பாவண்ணன் இந்தியாவின் மிகச்சிறந்த பத்து எழுத்தாளர்களின் பட்டியலில் ஒருவரென அனைவராலும் சுட்டிக் காட்டப்படும் ஒரு பெயர் வைக்கம் முகம்மது பஷீர். நேஷனல் புக் டிரஸ்டு வழியாக ஆதான் பிரதான் திட்டத்தின் கீழ் வெளிவந்த அவருடைய ‘பாத்துமாவின் ஆடும் இளம்பருவத்துத் தோழியும்’ நாவல்கள் அவரை இந்தியாவின் எல்லா மொழி வாசகர்களிடமும் கொண்டு சேர்த்தது. மொழிபெயர்ப்பாளர்களின் தனிப்பட்ட முயற்சியால் வெளிவந்த ‘எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது’ ‘மதில்கள்’ ஆகிய இரு நாவல்களும் இந்திய இலக்கியத்தில் பஷீருடைய இடம் […]
ஆ.மாதவன் என்னும் எழுத்தாளரை ‘கிருஷ்ணப்பருந்து’ நாவலாசிரியராகத்தான் நான் முதலில் தெரிந்துகொண்டேன். அப்போது நான் தீராத தாகம் கொண்ட வாசகனாக இருந்தேன். நூலகத்திலிருந்தும் நண்பர்களிடமிருந்தும் புத்தகங்களைப் பெற்று படித்துக்கொண்டிருந்த காலம் அது. கிருஷ்ணப்பருந்துதான் நான் படித்த அவருடைய முதல் படைப்பு. என்னைத் தொடர்ந்து என் நண்பன் பழனியும் அதைப் படித்தான். நாங்கள் இருவரும் ஒருநாள் முழுக்க அந்த நாவலைப்பற்றி விவாதித்தோம். ஒரு சாமியாருக்குள் இப்படி ஒரு பெண்ணாசையா என்பதுதான் அன்று எங்களுடைய விவாதத்தின் மையம். அது இருக்கலாமா, இருக்கக்கூடாதா, […]
அக்டோபர் மாத காலச்சுவடு இதழில் சுந்தர ராமசாமியின் நட்பு தனக்களித்த அனுபவங்களைப்பற்றி முகம்மது அலி எழுதிய கட்டுரை (இதயத்தால் கேட்டவர்) வெளிவந்துள்ளது. கட்டுரையுடன் முகம்மது அலிக்கு சுந்தர ராமசாமி எழுதிய நான்கு கடிதங்களும் பிரசுரிக்கப்பட்டுள்ளன. 1985 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட ஒரு கடிதத்தில் கொடைக்கானலில் நடைபெற்ற சிறுகதைப்பட்டறையில் கலந்துகொண்ட நினைவுகளின் பதிவை சு.ரா. எழுதியிருக்கிறார். பட்டறையில் கலந்துகொள்ளும்படி அழைத்தவர் ஆல்பர்ட் என்பதால் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாகத் தெரியப்படுத்துகிறார். சு.ரா. போன்ற ஆளுமை மதித்த ஆளுமையாக ஆல்பர்ட் விளங்கியிருக்கிறார். நாகர்கோவில் […]
21.10.2015 அன்று வெங்கட் சாமிநாதன் இயற்கையெய்தினார். அவருடைய விழிகள் தானமாக வழங்கப்பட்டன. அவருடைய உடல் அன்றைய நண்பகலிலேயே பெங்களூரு ஹெப்பாள் மின்தகன மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு எரிக்கப்பட்டது. அவருடைய உடலை தகனமையத்தின் வண்டியில் ஏற்றும்போது ஆறேழு நண்பர்கள் மட்டுமே இருந்தோம். தகன மையத்தில் மேலும் ஆறேழு நண்பர்கள் காத்திருந்தார்கள். அஞ்சலி செலுத்தும் விதமாக நின்றுகொண்டோ அல்லது உட்கார்ந்துகொண்டோ பேசுவதற்கு அந்த இடம் சிறிதும் பொருத்தமாக இல்லை. வேறொரு நாளில் அந்த நிகழ்ச்சியை விரிவாகவே நடத்தவேண்டும் என நண்பர்களும் […]
இந்த ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் நாளன்று சஹகார் நகரில் நண்பர் மகாலிங்கம் ஒற்றை அறையைக் கொண்ட ஒரு புதிய வீட்டைக் கட்டி அதற்கு புதுமனை புகுவிழா நடத்தினார். அது ஒரு வேலை நாள். விடுப்பெடுக்கமுடியாதபடி வேலைகளின் அழுத்தம் இருந்தது. நானும் என் மனைவி அமுதாவும் காலையிலேயே சென்றிருந்தோம். முகம்மது அலி, சம்பந்தம், அழகர்சாமி என பல நண்பர்கள் வந்திருந்தார்கள். வெங்கட் சாமிநாதன் வருவதாகச் சொல்லியிருந்தார். இன்னும் வந்து சேரவில்லை. பார்த்துவிட்டுச் செல்லலாம் என்பதற்காக நான் […]
பாவண்ணன் முதல் உலகப்போரையும் இரண்டாம் உலகப்போரையும் தொடர்ந்து வெளிவந்த இலக்கியங்களும் திரைப்படங்களும் அப்போர்களின் சாட்சியங்களாக இன்றும் விளங்குகின்றன. இரு தரப்பினரும் கொன்று குவித்த மக்களின் வலியையும் துயரங்களையும் இன்றளவும் அவை உலகத்துக்கு பறைசாற்றியபடி இருக்கின்றன. சீனப்புரட்சியையும் ரஷ்யப்புரட்சியையும் தொடர்ந்து அந்நாடுகளில் நிலவிய கடுமையான கண்காணிப்புகளையும் மீறி புரட்சியின் விளைவுகளைப்பற்றி எழுதப்பட்ட இலக்கியங்கள் மானுடத்தின் உலராத கண்ணீர்த்தடத்தை அடையாளப்படுத்தியபடி இருக்கின்றன. ரத்தத்தையும் கண்ணீரையும் சிந்தவைத்த போர்களும் புரட்சிகளும் அதிகாரத்தை அடைந்துவிட்டால் வெற்றியின் வரலாறாக மாறிவிடும். அதிகாரத்துக்கு அடிபணிந்துவிடும்போதோ அல்லது […]
பாவண்ணன் பாரதி கிருஷ்ணகுமார் தமிழுலகத்துக்கு அறிமுகமான நல்ல பேச்சாளர். பாரதியின் பாடல்களில் மனம் தோய்ந்தவர். முதல் முயற்சியாக அப்பத்தா என்னும் தலைப்பில் ஒரு சிறுகதைத்தொகுதியை வெளியிட்டிருக்கிறார். 2008 முதல் 2011 வரை எழுதிய அவர் எழுதிய பத்து சிறுகதைகள் இத்தொகுதியில் உள்ளன. 2012-ல் முதல் பதிப்பும் 2013-ல் மேலும் இரு பதிப்புகளும் வெளிவந்துள்ளன. கிருஷ்ணகுமாரின் கதைமாந்தர்கள் அனைவரும் மிக எளிய மனிதர்கள். சாதாரண வாழ்க்கைச் சம்பவங்கள் வழியாகவே அவர்களை கிருஷ்ணகுமார் நமக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார். மிகவும் குறைவான […]
ஜெயமோகனின் பெயரை நான் முதன்முதலாக தீபம் இதழில் பார்த்தேன். அதில் எலிகள் என்னும் தலைப்பில் ஒரு சிறுகதையை அவர் எழுதியிருந்தார். ஓர் இருண்ட அறை. அதில் சுதந்திரமாக உலவும் ஏராளமான எலிகள். புத்தக அடுக்குகள், படுக்கை, சமையல் மேடை என எல்லா இடங்களுக்கும் அவை வருகின்றன. படுத்திருப்பவனுக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்துகொள்வதிலோ, அல்லது படுத்திருப்பவன் மேலேயே ஏறி ஓடுவதிலோ அவற்றுக்கு கொஞ்சம்கூட தயக்கமே வரவில்லை. அந்த அளவுக்கு சுதந்திரமான எலிகள். கதையில் முழுக்கமுழுக்க அந்த எலிகளின் நடமாட்டத்தைப்பற்றிய […]
தமிழ் நவீன சிறுகதையாக்கத்தில் உலகச் சிறுகதை மேதைகளின் செல்வாக்கு ஒரு முக்கியமான பங்கை நிகழ்த்தியிருக்கிறது. பால்ஸாக், மாப்பசான், செகாவ் ஆகிய மேதைகளின் சிறுகதைகளை தமிழின் நவீன சிறுகதையாசிரியர்களே தமிழ்வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திவைத்தார்கள். புதுமைப்பித்தன் தன்னுடைய சொந்தச் சிறுகதைகளுக்கு இணையான பக்க அளவுள்ள அயல்மொழிச்சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்த்து அறிமுகப்படுத்தினார். தமிழில் ஒரு சிறுகதையை வாசிக்கும் ஒரு வாசகன், உலகச் சிறுகதைகளில் நிகழ்ந்துள்ள உச்சங்களை அறிந்து தன் வாசிப்பு உலகத்தையும் பார்வையையும் விரிவு செய்துகொள்ள இத்தகைய அறிமுக முயற்சிகள் காலந்தோறும் உதவியபடி […]
வீரயுக மாந்தர்களை வியந்தும் பாராட்டியும் எழுதப்பட்டிருக்கும் பல பாடல்கள் புறநானூற்றில் உள்ளன. அவற்றில் சிற்றில் நற்றூண் பற்றி எனத் தொடங்கும் பாடல் பிரபலமானது. ஆண்மகன் என்பவன் போராடப் பிறந்தவன் என்கிற தொனியும் அத்தகைய வீரனைப் பெற்ற தாய் என்கிற பெருமையும் ஒருங்கே வெளிப்படும் பாடல் அது. இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பிருந்த சூழல் அப்பாடலில் சித்தரிக்கப்பட்டிருந்தது. அந்தச் சாயலில் இன்றைய சூழலை சற்றே மாற்றி எழுதிப் பார்த்திருக்கிறார் வளவ. துரையன். புறநானூற்றில் மகனைப்பற்றிய கேள்விக்கு வீரமரபைச் சேர்ந்த தாய் […]