author

ரிஷி’ ((லதா ராமகிருஷ்ணன்) யின் கவிதைகள்

This entry is part 8 of 9 in the series 7 அக்டோபர் 2018

  ஒன்றின் பல   *சிறுவனாகவே இருக்கப் பிரியப்படும் கவிதை என்னைச் சிறுமியாக்கிச் சிரித்து மகிழ்கிறது. **தெருநாய்களுக்கு உணவூட்டக் காத்திருக்கும் இரவு யாசகன் எதிரில் நானும் குரைக்க மறந்து அமர்ந்துகொண்டிருக்கிறேன். ***இருளின் கதையைக் கேட்க எனக்கும்தான் கொள்ளை ஆசை. ****கருப்புப் பூனை நான் தேடிய கதையின் மீது பாய்ந்த பின் முடிவுற்ற கதையை இன்னமும் வாசித்துக்கொண்டிருக்கிறேன் முடிவற்று. *****வானவில் ஒவ்வொரு மனசிலும் தேடியது தொலைந்த தன் ஏழு வண்ணங்களையா? அல்லது அவற்றில் அங்கிருப்பதுபோக இல்லாத ஒன்றையா? ******மனதுக்குள் […]

கவிஞர் வைதீஸ்வரனின் மூன்று புதிய நூல்கள்

This entry is part 9 of 9 in the series 7 அக்டோபர் 2018

(1) CITY WALLS POEMS BY VAIDHEESWARAN Rendered in English கவிஞர் வைதீஸ்வரனின் கவிதைகள் சில 2000த்தில் THE FRAGRANCE OF RAIN என்ற தலைப்பில் வெளியாகியது. அதில் இடம்பெற்றிருந்த ஏழெட்டு மொழிபெயர்ப்பாளர்களில் _ எழுத்தாளர்கள் அசோகமித்திரன், எம்.எஸ்.ராமஸ்வாமி என அவர்கள் அனைவருமே சிறந்த எழுத்தாளர்கள்; அறிஞர்கள். கவிஞர் வைதீஸ்வரனுடைய கவிதைகள், எழுத்தாக்கங் கள் மீது மரியாதையும் அபிமானமும் கொண்டவர்கள். இப்போது, கவிஞர் வைதீஸ்வரனுடைய பிறந்தநாளை முன்னிட்டு (1935 ஆம் ஆண்டு செப்டெம்பர் 22ஆம் நாள் […]

நூல் அறிமுகம் புத்தகங்களின் வழியே…. சு.ரம்யா எழுதிய நூல் குறித்து

This entry is part 5 of 10 in the series 29 ஜூலை 2018

_ லதா ராமகிருஷ்ணன் (*WELFARE FOUNDATION OF THE BLIND என்ற பார்வையற்றோர் நன்நல அமைப்பு பார்வையற்றோரின் பிரச்சினைகளையும், ஆற்றல்க ளையும் எடுத்துக்காட்டும் எழுத்தாக்கங்களையும் பார்வையற்றோரின் எழுத்தாக்கங்களையும் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது. இவ்வாண்டு இந்த ஜூன் மாதம் 16 ஆம் நாள் அன்று நடைபெற்ற ஆண்டுவிழாவில் தமிழாசிரியை சு.ரம்யாவின் கட்டுரைத்தொகுப்பு(50 பக்கங்கள்) வெளியிடப்பட்டது. நூலை உரிய நேரத்தில் நேர்த்தியாக வெளியிட்டுத் தந்தவர்கள் எங்கள் அமைப்பின் நூல்வெளியீட்டு முயற்சிகளுக்கு என்றும் உறுதுணையாக இருந்துவரும் புதுப்புனல் பதிப்பக நிறுவனரான நண்பர்கள் ரவிச்சந்திரன் […]

’இனிய உளவாக’வும் INSENSITIVITYகளும்

This entry is part 3 of 8 in the series 15 ஜூலை 2018

    லதா ராமகிருஷ்ணன்   அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும்போதெல்லாம் அதிகமாய்க் கண்ணில் படும் குறள்கள் இரண்டு:   இனிய உளவாக இன்னாத கூறல்       கனியிருப்பக் காய் கவர்ந்தற்று.   வாய்மை எனப்படுவது யாதெனில் யாதொன்றும்                தீமை இலாத சொலல்.   இந்த இரண்டு குறள்களுமே இவற்றிற்கு இருக்கும் உரைகளைக் காட்டிலும் அதிகமாய் எத்தனையோ அடுக்குகளைக்கொண்ட அர்த்தங்கள் செறிந்தவை. ஆனால், ’எனக்கு பழத்தை விட காய் தான் பிடிக்கும்’ ’பழத்தை விடக் காயே […]

குழந்தைகளைப் பற்றி சற்று சிந்திப்போம்

This entry is part 2 of 13 in the series 20 மே 2018

                                              நிறைய பள்ளிக்கூடங்களில் மிகக்குறைவான கவனிப்பையும் பராமரிப்பையும் பெறுவது கழிப்பறையாகவே இருந்துவருவது கண்கூடு. அல்லது, ஆசிரிய ஆசிரியைகள் பயன்படுத்தும் கழிப்பறை மட்டும் ஓரளவு சுத்தமாக இருக்கும். வகுப்புநேரத்தின்போது சிறுநீர் கழிக்கவேண்டும் என்றோ, மலம் கழிக்கவேண்டும் என்றோ குழந்தைகள் கேட்பதற்கே இகவும் பயந்துகொண்டிருப்பதும், கேட்டால் ஆயாவிடம் அல்லது […]

பாரதி யார்? (நாடகம் குறித்து சில கருத்துகள்)

This entry is part 4 of 22 in the series 22 ஏப்ரல் 2018

இந்த நாடகத்தை தி.நகரிலுள்ள வாணிமகால் அரங்கில் நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. (வீணைக் கலைஞர், அமரர் எஸ்.பாலச்சந்தரின் மகன் எஸ்.பி.எஸ்.ராமன் இயக்கியுள்ள இந்த நாடகத்தில் பாரதியாக ’இசைக்கவி’ ரமணன் நடிக்கிறார். நாடக வசனங்கள் எழுதியவரும் அவரே.)       நாடகத்தில் எனக்குப் பிடித்திருந்த அம்சங்கள்.   1.பாரதியாரின் பல கவிதைகளை நாடகம் முன்னிலைப்படுத்தியிருந்தது.   2.பாரதியார் புதுச்சேரிக்குப் போனதால் அவர் கோழை என்று சிலரால் முன்னிறுத்தப் படும் வாதம் பொய் என்று காட்டியது.   3.பாரதியாரின் […]

நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்? திரு.மாரிதாஸின் நூல் குறித்த ஒரு சிறு அறிமுகம்

This entry is part 10 of 19 in the series 8 ஏப்ரல் 2018

_ லதா ராமகிருஷ்ணன் நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்? திரு.மாரிதாஸின் நூல் – கிழக்கு பதிப்பக வெளியீடு (பக்கங்கள் : 256 / விலை ரூ.225 – தொடர்புக்கு: 044 4200 9603 / maridasm@gmail.com நூல் குறித்த ஒரு சிறு அறிமுகம் கேப்டன், உலகநாயகன், தளபதி, கவிப்பேரரசு போன்ற அடைமொழிகளை வெகு இயல்பாகப் பயன்படுத்தும் அறிவுசாலிகளுக்குக் கூட இந்தியாவின் தற்போதைய பிரதமர் திரு. நரேந்திர மோதி வெறும் மோதி அல்லது வக்கிர வசைகளுக்குரிய மோதியாகவே […]

மொழிபெயர்ப்புத் திறனாய்வாளராக அறியப்படுவதற்கு ஒருவருக்கு இருக்கவேண்டிய முக்கியத் தகுதிகள்

This entry is part 20 of 22 in the series 1 ஏப்ரல் 2018

லதா ராமகிருஷ்ணன் (* முன்குறிப்பு: நியாயமான, தகுதிவாய்ந்த விமர்சகர்கள் என்றுமே மதிக்கப்பட வேண்டியவர்கள்; மதிப்புக்குரிய வர்கள். இலக்கியம் சார்ந்த, மொழிபெயர்ப்பு சார்ந்த உண்மையான அக்கறையோடு அவர்கள் விமர்சனத்தை கண்ணியமாக முன்வைக்கும் விதமே வேறு. இந்தக் கட்டுரை அவர்களுக்கானதல்ல) மொழிபெயர்ப்பாளர்களின் 300 பக்கங்களில் 3 தவறுகளை, அதுவும் தப்புத்தப்பாய், சுட்டிக்காட்டுவதன் மூலமே மேதகு மொழிபெயர்ப்பு விமர்சகர்களில் முக்கியமான ஒருவராக வலம்வந்துகொண்டிருக்கும் பெருந்தகை ஒருவர் விரைவிலேயே மொழிபெயர்ப்பு தொடர்பான பல Ten Commandments – பிறப்பிக்கும் வாய்ப்புகள் தெளிவாகவே தெரிகின்றன. […]

புனைவு என்னும் புதிர் : விமலாதித்த மாமல்லன்

This entry is part 17 of 20 in the series 25 பெப்ருவரி 2018

பள்ளிப்பருவத்தில் பாடங்களை உரக்க வாசித்து உள்வாங்கிக் கொள்ளும் வழக்கம் நம்மில் பலருக்கு இருந்ததுண்டு. இலக்கியக் கூட்டங்களில் உரையாற்றுபவர் பலரின் சிந்தனையோட்டங்களை சரிவர பின் தொடரமுடியாமல் போவதுண்டு. எழுத்தாளர் விமலாதித்த மாமல்லனின் சமீபத்திய ’புனைவு என்னும் புதிர் என்ற தலைப்பிட்ட நூலில் இடம்பெறும் கதைகளையும் அவை எப்படி இலக்கியப் படைப்புகளாகின்றன என்று எழுத்தாளர் அடர்செறிவாக முன்வைக்கும் கருத்துகளையும் என் தோழி பத்மினி கோபாலனுக்காக படித்துக்காட்டும்போது என்னாலும் சிந்தனையைச் சிதறவிடாமல் நூலில் ஒன்றிவிட முடிந்தது. [புதுமைப்பித்தனின் உபதேசம், கி.ராஜநாராயணனின் ’மின்னல்’, […]

ராஜேஷ் சுப்பிரமணியனின் புது முயற்சிக்கு வரவேற்பும் வாழ்த்துகளும்!

This entry is part 18 of 20 in the series 25 பெப்ருவரி 2018

    லதா ராமகிருஷ்ணன் தன்னளவில் சிறந்த வாசகராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் இருக்கும் நம் நட்புவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் சுப்பிரமணியன் ஆங்கிலத்திலிருந்து தமிழிலும் தமிழிலிருந்து ஆங்கிலத்திலும் மொழிபெயர்ப்புகள் செய்துவருகிறார். அவருடைய ஃபேஸ்புக் பக்கத்திலும் அவ்வப்போது தன் மொழிபெயர்ப்புகளைப் பதிவேற்றிவருகிறார். அவருடைய சமீபத்திய பதிவு ஒன்று கீழே இடம் பெற்றுள்ளது.   பாரதியாரின் கவிதை ஆங்கிலத்தில்: (மொழியாக்கம்: ராஜேஷ் சுப்ரமணியன் )   A tiny ball of ember A tiny ball of ember that I […]