This entry is part 5 of 14 in the series 12 ஜூன் 2022
1 ‘என்னங்க பேப்பர் பையன் காசு வாங்கிட்டுப் பொயிட்டான்’ ‘எவ்வளவு’ ‘எப்போதும்போலதான்’ ‘அது எப்புடி. போன மாதம் 10 நாள் பேப்பர் போடலியே. பேப்பர் போடவேணாம்னு சொல்லியிருந்தேனே. சபாபதியும் சரின்னு சொன்னாரே’ ‘மறந்துருப்பாருங்க’ நக்கீரன் உடன் சபாபதிக்கு தொலைபேசினார். ‘சார்’ ‘என்ன சபாபதி நல்லாயிருக்கீங்களா?’ ‘இருக்கேன் சார்’ ‘போன மாசம் தேதியெல்லாம் சொல்லி 10 நாள் பேப்பர் போடவேணாம்னு சொல்லியிருந்தேன். நீங்களும் சரின்னீங்க. பில்லு எப்போதும்போல குடுத்திருக்கீங்க’ ‘சாரி சார். பையன்ட சொல்ல மறந்துட்டேன். அவன் போட்ருப்பான்’ […]
பிரியா. திருமணம் முடிந்து கணவன் வீட்டுக்கு வந்த முதல் நாள். சேலை அவளுக்கு கொஞ்சம் அந்நியமானாலும், காஞ்சிபுரப் பட்டில் நுழைந்து கொண்டு திராட்சை விழிகள் உருள ஊஞ்சலில் அமர்ந்திருக்கிறாள். பட்டு அங்கங்கே லேசாக கிச்சுக்கிச்சு மூட்டுகிறது. பாதங்களில் மருதாணி ஓவியம். தங்கக் கொலுசு தெரிந்தது. ஊஞ்சல் லேசாக ஆடுகிறது. பெண் பார்க்க அக்கம் பக்கத்தினர் வந்துகொண்டிருந்தனர். தட்டில் சீனியும் பூவும் கொண்டு வந்தார்கள். தரையில் விரிக்கப்பட்ட ஜமுக்காளத்தில் அமர்ந்து விழிகளை மட்டும் உருட்டி பிரியாவை பார்ப்பது பிறகு […]
எனக்கு ஏழு வயதாகும் போதே அப்பா என்னை மலேயாவுக்கு கூட்டி வந்துவிட்டார். கோலாலம்பூரில் பெடாலிங் ஜெயாவுக்குப் பக்கத்தில் ஒரு கம்போங்கில் அப்பாவின் உணவுக்கடை. பெரிய இடம். பெரிய கழிவறை. கழிவறைக்கும் கடைக்கும் இடையே நீள அகலமான சிமெண்டுப் பெஞ்சுகள். அந்தப் பெஞ்சில்தான் அப்பா மதியம் இரண்டு மணி நேரம் தூங்குவார். அவைகள் நாலைந்து கடைகளின் உபயோகத்துக்காக இருந்த போதும் எங்களின் சொந்த உபயோகத்துக்கே அவைகள் பயன்பட்டன. சொற்பமான வாடகை. கம்போங்கில் உள்ள சில மலாய்ப் பெண்கள் எங்கள் […]
ஆர்யா. கட்டுமானத்துறையில் பொறியியல் பட்டம் பெற்ற புதுமுகம். வேலைச் சந்தைக்குள் நுழையுமுன் ஓர் அரசு வேலையை ஒப்பந்த அடிப்படையில் செய்ய ஆசைப்பட்டார். அறந்தாங்கி முக்கியச் சாலையிலிருந்து காட்டுப் பிராமண வயல் செல்லும் சாலையின் குறுக்கே சிமெண்ட் குழாய் பதிக்கும் வேலையை எடுத்தார். சிறிய வேலைதான். நுணுக்கமாகச் செய்தார். அவரிடம் வேலை பார்த்த ஒரு மூத்த தொழிலாளி சொன்னார். ‘திட்டமிட்டு கச்சிதமா முடிச்சுட்டீங்க தம்பீ’ வேலையை மேற்பார்வை யிடவந்த மேலதிகாரி ‘வெரிகுட்’ என்று குறிப்பு எழுதிவிட்டுச் சென்றார். காசு […]