மனிதனுக்கும் மரணத்துக்கும் இடையே ஒரு மீட்டர் இடைவெளி வாய்க் கவசம் இன்றேல் வாய்க்கரிசி விடிந்ததும் தேடும் முதல் செய்தி ‘நேற்று எத்தனை பிணம்’ ஆண்டவன் வீடுகளுக்குப் பூட்டு நாடுகளுக்கிடையே சாதனையிலும் போட்டி சாவிலும் போட்டி அனைவர் கழுத்திலும் தொங்கும் வாசகம் ‘அபாயம். தொடாதே’ ஆயுள் ரேகையை ஒரு ரப்பர் அழிக்கிறது கல்யாணமோ கருமாதியோ பத்துப் பேர்தான் அனைவரையும் சுற்றி அந்நியன் கொரோனா விவசாயம் மனிதர்கள் அறுவடை வாழ்க்கை கழுவுமுன் கைகளைக கழுவுங்கள் கடன்களைச் மறைத்தாலும் இருப்பைச் சொல்லுங்கள் […]
திருமணம் மாலை மாற்றும் காட்சி புலனத்தில் இடைவெளிக் கொள்கை இவர்களுக்கில்லை சுற்றம் சூழ வராதிருந்து வாழ்த்துவோம் பெண்குழந்தை இன்று உதயம் புலனத்தில் காணுங்கள் புதுமலரை வராதிருந்து வாழ்த்துங்கள் கழகத்தின் ஆண்டுக்கூட்டம் ஆண்டுக் கணக்கு மின்னஞ்சலில் மலர்களாகத் தொடர்வோம் மாலையாதல் வேண்டாம் அட இறந்துவிட்டாரா? இருக்கும் இடத்தில் அழுவோம் ஊருக்குள் சிறையா? சிறைக்குள் ஊரா? நீ அங்கே நான் இங்கே கவலையில்லை தொற்று தொடாது தொலைபேசியை வையம் ஆள்பவரும் வட்டத்துக்குள்.
பொறியியல் படித்திருந்தால் பொன்னாகியிருக்கும் வாழ்க்கை உயிரியல் படித்தேன் உழல்கிறேன் சொந்த ஊரில் சொத்துச் சேர்த்தேன் சிங்கப்பூரில் செய்திருந்தால் சீமான் இன்று நான்தான் இவளாக ஆனதால் இத்தனை பாடு அவளாக இருந்தால் அரசன் இன்று நான்தான் மகளைப் பெற்றதால் மாட்டிக்கொண்டேன் மகனாய் இருந்தால் மகுடாதிபதி நான்தான் அண்ணன் தம்பிகள் இல்லாதிருந்தால் இன்று நானே ராஜா நானே மந்திரி அந்தக் குரங்கின் நட்பை முறித்திருந்தால் என் அப்பம் இன்று எனக்கே ஒரு பறவை போல் வாழும் பாக்கியம் பெற்றிருந்தால் எஸ்கிமோக்களைக் […]
சாம்பலில் உயிர்க்கும் ஃபீனிக்ஸே வராதே தோற்றுவிடுவாய் வையத்தைப் புரட்டும் நெம்புகோல் ஒரு வைரஸ் ‘தொட்டால் தீட்டு’ அட! இதுதானா? தாமரை அறிவாளி தொடவிடாது தண்ணீரை கிளிகளைத் திறந்துவிட்டோம் மனிதனை அடைத்துவிட்டோம் சிறகுகளை வெட்டினோம் கூட்டுக்கு இனிப் பூட்டெதற்கு? வானமே எல்லை நேற்று வீடே எல்லை இன்று உரசக்கூடாத ஒரு மரத்துக் கிளைகள் நாம்தானோ? ‘தனித்திரு விழித்திரு’ அட! இதுதானா? ஆற்றுக்கும் காற்றுக்கும் பாதை புரியும் நமக்கு? ஓளியால் பார்க்கலாம் ஒளியைப் பார்ப்பது எங்ஙனம்? எங்கும் மிதக்கும் மர்மத் […]
கம்பிக் கூண்டில் காதல் பறவைகள் ஆடிப் பாடிய காதல் அடிமைக் காதலானது அடைத்துப் போட்டவன் அயல்நாட்டில் இருந்துவிட்டு அறுபது நாள் தாண்டி வந்தான் ஜோடிஜோடியாய்க் குருவிகள் செத்துப் போயின சாவின் வாசலில் துடித்த ஒரு கருஞ்சிவப்புக் குருவி கடவுளைக் கேட்டது ‘நீதியின் அரசனே கொல்லப்பட்ட எம் குலத்திற்கு என்ன நீதி? கொன்றவனுக்கு என்ன நீதி? ‘வாயில்லா உங்களை வாய்மை ஏதுமின்றி வன்கொலை செய்தோரை வைரஸ் கொல்லும்’ ‘கடவுள் சொன்ன கணக்குச் சரிதான்’ என்ற கருஞ்சிவப்புக் குருவியின் கணக்கும் […]
பாதை தவறிய பழமொழிகள் பகைவனுக்கும் ஊஹான் தொற்றாது அருள் தும்மல் துப்பல் இருமல் பொத்து அடையாளம் அடுத்து வெப்பம் நடப்பு எச்சில் எமன் இடைவெளி கூட்டு யாகாவாராயினும் கைசுத்தம் காக்க ஊரோடு சேர்க்குமுன் உரைத்துப் பார் ஊஹான் என்றால் உலகம் நடுக்கும் கொவிட் என்றால் குலையே நடுங்கும் கூடாமல் வாழ்ந்தால் கோடி நன்மை கட்டும் எதையும் கசக்கிக் கட்டு தொற்றுக் கண்டால் தூர விலகு வல்லரசு என்பது வழக்கொழிந்தது கொடுங்கோல் நின்று கொல்லும் கொரொனா அன்று கொல்லும் […]
வார இறுதியில் எல்லாரும் வீட்டில் …. ஊரிலிருந்து அடிக்கடி நலம் கேட்கும் குரல்கள் ‘வாயைக்கட்டி சும்மா கிட’ சொல்லலாம் இல்லாளிடம் ‘எத்தனை நாள் ஆசை இப்படி அமர்ந்து பேச’ ஓடுபாதையில் காகங்கள் சென்னைக்கா நாளைக்கா இருநூறே வெள்ளிதான் ‘ஏறும் வரி ஏவுகணை இனச்சண்டை எல்லைச்சண்டை’ எங்கே போயின எல்லாச் செய்தியும் சாதாக் காய்ச்சலுக்கும் ராஜமரியாதை ‘ஓய் ஐன்ஸ்டீன் ஒளியைவிட வேகமாய் இதோ இன்னொன்று’ ‘சிங்கப்பூர் செல்லாதீர்கள்’ அட! சொல்லமுடிகிறது விஞ்ஞானிகளின் மண்டை குடையும் கேள்வி […]
பட்டனை அமுக்கு பற்றி எரியும் இலக்கு எண்ணெய் வேண்டாம் எரிக்க தண்ணீரே போதும் இதயமோ ஈரலோ இல்லாமலே வாழ்வோம் வயசுக்கணக்கு இனி விதியிடம் இல்லை முதுமை பறிப்போம் இளமை நடுவோம் ரத்தம் செய்ய எந்திரம் செய்வோம் மழை வேண்டுமா? தருவோம் கருக்கள் வளர்க்க இனி கருப்பை வேண்டாம் உணவுகள் இன்றியே உயிர் வாழ்வோம் ஆக்குவோம் அழிப்போம் பூமியைப் பிழிவோம் ‘இவனுக்கென்ன பைத்தியமா?’ அமைதியாய்க் கேட்டது ‘கொரோனா’ வைரஸ் அமீதாம்மாள்
நா காக்கா நச்சு வார்த்தைகள் நம்பிக்கையைத் தகர்க்கும் நட்பை முறிக்கும் உறவுகளைச் சிதைக்கும் குடும்பங்களை உடைக்கும் ஆதலால் வாய்க்கவசம் அணிவோம் வைரஸ் கிருமிக்காக இன்று வைரஸ் வார்த்தைக்காக என்றும்
சந்திரனில் பள்ளம் செவ்வாயில் மலை எல்லாம் சொன்ன மனித சக்தி ஆயிரம் மைலுக்கு அப்பலான ஆபத்தை ஏவுகணை ஒன்றால் எரித்துப்போட்ட மனித சக்தி எலும்புத் துண்டொன்று எந்த உடலோடு எப்போது வாழ்ந்ததென்ற மனித சக்தி அணுக்களின் ஆட்சியை அக்கக்காய்ச் சொன்ன மனித சக்தி இயற்கைக் கோளோடு செயற்கைக் கோளையும் சிறகடிக்க வைத்த மனித சக்தி தனிமங்கள் அனைத்தையும் தன்வசமாக்கிய மனித சக்தி அடுத்த கிரகணம் எந்த நொடியிலென்று இன்றே சொல்லும் மனித சக்தி சைபராகுமோ ஒரு வைரஸ் […]