author

கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் இருப்பதைப் பகிரும் இன்பமும்

This entry is part 9 of 15 in the series 25 செப்டம்பர் 2016

  ஜி. ஜே. தமிழ்ச்செல்வி   நான் மாற்றுத்திறனாளி என்பது எத்தனை பேருக்குத் தெரியும் என்பது தெரிய வில்லை. ஆனால் நானே என்னை ஊனமானவள் என்று ஏற்றுக்கொள்ள அநேக வருடங்கள் தேவையாய் இருந்தன. குழந்தையாய் இருக்கும்போது நானும் போலியோ நோய் தீர்ந்து நன்றாக நடந்துவிடுவேன் என்ற எதிர்பார்ப்பும், மற்ற குழந்தைகளைப் போல் நானும் விளையாட வேண்டும் என்றஆசையும் இருந்தது.   இந்த பகிர்தல் உங்கள் அனைவரையும் சங்கடத்தில் ஆழ்த்துவதற்காக அல்ல. ஒரு மாற்றுதிறன் படைத்த குழந்தையின் மனநிலை […]

ஆட்டோ ஓட்டி

This entry is part 1 of 18 in the series 14 பெப்ருவரி 2016

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி டர்ர்ர்ர்ரென்று டயர் தேயும் சப்தத்துடன் யு டேர்ன் அடித்துத் திரும்பியது அந்த ஆட்டோ. அதன் டிரைவர் அதிகம் குடித்திருந்தான். அதற்குள் ஒரு மூதாட்டி…தன் சுருக்குப் பையை திறந்து உள்ளே இருக்கும் சில்லறைகளைப் பொறுக்கி, அதிலிருந்து இரண்டு ஐந்து ரூபாய் நாணயங்களை வெளியில் எடுத்து, உள்ளங்கையில் அடிக்கிக் கொண்டு, சுருக்கு பையை இடுப்பில் சொருகிக் கொண்டாள். ஆட்டோ போதை லயத்துடன் சாலையில் அலைந்தாடியபடி சென்றது. அதைப் பற்றி அந்த மூதாட்டி அலட்டிக் கொள்ளாது அமர்ந்திருந்தாள். ஏய் […]

தினம் என் பயணங்கள் – 47 யுக்தி

This entry is part 12 of 23 in the series 20 டிசம்பர் 2015

தினம் என் பயணங்கள் – 47 யுக்தி ஜி. ஜே. தமிழ்ச்செல்வி இந்த யுக்தி எனக்கு புதியதாகத் தெரிந்தது. அவன் நெடுநெடுவென்று வளர்ந்திருந்தான். மாநிறம். முகத்தில் அம்மைத் தழும்புகள், அவனை விகாரமாய் காண்பிப்பதற்கு பதிலாக வித்தியாசப்படுத்தியிருந்தது. அடர் கத்தரிபூ நிறத்தில், கருநிற பட்டைக் கோடுகள் தரித்த சட்டை அணிந்திருந்தான். “மேடம் கார்ட் வந்திருக்காம், என் ஃபிரண்ட் சொன்னான்” என்றான். “எங்க அப்ளே பண்ணீங்க ?” “ஆன்லைன்ல” “ஆன்லைன்ல பண்ணதெல்லாம் இங்க வராது, 25 ரூபாய் பணம் கட்டி, […]

தினம் என் பயணங்கள் -46

This entry is part 7 of 23 in the series 4 அக்டோபர் 2015

  எத்தனைத் துயரங்களோடு துவங்கி விட்டது இன்றைய தினம். (04.10.2015) ஏதோ முரண்பாடுக்கொண்ட எண்ணங்கள் மனதைக் கொத்தி உணவாக்கிக் கொள்ள முனையும் அத்தகைய எண்ணங்களில் இருந்து விடுபட முயன்றபடி தவழ்கிறது இன்றைய வாழ்வியல் பயணம். சாலை வெறிச்சோடி இருந்தது. சைக்கிள் பயணம் போல் என் ஸ்கூட்டி பயணம் இல்லை. துரிதமாய்க் கடந்து விடுகின்றன காட்சிகள். மனிதர்களும்தான் வேக ஓட்டத்தில் காணாமல் போய் விடுகிறார்கள். அலுவலகத்திற்குள் நுழையும் போதே கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது. சேரும் சகதியுமான தெருவையும், […]

தினம் என் பயணங்கள் -45 இலக்கை நோக்கிய பயணம்!

This entry is part 11 of 24 in the series 13 செப்டம்பர் 2015

ஒரு வழியாய் அலுவலகங்களிலேயே பெரும்பாலும் வாழ்க்கைப் பொழுதும் கழிந்து கொண்டிருக்கிறது. யக்கோவ் குப்பேத்தாக்கோவ் (அக்கா குப்பை எடுத்து வாங்க அக்கா) என்று கூவும் பெண்மணியின் குரலோடு விடிந்தது இன்றைய இரவும். ஒருவழியாய் சீரான பாதையை நோக்கிப் பயணம் செய்கிறேன் என்று எண்ணுகிறேன். இது இலக்கை நோக்கிய பயணம். மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் நிறுவனத்தை உருவாக்கும் முயற்சி! அதுவே என் இதயத் துடிப்பு நிறுவகப் பயிற்சிக் கூடம். எவ்வளவு யோசித்தும் அவர்களுக்கு ஏற்ற ஏதுவான தொழில் எதுவும் எனக்குத் தோன்றவில்லை. […]

தினம் என் பயணங்கள் – 44 மலர் அணிவது !

This entry is part 16 of 27 in the series 6 செப்டம்பர் 2015

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி குழந்தை, கவிழப் பழகி, பின் கவிழ்ந்தபடி நகரப் பழகி, முழங்காலிட்டு நகரும், குழந்தைப் பருவம் போல், நானும் இந்த வயதில் முழங்காலிட்டு அந்த நீண்ட பாதையில் நகர்ந்து கொண்டிருந்தேன். முழங்காலிடுதலும் சில அரியக் காட்சிகளைக் கண்டுவிட ஏதுவாகும் போலும். அப்படி முழங்காலிட்டு நகர்ந்த போது தான் அந்த பல்லி துடித்துக் கொண்டிருப் பதைப் பார்த்தேன். அதன் வால் துண்டிக்கப்பட்டிருந்தது. அதன் நிறமோ மரப்பட்டையின் வெடிப்பின் நிறம் கொண்டிருந்தது. ஒரு கண் பழுதடைந்து குருதி […]

அந்நியத்தின் உச்சம்

This entry is part 11 of 17 in the series 12 ஜூலை 2015

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி அவகாசம் கேட்கிறாய் கடந்த அத்தனை வருட அவகாசம் போதாதா? நின்று நிதானித்துப் பின் யோசித்தேன் மூளையைக் கசக்கியதில் உண்மை புலப்பட்டது. நீ அந்நியன் ! யாரோ ஒருவன் உன்னிடத்தில் என்னவனை நாடுவது பைத்தியத்தின் உச்சம் என்பது ! உறவிருக்கிறது உரிமையும் நிலைக்கிறது நீயோ அந்நியனாய் முன் நிற்கிறாய் ! காத்திருப்பின் கணங்கள் பயனற்று உதிர்ந்து போவதைக் கண்டது மனக் கண் ! நலமா என்று வினவ நாள் நட்சத்திரம் பார்க்க அவகாசம் தேவைப் படுமோ […]

சஹானாவின் மூக்குத்தி

This entry is part 7 of 19 in the series 5 ஜூலை 2015

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி இலியாஸ் ஒருக்களித்துப் படுத்திருந்தார். வழக்கமான அந்த குறட்டைச் சப்தம் கேட்கவில்லை. சுக்குக் காப்பி கொதிக்க வைக்கும் பாத்திரம் ஙொய் என்று நான் கொதித்து விட்டேன் என்று குரல் கொடுத்தது. இனி மேல் எழுந்து குளித்து நமாஸ் செய்துவிட்டு காப்பி பாத்திரத்தை சைக்கிளில் ஏற்றிக் கயிறு கட்டி இறுக்கி விட்டு அவர் கிளம்ப வேண்டும். சஹானா படித்துக்கொண்டிருந்த அறிவியல் புத்தகத்தை கவிழ்த்து வைத்து விட்டு அவரைத் திரும்பி பார்த்தாள். சாதாரணமாக அவர் இவ்வளவு நேரம் […]

நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் -12

This entry is part 17 of 19 in the series 28 ஜூன் 2015

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி ஊஞ்லின் மீது அமர்ந்திருந்தாள் யாழினி. சுற்றிலும் பரந்து விரிந்திருந்த மணற் பரப்பு. இரண்டு ஊஞ்சல்கள் ஒரு சருக்கு மரம், ஒரு சாரியில் வைக்கப்பட்டிருந்ததென்னை மரம், அந்த தென்னை மரங்களை கடந்து சதுரமாய் ஒரு புல்வெளி. அதற்கு பார்டர் அமைத்ததைப் போல குரோட்டன்ஸ் செடிகள் ஒரு சீராய் வெட்டிவிடப் பட்டிருந்தது. தத்தி தத்தி வந்துக்கொண்டிருந்தாள் குட்டி யாழினி! வாழ்க்கை எத்தனை தூரிதமாய் கடந்து விடுகிறது. ஊரை விட்டு வந்து 3வருடங்களுக்கு மேல் ஆயிற்று. குழந்தை,அம்மா […]

நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் -11

This entry is part 9 of 23 in the series 21 ஜூன் 2015

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி சாத்தனூர் அணை செல்லும் சாலை! சொர்ப்பனந்தல் என்ற அழகான ஊரின் அரசினர் உயர்நிலைப் பள்ளியின் எதிர்சாரியில் அமைந்திருந்தது. அந்த அறக்கட்டளை கிராமத்திலேயே உயர்ந்த அடுக்குமாடிக் கட்டிடங்களைக் கொண்டிருந்தது. அங்கு சிறுவர்களுக்கு இலவசக் கல்வியும், அனைத்து மதப் புத்தகங்களும் போதிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கல்வியும், தொழிலும் வழங்கப்பட்டது. அங்கு ஐ.ஏ.எஸ் அகாடமியும் இருந்தது யாழினியை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஒரு கிராமத்தில் தன்நிறைவு பெற்ற நிறுவனமா என்று வியந்துபோனாள். அதன் நிறுவனரான மிஸ்.சோஃபியா சராசரிக்கும் சற்று உயரமானவளாய் இருந்தார். […]