author

கசந்த….லட்டு….!

This entry is part 9 of 35 in the series 29 ஜூலை 2012

 சிறுகதை:ஜெயஸ்ரீ ஷங்கர்,சிதம்பரம். இன்னைக்கு என்ன அதிசயம்….?  மழை கொட்டோ…..கொட்டுன்னு கொட்டப் போகுது, அங்க பாருங்க…நாடகத்தை….என்று ..பல்லைக் கடித்துக் கொண்டு ரகசியமாகக் கண்ணைக் காண்பித்துச் சொன்ன பியூன் செல்வராசைத் தொடர்ந்து சுற்றியிருந்த  அத்தனை பேர்  அதிசயக் கண்களும் அவன் சொன்ன திசைநோக்கித் திரும்பின. “அடடா…..எச்சில் கையால் கூடக் காக்காய் ஓட்ட மாட்டானே…இந்தக் கடைஞ்செடுத்த  கஞ்சன்..கணக்கன்..! இன்னைக்கு என்ன.. சிடுமூஞ்சியில் இத்தனை சிரிப்பு…!  கொடைக் கர்ணன் வேஷம்  போட்டு  என்னைக்கும் இல்லாத திருநாளா… ஒவ்வொருவருக்கும் லட்டு தானம் பண்ணராரே….காணக் கண் […]

குடத்துக்குள் புயல்..!

This entry is part 13 of 37 in the series 22 ஜூலை 2012

பாலகுமாரானின்   ” இதற்குத்தான் ஆசைப்பட்டாயா  ? ”  படைப்பைப் ரகசியமாகப் மறைத்தபடியே  அடுப்பில் பாலை வைத்துவிட்டு, பால் காயும்வரையில் கதையைப் படிக்கலாமே…என்ற எண்ணத்தில் படிக்க ஆரம்பிக்க , மனது கதையோடு ஒன்றிப் போய் படித்துக் கொண்டிருந்தவளை  தனது பின்னாலிருந்து  திடீரென ஒரு கை இடது கையில் இருந்த புத்தகத்தை வெடுக்கெனப் பிடுங்கி வீசி எறிய தூக்கிவாரிப் போட்டுத் திரும்பியவள் அத்தை நின்றிருப்பதைப் பார்த்ததும் திடுக்கிட்டு விழித்தாள்  தீபா. பால் பொங்கி வழியறது கூடத் தெரியாமல் அப்படி […]

மீளாத பிருந்தாவனம்..!

This entry is part 1 of 32 in the series 15 ஜூலை 2012

ஜெயஸ்ரீ ஷங்கர்,சிதம்பரம், சட சட வென ஜன்னல் கண்ணாடியில் மழைச்சாரல் விழும் சப்தம் கேட்டதும்…உறக்கம் கலைந்து விழித்த ராஜகோபாலன் அட….காலங்கார்தால என்னதிது…..மழையா…? என்று போர்வையை உதறி எழுந்தார்..வீடு வெறிச்சென்று சமையல் அறையில் சப்தமின்றிப் பாலைவனம் போலிருந்தது ! .அதைத் தொடர்ந்து மின்வெட்டும் கூடவே வந்ததும், அலுப்பு தான் வந்தது அவருக்கு….நாலு தூத்தல் போட்டால் போதும் கரண்டுல கையை வைக்க இவங்களுக்கு ஒரு சாக்கு…..என்று அங்கலாய்தபடியே….வாசல் கதைவத் திறந்தார். இதமான குளிர்காற்று லேசான சாரலோடு முகத்தைத் தடவியது.சூரியன் மேகத்தை […]

அம்மாவாகும்வரை……!

This entry is part 9 of 41 in the series 8 ஜூலை 2012

  ஒரு வழியாக் பெண்ணோட கல்யாணம் நல்ல படியா முடிஞ்சு அந்த பிரம்மாண்டமான கல்யாண மண்டபத்தின் கணக்கை சரி பார்த்து முடித்து விட்டு கடைசியாக இருக்கும் மிச்சம் மீதி சாமான்களைக் கட்டி டெம்போவில் ஏற்றிக் கொண்டிருந்ததை மேற்பார்வை பார்த்தபடி பரபரத்தாள் ராஜம். அந்த இலைக்கட்டையும் எடுத்துப் போட்டுக்கோ,அதோ அங்க ஒரு கூடை கிடக்கு பாரு…அதையும் எடு….எல்லாத்தையும் ஒண்ணு மேல ஒண்ணு வைக்காமல் பரவலா வைப்பா..கடைசீல அங்க வந்து எடுக்கும்போது எல்லாம் கவிழ்ந்து கொட்டிப் போச்சுன்னு சொல்லுவீங்க….என்றபடி கடைசியா ஒரு பார்வை […]

ஏழாம் அறிவு….

This entry is part 19 of 32 in the series 1 ஜூலை 2012

கணினியில் இணையத்தை இணைத்து, திண்ணை இணைய வார இதழுக்குள்  நுழைந்தததும்…கண்கள்  “மஞ்சள் கயிறு” கதையைத் தேடியது. சென்ற வாரம் முழுதும் மனதை ஆக்கிரமித்து வார்த்தை வார்த்தையாக ஊறிப் பிரசிவித்த கதை. எல்லா உடல் வலிகளையும் வீட்டு வேலைகளையும்  உதறித் தள்ளி விட்டு பொறுமையாக கருமமே கண்ணாயினவளாக சுமந்த கதைக்கரு,  ஜம்மென்று  கண்ணாடி அறைக்குள் அமர்ந்து என்னைப் பார்த்துக் கண்ணடித்தது.. மனசுக்குள் ஏதோ ஒரு நிறைவு.  பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதி விட்டு முடிவுகளுக்குக் காத்திருந்த மனநிலை பாஸான […]

மஞ்சள் கயிறு…….!

This entry is part 22 of 43 in the series 24 ஜூன் 2012

திடுதிப்புன்னு காரில் வந்திறங்கிய தன் மகளின் மொட்டைக் கழுத்தைப் பார்த்ததும் பார்வதிக்கு  நெஞ்சு திக்கென்றது…அங்கே உஷாவை இறக்கிவிட்டுவிட்டு மாப்பிள்ளை சுரேஷின்  கார் விர்ரென்று கிளம்பிச் சென்றது. உள்ளே நுழையும் மகளை…வா…வா..என்ன திடீர் விஜயம்..? என்றழைத்த பார்வதியின்  மனசு “வந்ததும் வராததுமா…இப்போவே கேட்காதே…ன்னு தடுத்தது…” . ” ம்மா….இன்னைக்கு நேக்கு ஒரே…தலைவலி…அதான்…ஆஃபீஸுக்கு  லீவைப் போட்டுட்டு சுரேஷை இங்கே  இறக்கி விடச் சொன்னேன்…ஈவினிங் வந்து பிக்அப் பண்ணிப்பான்.  சர்வசாதாரணமாக சொல்லிவிட்டு செருப்பை ஓரமாக  கழட்டி விட்டு உள்ளே நுழைந்தவள்  கைப்பையில் இருந்து தான்  கொண்டு […]

தாய்மையின் தாகம்……!

This entry is part 19 of 43 in the series 17 ஜூன் 2012

வீதி உலா சுற்றி வந்து களைத்த சூரியன் அலுப்புத் தீர கடலுள் முங்கிக் குளிப்பதை வெட்கப் புன்னகையில் பட்டு மேகங்கள் கன்னம் சிவக்கக் கண்டு மயங்கிக் கொண்டிருக்கும் அந்தி சாயும் மாலை நேரம். அந்த ரம்மியமான மாலைக் காட்சியைத் தன் வீட்டு  பால்கனியில் நின்று கொண்டு ரசித்துக் கொண்டிருந்த உமாவின் கவனத்தை கீழே விளையாட்டுத் திடலில் இருக்கும்  ஊஞ்சல்களிலும் சறுக்கலிலும்  ஆரவாரமாக விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள் தங்கள் பக்கமாக இழுத்தனர். இயற்கையோடு இணைந்திருந்த மனம் திரும்பி  கீழே விளையாடும் […]

ஊமைக் காயங்கள்…..!

This entry is part 10 of 41 in the series 10 ஜூன் 2012

பாட்டி….பாட்டி..முழிஞ்சிண்டு இருக்கியா பாட்டி…அம்மா…பார்த்துட்டு வரச் சொன்னா…அறைக் கதவை மெல்லத் திறந்து எட்டிப் பார்த்து கேட்ட ஏழு வயதாகும் பூரணி கட்டிலில் படுத்திருக்கும் தனது பாட்டியின் அருகில் வந்து பார்க்கவும், தன் பேத்தி பூரணியின் குரல் கேட்டு விழித்த அகிலா… அட…..பூரணிக் குட்டியா….வா..வா…..வா….என்று ஆசையோடு அழைக்க… அப்போ….நீ முழிச்சிண்டு தானே இருக்க….அம்மா…என்னைப் பார்த்துட்டு வரச்சொன்னா….என்று பேத்தி தனது இளம்குரலில் சொல்ல… ஆமாம்டி தங்கம்….பாட்டி முழிச்சுண்டு தான் இருக்கேன்னு அம்மா கிட்ட போய் சொல்லிட்டு வா….எங்கே….இங்கே பாட்டி பக்கத்துல…வா… உன்னைப் […]

தோல்வியில் முறியும் மனங்கள்..!

This entry is part 30 of 41 in the series 13 மே 2012

சங்கீதா……சங்கீதா…..ஏய்..சங்கீதா….இன்னும் அங்க என்ன பண்றே……? வா….சீக்கிரம்…..நீட்டி முழக்கினாலும் அந்தக் குரலில் வழக்கம் போல ஒரு கண்டிப்பு இருந்ததை சங்கீதாவால் உணர முடிந்தது. மாமி…நான் அப்பறமா வரேன்…..அம்மாக் கூப்பிட ஆரம்பிச்சாச்சு …..முதல்லயே சொல்லித் தான் அனுப்பினா கொடியில் காய்ந்த துணிகளை எடுத்தோமா … கட கடன்னு இறங்கி வந்தோமான்னு வா…வீடு… வீடா.. நின்னு கதை பேசாதேன்னு…….அவசர அவசரமாக போற போக்கில் என்னிடம் சொல்லிவிட்டு.. படிகளைத் தாவித் தாவி சிட்டாக இறங்கினாள் சங்கீதா. அவளது அம்மா என்ன சொன்னாலும் சரி…காலையில் […]

நியாப் படுத்தாத தண்டனைகள் ….2..

This entry is part 18 of 41 in the series 13 மே 2012

(சிறுகதை தொடர் கதை ஆகுது … ! ) பக்கத்து வீட்டு ராஜேஸ்வரி அம்மாவின் தலையீட்டின் பிறகு ஆயிஸா ஒரு வாரம் நேரம் தவறாமல் வேலைக்கு வந்தாள். பிரச்சனை அத்தோடு சுமுகமாக தீர்ந்தது என்று நிம்மதியில் இருந்தேன். ..எல்லாம் நல்லாத்தானே போய்க்கிட்டிருந்துச்சு…இப்போ என்னாச்சு…? பெரிசா ஒண்ணும் ஆகலை…..அத்தனை எதிர்ப்பையும் சமாளித்து வேலைக்கு வந்து கொண்டிருந்த ஆயிஷா…..சொல்லாமல் கொள்ளாமல் வருவதை மறுபடியும் நிறுத்தி விட்டிருந்தாள்…. பாவம் இப்போது என்ன பிரச்சனையோ..? யார் என்ன சொன்னார்களோ..? .என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருப்பதை […]