ஓட்டோடு ஒட்டாத கனியிடம் கேட்டேன் ‘ஒட்டியிருந்தால் உறவு இனிக்குமே’ கனி சிரித்தது பின் உரைத்தது ‘கனி நான் கவிஞன் இந்த ஓடு என் ரசிகை நான் வானம் அவள் பூமி எங்களுக்குள் பார்வையுண்டு பிரமிப்புண்டு தியானம் உண்டு தீண்டல் இல்லை ஒட்டக்கூடாததில் மனத்தை ஒட்டாதே என்று உதடொட்டாமல் சொன்னான் வள்ளுவன் ‘யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்’ இந்த வானம் அந்த பூமியைத் தீண்டினால் கற்பிழப்பது என் கவிதைகள் மட்டுமல்ல நானும்தான்’ அமீதாம்மாள்
‘இந்தத் தீபாவளிக்கு ஏதாவது சொல்’ இயற்கையிடம் கேட்டேன் ‘எழுதிக்கொள் உடனே அடுத்த தீபாவளியில் நீ அடுத்த உயரம் காண்பாய்’ நான் எழுதிக்கொண்டதை இதோ மீண்டும் எழுதுகிறேன் கொத்தும் தேனீ செத்துவிடும் மன்னிக்கத் தெரிந்த தேனீ மறு கூடு கட்டும் கழிவைக் கழித்துத்தான் ஆவியாகிறது தண்ணீர் கலங்கங்களை நினைத்து கலங்குவதில்லை நிலா குடையற்றவன் தூற்றலை மன்னிக்கிறது மழை அழுக்கு நீரைப் பற்றி அலட்டிக்கொள்ளாது தென்னை பாகையிடம் பலாவுக்கோ பலாவிடம் பாகைக்கோ பொறாமை இல்லை ஒரு வினாடி மகிழ்ச்சியில் உயிரை […]
தேவாலயம் திருக்கோயில் மசூதிகளிலெல்லாம் அமைதிப்புறாவாய் அமர்ந்தவர் மரக்கலம் வாழ்க்கையில் விண்கலம் கண்டவர் மீன்பிடி ஊரில் மின்னலைப் பிடித்தவர் இரை கேட்கும் வயதில் இறக்கைகள் கேட்டவர் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பூங்குன்றனாரைப் பூவுலகிற்குச் சொன்னவர் கோடிக் குழந்தைகளைக் கூர் தீட்டியவர் நூறு கோடி மக்கள் இதயவீடு தந்தும் காலடியில் வாழ்ந்தவர் வறியோருக்காக வாரித் தந்தவர் பகை, சோம்பலுக்கு அர்த்தம் அறியாதவர் விண்ணின் உச்சியை விண்கலத்தால் தேடியவர் வல்லரசு வரிசையில் இந்தியாவை இணைத்தவர் இளையர்களுக்குள் கிடக்கும் இமயத்தைச் […]
நிஜத்தைச் சொல்லிவிட்டு கனவு செத்துவிட்டது கடவில் விழுந்த காசு செலவு செய்ய முடியாது கிளைகளை துணைகளை அறுத்துவிட்டு கடலானது ஆறு தோம்புக்காரர் முதுகில் என் மஞ்சள் டீ சட்டை வெள்ளிக்கிழமை தொழுகையில் என் ஒரு வெள்ளிக்காசு அந்த நோயாளிக்கு இழப்பு நான் படித்த என்னைப் படித்த புத்தகங்கள் நூலகங்களுக்கு நன்கொடை என் எழுத்துப்படிகள் தோம்பில் தற்கொலை மின்தூக்கிக் கடியில் என் ரோஜாத் தொட்டி உயிர்விடப் போகிறது நான் கவிதை எழுதும் மூலையில் உலர்கின்றன உள்ளாடைகள் அடையாளம் இழந்தது […]
ஜூன் 23, 2018 அன்று சிக்கிக்கொண்ட காற்பந்துக்குழு ஜூலை 10ல் மீட்கப்பட்டது. உலகமே துக்கத்தில் மூழ்கிய ஒரு சோக வரலாறு இங்கே கவிதையாக தாம் லுவாங் குகை பதின்மூன்று பேர் குழுவில் ஒரு பாலகனுக்குப் பிறந்தநாள் ‘காற்பந்துலகில் உன் கொடி ஒருநாள் உயரே பறக்கும் வா மகனே வா உன் பிறந்தநாள் இன்று எனக்குள் விடியட்டும்’ அழைத்தது குகை புகுந்தது குழு திரும்பவில்லை விட்டுச்சென்ற மிதிவண்டிகள் கண்ணீர் விட்டுக் கதையைச் சொல்லின ஊர் மக்கள் திரண்டனர் உறைந்தனர் […]
நான் சினந்ததைப் பார்த்தவன் தீ என்றான் தணிந்த்தைப் பார்த்தவன் நீர் என்றான் கொடுத்ததைப் பார்த்தவன் தர்மன் என்றான் கைவிரித்ததைப் பார்த்தவன் கருமி என்றான் சிரித்ததைப் பார்த்தவன் குழந்தை என்றான் அழுத்தைப் பார்த்தவன் கோழை என்றான் பேசக் கேட்டவன் கிறுக்கன் என்றான் பேசாமை கண்டவன் செருக்கன் என்றான் ஒளித்த்தைக் கண்டவன் கள்ளன் என்றான் விரித்ததைக் கண்டவன் வெகுளி என்றான் அணைத்தேன் தாய் […]
அவர்களின் மணவிலக்கு ஏற்பு அந்த ஜோடிக்கிளிகள் நாளைமுதல் தனித் தனிக் கூடுகளில் சமீபத்தில் இவர்கள் சிறந்த தம்பதிக்கான விருதை வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமீதாம்மாள்
முதியோர் இல்லத்திற்கு சக்கரவண்டிகள் முந்நூறு தந்த வள்ளலுக்கு நன்றி சொல்ல இல்லம் சென்றேன் அவர் பனியனில் பொத்தல்கள் ஏழெட்டு அமீதாம்மாள்
கவிதை 1 தமிழ் கிணறுகள் குளங்கள் ஏரிகள் நதிகள் கடல்களென தமிழ் இனம் அனைத்திற்கும் பெருமை தமிழ் என்ற தண்ணீரே -அமீதாம்மாள் கவிதை 2 தமிழ்விழா தமிழ்விழா தேன் கூடு வெவ்வேறு பூச்சிகள் வெவ்வேறு பூக்கள் வெவ்வேறு தேடல்கள் சேமிப்பது என்னவோ தேன் மட்டுமே -அமீதாம்மாள் கவிதை 3 கனம் கனமாக விழும் அருவியில் இலேசாக விழுகிறது மழை அருவிக்குப் புரிகிறது ‘தன் கனம் என்பது மழையால் வந்தது’ -அமீதாம்மாள் […]
நீலச்சேலை வானில் சிவப்பு முந்தானை காணப்படாமலேயே கரைந்துவிட்டது விமானப் புகைவில் காணப்படாமலேயே கலைந்துவிட்டது அழகான அந்தப் பூ ரசிக்கப்படாமலேயே உதிர்ந்துவிட்டது கன்னியாகவே அவள் வாழ்க்கை கழிந்துவிட்டது அழகான கோலம் காணப்படாமலேயே சிதைந்துவிட்டது சேலத்து மல்கோவா ருசிக்கப்படாமலேயே அழுகிவிட்டது பொத்திப் பொத்தி வைத்த விக்டோரியா ரூபாய் தொலைந்துவிட்டது பொம்மை அழுகிறது விளையாட குழந்தை இல்லையாம் ‘கலையாமல் கரையாமல் உதிராமல் தொலையாமல் அழுகாமல் அழாமல் காத்திருக்கிறேன் ஒருநாள் புரட்டப்படுவேன்’ நம்பிக்கையுடன் புத்தகம் அமீதாம்மாள்