காலம்தோறும் கவிதையின் மொழிதல்முறை மாறிக்கொண்டே வருகிறது. அதே தருணத்தில் எளிமை, இறுக்கம், கச்சிதம் என கவிதையின் புறவடிவங்களிலும் மாற்றம் நிகழ்ந்தபடி இருக்கிறது. ஒரு மொழிதல்முறை பல கவிஞர்களால் மெல்லமெல்ல வளர்த்தெடுக்கப்பட்டு, அது அந்தக் காலத்துக்குரிய முறையாக உச்சம் பெற்று, கால ஓட்டத்தில் அது தேய்வழக்காக மாறிவிடும் தருணத்தில் மீண்டும் ஒரு புதிய மொழிதல்முறையோடு ஒரு புதிய தலைமுறை தோன்றுகிறது. தமிழ்க்கவிதையின் மொழிதல்முறையில் மாற்றங்கள் உருவான சமயங்களில் மிகச்சிறந்த ஆளுமைகளாக மலர்ந்தவர்கள் பாரதியார், ந.பிச்சமூர்த்தி, சி.மணி, பிருமிள், […]
வீட்டுக்குள் நுழைந்து பள்ளிக்கூடப் பையை வைத்ததுமே “கைகால கழுவிகினு கடபக்கமா போய் அப்பாவ பாத்து செலவுக்கு காசு வாங்கிட்டு வரியா?” என்று கேட்டாள் அம்மா. “சரிம்மா” என்றபடி தோட்டத்துப்பக்கம் சென்று பானையிலிருந்த தண்ணீரில் கைவைத்தேன். பக்கத்தில் வேலியோரமாக ஒரு சின்னஞ்சிறு புளியங்கன்று விரல்நீளத்துக்கு பச்சைப்பசேலென நின்றிருப்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. அதன் வேர்ப்பகுதியில் கோழிகளால் சீய்க்கப்பட்ட பள்ளங்களை காலாலேயே மண்ணை இழுத்துத்தள்ளிச் சரிப்படுத்தினேன். வேகவேகமாக அது வளர்ந்து திசையெங்கும் கிளைவிரித்தபடி அடர்ந்து நிற்கிற காலம் விரைவில் […]
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் படித்த ஜெயமோகனின் விஷ்ணுபுரம்’ புதினத்தின் இறுதிப்பகுதியாக இடம்பெற்றிருந்த பிரளயத்தின் காட்சிகளை ஒருபோதும் என்னால் மறக்க முடிந்ததில்லை. அக்காட்சிகள் பல நாட்கள் என் கனவில் தோன்றித்தோன்றி என்னை அச்சுறுத்திக்கொண்டே இருந்தன, இடைவிடாது பொழியும் மழை. கடல்போல வெள்ளம் பொங்கி வந்து விஷ்ணுபுரத்தையே சூழ்ந்துகொள்கிறது. வயல்வெளிகள், தோப்புகள், சின்னச்சின்ன குன்றுகள் எல்லாமே மெல்லமெல்ல வெள்ளத்தில் மூழ்கி மறைகின்றன. கால்நடைகளின் பிணங்கள் மிதந்து செல்கின்றன. மனிதர்களின் பிணங்கள் மரக்கிளைகளில் சிக்கி வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு கரையுள்ள இடங்களில் […]
பாவண்ணன் எட்டே முக்காலுக்கு வீட்டைவிட்டுக் கிளம்பி, ஒன்பதுமணிக்கு வில்லியனூரில் பஸ் பிடித்து, ஒன்பது இருபதுக்கு புதுச்சேரியில் வேறொரு பஸ் மாறி, ஒன்பதே முக்காலுக்கு சுற்றுக்கேணியில் இறங்கி, பெட்டிக்கடை ரங்கசாமிக்குச் சொந்தமான தோப்பில் நட்பின் அடிப்படையில் நிறுத்திவைத்திருக்கும் மிதிவண்டியில் வேகவேகமாக பத்து நிமிடம் மிதித்துச் சென்றால்தான் கடவுள் வாழ்த்து தொடங்குவதற்குள் பள்ளிக்கூடத்துக்குள் நுழையமுடியும். இந்த இணைப்புச்சங்கிலியில் ஏதாவது ஒரு கண்ணி அறுந்துபோனாலும் தலைமையாசிரியரின் வாழ்த்துப்பாட்டுக்கு தலைகுனிந்து நிற்கவேண்டும். அந்த அவமானம் நாள்முழுக்க நெஞ்சை அறுத்துக்கொண்டே இருக்கும். அதில் முன் […]
காசுக்கடை மீன்மார்க்கெட்டுக்குப் பக்கத்தில் குப்பு காத்துக் கொண்டிருப்பதாக ஏழுமலைக்கு தகவல் வந்தது. ரொட்டிக்கடைக்கு தேவையான மாவு மூட்டையை சைக்கிள் கேரியரில் வைத்துத் தள்ளiக்கொண்டு வந்தபோது சிக்னலுக்குப் பக்கத்தில் குப்புவே பார்த்து கைதட்டி கூப்பிட்டு நிறுத்தி விஷயத்தைச் சொல்லியனுப்பியதாக தெரிவித்துவிட்டுப் போனான் முத்துராஜா. அன்று இரவு கோயம்பத்தூருக்கு லோடு ஏற்றிக்கொண்டு கிளம்பவேண்டிய லாரிக்கு கிரீஸ் போட்டு ப்ரேக் சரிபார்த்துக்கொள்வதற்காக பட்டறையில் நின்றிருந்தவன் “இது ஒரு எழவு நேரம் கெட்ட நேரத்துல..” என்று சலித்துக்கொண்டான். இரும்புச்சட்டியில் ஸ்பேர் பார்ட்ஸ்களை […]
காசோலைகளின் எண்களைப் பதிந்துகொண்டிருக்கும் சமயத்தில் எதிர்பாராதவிதமாக என் கணிப்பொறி உறைந்துபோனது. எனக்குத் தெரிந்த சில்லறை வைத்தியங்களையெல்லாம் செய்து பார்த்துவிட்டேன். ஒரு பயனும் இல்லை. எந்தப் பக்கமும் நகர மறுத்த அம்புக்குறி உயிர்பிரிந்த உடல்போல திரையில் கிடந்தது. கணிப்பொறிப் பழுதுகளைக் கவனித்து நீக்கும் பயிற்சி பெற்ற சுலோச்சனாவின் அறை நான்கு அறைகள் தள்ளியிருந்தது. நேரிடையாகச் சொல்லி கையோடு அழைத்துவந்துவிடும் நோக்கத்தோடு வேகமாக இருக்கையைவிட்டு எழுந்த போது துப்பட்டாவின் முனை நாற்காலி விளிம்பில் சிக்கிக்கொண்டது. “அவசரம்னு ஏந்திருக்கறப்பதான் நமக்குன்னு ஆயிரம் […]
பாவண்ணன் பொதுக்பொதுக்கென்று அழுந்தும் ஈரத்தரையில் கவனமாக அடியெடுத்து வைத்துக் கரையேறினான் சொக்கலிங்கம். அலைவேகத்துக்குத் தகுந்தமாதிரி தாவிக் குதித்தும் விழுந்தும் புரண்டும் கடலில் அரைமணிநேரமாக தொடர்ந்து குளித்ததில் இன்னும்கூட நிதானத்துக்கு வரமுடியாமல் மிதப்பதுபோலவே இருந்தது உடல். காதுக்கு வெகு அருகில் யாரோ உறுமுவதுபோன்ற ஓசை கேட்டது. வேகமாகப் பொங்கிவந்த அலையொன்று அவன் நடந்துவந்த காலடித்தடங்களை அழித்துவிட்டுச் சென்றது. உச்சிவெயிலில் கண்கள் கூசின. கரையில் வைத்திருந்த துண்டை எடுத்து தலையைத் துவட்டியபடி, கடலை விட்டுவர விருப்பமில்லாமல் […]
பாவண்ணன் வீட்டுக்குள் நுழைந்து அலுவலகப்பையை ஆணியில் மாட்டும்போதே “ரெண்டு தரம் அட்ட வந்துவந்து ஒன்ன தேடிட்டு போனாண்டா” என்றாள் அம்மா. திரும்பி அம்மாவை முறைத்தேன். சட்டைப்பையில் இருந்த கைப்பேசியை மேசைமீது வைத்துவிட்டு உட்கார்ந்தேன். “எங்களுக்குள்ள கூப்ட்டுக்கறதுக்குத்தான் பட்டப்பேரு, ஒனக்கு கெடயாதுன்னு எத்தன தரம் சொன்னாலும் எப்படித்தான் மறந்துபோவுமோ தெரியலை” என்றேன். அம்மா சிரித்தபடியே தலைமுடியை ஒதுக்கிக்கொண்டு “சரிடா, ரொம்பத்தான் முறுக்கிக்காத. ஒன் அரும கூட்டுக்காரன் கோபால் வந்துட்டு போனான். போதுமா?” என்றாள். பிறகு, ‘ஒன்ன செல்லுல கூப்ட்டானாம். […]
பாவண்ணன் ”கேவலம் கேவலம்” என்று தலையில் அடித்துக்கொண்டார் முருகேசன். மலைக்காற்றில் அவருடைய நரைத்த தலைமுடி ஒருபக்கமாகப் பறந்தது. சட்டை ஒருபக்கம் உடலோடு ஒட்டிக்கொள்ள இன்னொருபக்கம் இறக்கை விரித்துப் பறப்பதுபோலத் துடித்தது. அவர் எதையும் கவனித்ததாகவே தெரியவில்லை. அவர் கண்களில் மெல்லமெல்ல ஒரு துக்கம் தேங்கி நின்றது. ஒருகணம் மூக்கை உறிஞ்சிக்கொண்டார். ”சரி விடுங்க முருகேசன், நாட்டுல இந்த மாதிரி இன்னிய தேதிக்கு மாசத்துக்கு ஒரு நூறு கொலயாச்சிம் நடக்குது. ஒன்னு ரெண்டுதான் பத்திரிகையில வருது. ஒன்னொன்னுக்கும் தலயில […]
பாவண்ணன் எண்பதுகளின் தொடக்கத்தில் நான் கர்நாடகத்துக்கு வந்தேன். பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஹோஸ்பெட் என்னும் இடத்தில் இயங்கிக்கொண்டிருந்த முகாமுக்குச் செல்லும்படி சொன்னது எங்கள் நிர்வாகம். அங்கே முகாம் பொறுப்பாளர் ஹோஸ்பெட்டிலிருந்து கொப்பள் என்னும் ஊர் வரைக்கும் முப்பத்திரண்டு கிலோமீட்டர் தொலைவுக்கு தொலைபேசிக் கேபிள் புதைக்கும் அணியில் சேர்ந்துகொள்ளும்படி சொன்னார். அபோது எங்கள் முகாமுக்கு அருகில் வாழ்ந்துவந்த பசவராஜ் என்பவர் எனக்கு நண்பரானார். வீட்டையொட்டி ஒரு சின்ன பகுதியில் தேநீர்க்கடை நடத்திவந்தார். தேனீ போலச் சுறுசுறுப்பானவர் அவர். எல்லா […]