓர் ஆசரீரி கேட்கிறது என் தேவைகளைச் செய்ய தேவதை எனக்குத் தந்ததாம் இப்போது மனவெளி மேய்வது மோதிரம் மட்டுமே தெரியவந்தது உண்மை அது வைரமில்லையாம் வெறும் கண்ணாடித் துண்டாம் மோதிரத்தைக் கேட்டேன் ‘என் தேவைகளைச் செய்ய தேவதை தந்ததென்றது பொய்யா?’ மோதிரம் பேசியது தேவதை […]
கோலெடுத்தான் குரங்காட்டி ஆடியது குரங்கு கர்ணம் போட்டது காவடி எடுத்தது தங்கச்சி பொம்மையைத் தாலாட்டியது இரண்டு கால்களால் நின்று இசைக்கு ஆடியது கைகளை ஏந்தி காசு கேட்டது குடும்பம் நடந்தது குரங்காட்டிக்கு ஒரு நாள் மனம் மாறினான் குரங்காட்டி ஒரு குரங்கால் நம் குடும்பம் நடப்பதா? வெட்கம் குரங்கை காட்டிலே விட்டு வீடு ஏகினான் பாவம் குரங்கு அதற்கு சுதந்திரம் புரியவில்லை செடிகளிடமும் சில்லரை மிருகங்களிடமும் காசு கேட்டுத் திரிகிறது. அமீதாம்மாள்
விலாக்கூட்டை விண்கலமாக்கி விண்ணைச் சலித்தவரை நாளைய நாட்டின் நடுமுதுகுத் தண்டாய் மாணவரைக் கண்டவரை அக்னிச் சிறகால் அகிலம் பறந்தவரை அமிலமழை அரசியலில் நனையாமல் நடந்தவரை அகலநீனம் அறிபுக்கில்லை அது தேடத்தேட விரியும் விரிய விரியத் தேடும் என்றவரை தேடுதல் இல்லையெனில் சிக்கிமுக்கிகூட நம் அறிவுக்குச் சிக்கியிருக்காதென்றவரை எடுத்துக்காட்டாய் வாழ்வின் இறுதிவரை வாழ்ந்தவரை எடுத்துக்கொண்டது மண் தொழுத அலைகள் அழுத கண்ணீரில் கரைகள் நனைகின்றன ‘கனவு காணுங்கள்’ என்றவர் இன்று என் கனவில் சொன்ன செய்தி ‘விழுந்திருக்கிறேன் விதையாக […]
‘நானா மூனா கடையில் நயமாக நாலைந்து சீப்பு வாங்கிவா’ என்றார் அத்தா வாங்கி வந்தேன் சீவிப் பார்த்து வரண்டும் சீப்பைத் தள்ளிவிட்டு வருடும் சீப்பை வைத்துக் கொண்டார் புதுப்புளி நிறத்தில் புலிவரிச் சீப்பு அது பின் சீப்பு வாங்கும்போதெல்லாம் சீவீப்பார்க்காமல் வாங்கியதில்லை எத்தனையோ சீப்புகள் வாங்கிவிட்டேன் சிங்கப்பூர்ச் சச்சா தந்த பேனாச் சீப்பொன்று என் பேனாவோடு வெகுகாலம் பேசிக்கொண்டிருந்தது வாங்கிப் பார்த்தவர்களெல்லாம் வாங்கிக் கேட்டார்கள் இந்தோனேஷிய நெருக்குப்பல் மரச்சீப்பு இரண்டிருந்தது […]