author

சீனியர் ரிசோர்ஸ்

This entry is part 15 of 15 in the series 23 ஜூலை 2017

  குளிர் அறையிலும் லேசாக வியர்ப்பது போல் இருந்தது சபேசனுக்கு. அவ்வறையில் அம்மூவரை தவிர வேறு யாரும் இல்லை. “என்னங்க இப்படி பண்ணீட்டீங்க! ..நீங்க    சீனியர் ரிசோர்ஸ் ன்னு தானே ஆன்சைட்டுக்கு அனுப்பி வைச்சோம்!” என்று   ஆரம்பித்தார் வட்ட மேசை சுற்றி உட்கார்ந்திருந்த இரண்டு அதிகாரிகளில் ஒருவர். சபேசன் இதற்கு இரண்டு வரிகளில் பதில் சொல்ல இயலாது.. ஆன்சைட்டில் நடந்த விவரத்தை சொல்லி புரிய வைக்க வேண்டுமென யத்தனித்து “அங்கே என்ன நடந்துச்சுன்னா..” என ஆரம்பிக்கும் போதே   […]

தேடாத தருணங்களில்

This entry is part 3 of 19 in the series 28 மே 2017

சித்ரா ————— கூழாங் கற்களை தேடிப் பழகிய கைகள் வெறுங்கையாகவே குவிந்து மூடிக்கொண்டன ஒர் தீர்மானத்துடன்.. தேடுவதை ஏன் நிறுத்திவிட்டாய் என மெல்ல தட்டிக் கேட்கிறேன் விரல்களை இதழ்களாக விரித்துக் காண்ப்பிக்கிறது தேடாத தருணங்களில் மட்டுமே உருவாகும் சுயமான ஒளிக் கற்களை – சித்ரா (k_chithra@yahoo.com)

இடமாற்றம்

This entry is part 29 of 40 in the series 26 மே 2013

_________ கண்களுக்கு எதிரே விரல்களுக்கு இடையே நழுவுகிறது தருணங்கள்   இந்நாட்டு மக்களின் மெல்லிய சிரிப்பை அதிராத பேச்சுக்களை கலைந்திராத தெருக்களை நேர்த்தியான தோட்டங்களை   வாரிச் சுருட்டி வெண் கம்பளத்தில் அடுக்கி அணைத்தபடி உடன் கொணர நேர்ந்தால் கை நழுவுகிற தருணங்களைப் பிடித்து விடலாம்   நேசித்தவைகளை அங்கங்கே விட்டுவிட சொல்கிற ஒவ்வொரு இடமாற்றமும் வாழ்விலிருந்து விடுபடுகையில் , மரணத்தை நளினத்துடன் தழுவப் பயிற்றுவிக்கும் ஒத்திகைகள்…… – சித்ரா (k_chithra@yahoo.com)

மார்கழி கோலம்

This entry is part 15 of 33 in the series 3 மார்ச் 2013

***********   முகத்தை வருடிய தென்றல் வண்ண வண்ண இளநிறங்கள் ஏற்று சின்னஞ்சிறு இருதய வடிவங்களில் அமர்ந்தது மேசையில் கிடந்த குறிப்பேட்டின் அட்டையில் ..   கைபேசி,கணினி,மடிகணினியின் மின்னூட்ட கயிறுகள் நெரிக்கும் மேசைக்கு – உயிர் தெளித்து மார்கழி கோலம் …   – சித்ரா (k_chithra@yahoo.com)

கவிதை பக்கம்

This entry is part 27 of 28 in the series 27 ஜனவரி 2013

கவிதை பக்கம் காலியாக சிலகாலம் கவிதையான நிகழ்வுகளும் குறைவான காலம் திடீரென பள்ளிகூட அலுமினி கூட்டம் – பழைய சினேகிதிகள் ஒவ்வொருவராய் பேச்புக்கில் கண்டுபிடிப்பு – சபை நிறைந்தது பேச்புக் கூட்ட பக்க உரையாடல் பள்ளிகூட வராந்தாவாக சலசலப்பு பலவருடத்திற்கு பிறகு புகைபடத்தில், அவளா இவள் ? இவளா அவள் ? ஆறுவித்தியாச துணுக்காக நினைவுகளும்,நிஜங்களும்.. சிரிக்க வைத்தவள்,சீண்டியவள் சிணுங்கியவள்,கலகலத்தவள் – ம்றுபடியும் பார்க்கையில், தீக்குச்சி நெருப்பென சீண்டப்பட்ட நிகழ்வுகளும் மறைந்து போனது காலை முதல் மாலை […]

இந்நிமிடம் ..

This entry is part 40 of 41 in the series 13 மே 2012

இந்நிமிட குப்பிக்குள் பழைய நினைவுகளை புதிய நினைவுகளை திணிக்க திணிக்க திமிறி ஓடுகிறது அமைதி.. இந்நிமிட கொள் அளவில் வைக்க வேண்டியதை மட்டும் வைத்து எடுக்க எடுக்க -இந்நிமிடம் அடுத்த ,அதற்கடுத்த நிமிடம் .. மாற்று நிறங்களின் தறி பாவில் ஊடு நூலாக – வளைந்து புகுந்து அமைதியை நெய்ந்து தருகிறது இந்நிமிடங்கள்… – சித்ரா (k_chithra@yahoo.com)

கல்லா … மண்ணா

This entry is part 12 of 29 in the series 25 டிசம்பர் 2011

  என்னவோ  துரத்துகிறது எப்படியோ  தப்பிக்கிறேன்   போயிராத கோயிலிருந்து பிரசாதம் வருகிறது – கடவுள் கொடுக்க சொன்னதாக ..   ஒடி  ஒடி வருகிறேன் ரயில் கிளம்பிவிட்டது ! பகீர் என்றானது – வாழ்க்கை முடிந்து விட்டது  போல் ..   தோளில் தட்டுகிறார்கள் – திரும்புகிறேன் சிறுவயதில் உடன்  படித்த தோழி. சிரிக்கிறாள் , நானும் சந்தோஷமாக   வீடு வாங்கியதை தேவையற்று சொல்லி கொண்டிருக்கிறேன் – அவள் முகம் கோரமாக மாற தொடங்குகிறது […]

தலைமை தகிக்கும்…

This entry is part 8 of 38 in the series 20 நவம்பர் 2011

_____________ சூரியனை சூழ்ந்த கோளங்கள் சுற்றி திரிகின்றன தனி சுதந்திரத்தோடு தன்னை வட்டமடிக்கிற நிலா பெண்களோடு.. தலைமை பதவியின் தனிமையால் கலகலப்பாய் பழக ஆளில்லாமல் தனித்த தலைமை தகிக்க சூரியனின் பெருமூச்சும் உஷ்ணமாய் பூமியை நேருக்கு நேர் நிறுத்தி கேள்வி கேட்டால், நிலா வருந்தி, கறுத்து விடுகிறாள் கிரகண நோய் தாக்கி. ! பூமியை பின்னுக்கு தள்ளி நிலாவை நேரே சந்தித்து காதலை சொல்ல நினைக்கையில் – சூரியனுக்கே கிரகணம் பிடித்து விடுகிறது.. மற்ற பால் வெளியில் […]

அகாலம் கேட்கிற கேள்வி

This entry is part 10 of 41 in the series 13 நவம்பர் 2011

ஆழ்வேர் நேச காதலினாலோ பாசி படர், மாசு தொடர்பினாலோ பத்து மாதம் காத்திருக்கிற எப்பிறப்பும், விநாடியில் மறைக்கிற அகால மரணமும் அகங்காரமும், வன்மமும் தேவையா ? அரிதிலும் அரிதான வாழ்க்கையில் என கேட்கிறது காதோரம் ஓர் கேள்வி. அகாலத்தின் கூர்முனையின் புரிதலை மையமாக்கி வாழ்க்கை வட்டத்தை சுற்றி வரையாமல், பென்சில் முனையை நடுநாயகமாக்கி சுழற்றுகிறோம் வாழ்க்கை வட்டத்தை கீறி கிழித்தபடி.. -சித்ரா (k_chithra@yahoo.com)