This entry is part 12 of 12 in the series 24 ஜூலை 2022
தெலுங்கில் : ஒல்கா தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு மோகன் வந்து சாந்தாவை தன் வீட்டுக்கு அழைத்து வந்தான். சாந்தாவுக்கு வாசல் கேட் அருகிலேயே ஷோபா எதிரே வந்தாள். “சாந்தா! நன்றாக இருக்கிறாயா?” என்று கையைப் பற்றிக்கொண்டாள். “நீ எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டுக்கொண்டே ஷோபாவை தலை முதல் கால்வரையிலும் பார்த்தாள் சாந்தா. ஷோபா மிகவும் மாறி விட்டிருந்தாள். உடல் பெருத்து, மேனியின் நிறம் குறைந்திருந்தது. கண்களுக்குக் கீழே […]
தெலுங்கில் : ஒல்கா தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com மறுநாள் காலையில் எவ்வளவுதான் கட்டுபடுத்திக்கொள்ள முயன்றாலும் சாந்தாவால் முடியவில்லை. வேண்டாம் வேண்டாம் என்று நினைத்துக் கொண்டே ராம்குமார் தங்கி இருந்த அறைக்குச் சென்றாள். அறைக் கதவு திறந்து தான் இருந்தது. அவன் கட்டிலில் படுத்தபடி புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தான். சாந்தாவைக் கண்டதும் அவனுக்கு அளவுகடந்த ஆச்சரியம்! மூன்று ஆண்டுகளாய் அறிமுகம் இருந்த போதும், கடந்த ஒரு வருடமாய் நட்பு கொஞ்சம் வளர்ந்து இருந்தாலும் அவன் சாந்தாவை […]
தெலுங்கில் : ஒல்கா தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com எப்போதும் நிதானத்தை இழக்காத அந்தப் பெண்ணின் முகத்தில் பதற்றத்தைப் பார்த்தபோது சாந்தாவுக்கு இரக்கமாக இருந்தது, ஆனால் இது நாலுபேருடன் கூடிய விவகாரம். முதலில் ஐநூறு ரூபாய் வரையில் செலவழித்து இருக்கிறார்கள். அதன் விஷயம் என்ன? எல்லோரும் என்ன சொல்லுவார்கள்? சாந்தாவுக்கு பதற்றத்துடன் பயமும் ஏற்பட்டது. முதல்முறையாய் ஷோபா வகுப்புக்கு மட்டம் போட்டாள். பி.எஸ்.ஸி. இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த மாணவிகளில் முக்கியானவர்கள் மரத்தின் அடியில் கூட்டம் கூடினார்கள். […]
தெலுங்கில்: எண்டமூரி வீரேந்திரநாத் இரவு பத்து மணி. அது வரையில் அரை தூக்கத்தில் இருந்த கண்ணனுக்கு திடீரென்று விழிப்பு வந்தது. அவனுக்கு பயமாக இருக்கவில்லை. மரணம் நிச்சயம் என்று தெரிந்து போன கேன்சர் நோயாளி மனதில் இருக்கும் விரக்தியைப் போல் அந்த அறையில் இருள் பரவி இருந்தது. மழை விட்டுவிட்டு பெய்து கொண்டிருந்தது. எரியும் சிதையைப் பார்க்கும் போது மனதில் ஏற்படும் வைராக்கியத்தை போல் நிசப்தம் அந்த அறையில் குடி இருந்தது. எலி ஒன்று இந்த […]
திண்ணை ஆசிரியருக்கு, வணக்கம், 2015சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்புக்கான விருது தமிழில் எனக்கு கிடைத்திருப்பதாக செய்தி வந்துள்ளது. ( } http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/pdf/Press_Release_(English)_SATA_2015.pdf கௌரி கிருபாநந்தன்
திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். பிரபல தெலுங்கு எழுத்தாளர் திருமதி ஒல்காவின் “விமுக்தா” என்ற படைப்பிற்காக அவருக்கு சாகித்ய அக்காதமி விருது (2015)கிடைத்துள்ளது. அதனை “மீட்சி” என்ற தலைப்பில் தமிழாக்கம் செய்து இருக்கிறேன். பாரதி புத்தகாலயம் இதனை வெளியிட்டு இருக்கிறது. சீதையின் கண்ணோட்டத்தில் சொல்லபட்ட ராமாயணக் கதைகள் இவை. சமுதாயதில் பெண்கள் இரண்டாம் நிலையில் நடத்தப் படுவதை பற்றியும், அவர்களுடைய மீட்சியை அவர்களே தேடிக் கொள்ள வேண்டும் என்ற கருத்தையும் தம் படைப்புகள் மூலமாக வலியுறுத்தி வரும் […]
(மிதிலா விலாஸ் தொடரின் அத்தியாயங்கள் 14லிருந்து 18 வரை பதிவு பெறாமல் விடுபட்டு விட்டது. தவறுக்கு வருந்துகிறோம். வாசகர்களும், ஆசிரியரும் மன்னிக்க வேண்டுகிறோம். விடுபட்ட அத்தியாயங்கள் சென்ற வாரமும் , இவ்வாரமும் வெளியாகியுள்ளன.– ஆசிரியர் குழு.) தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com அபிஜித்துடன் திருமணம் முடிந்து நான்கு மாதங்கள் போவதற்குள் அவள் தந்தை அதுவரையில் ரகசியமாக உறவு வைத்திருந்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார். “அபிஜித்! நீ மட்டும் என்னைக் […]
தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com இரவு ஒன்பது மணியாகிவிட்டது. சித்தார்த்தா திரும்பி வந்தான். சமையல் அறையில் பாட்டியுடன் சிரித்தபடி பேசிக் கொண்டிருந்த மைதிலியை பார்த்ததும் திகைத்துப் போனவனாய் நின்றுவிட்டான். “வா சித்தூ! உனக்காகத்தான் காத்திருக்கிறோம். பாட்டி உனக்காக பாயசம் செய்திருக்கிறாள்” என்றாள் மைதிலி எதிர்கொண்டு அழைத்தபடி. “அந்தம்மாதான் செய்தாங்க சித்தூ! வாவா. பாயசம் ரொம்ப மணக்கிறது. இவ்வளவு அருமையான பாயசத்தை நாம் இதற்கு முன் சாப்பிட்டது இல்லை” என்றால் அன்னம்மா […]
(மிதிலா விலாஸ் தொடரின் அத்தியாயங்கள் 14லிருந்து 18 வரை பதிவு பெறாமல் விடுபட்டு விட்டது. தவறுக்கு வருந்துகிறோம். வாசகர்களும், ஆசிரியரும் மன்னிக்க வேண்டுகிறோம். விடுபட்ட அத்தியாயங்கள் இரு வாரங்களில் வெளியாகும். – ஆசிரியர் குழு.) தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com மைதிலி சித்தார்த்தை வீட்டுக்கு அழைத்து வரும்போது அந்தி மயங்கும் நேரமாகிக் கொண்டிருந்தது. சாலைகளில், வீடுகளில் மின்விளக்குகள் எரியத் தொடங்கின. மழை வரும் அறிகுறி இல்லாமல் வானம் தெளிவாக இருந்தது. மைதிலியின் காரைப் […]